Friday, 20 May 2016

'மீண்டு'ம் களமிறங்கும் நோக்கியா.!

ஒரு காலத்தில் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் வசம் கை மாறியதும் நோக்கியாவின் தாக்கம் குறைவாக இருந்தது. 

எனினும் நோக்கியா நலம் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அந்நிறுவனம் மீண்டும் சந்தையில் வர இருக்கும் செய்திகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

WcT8ZUt.jpg

மைக்ரோசாப்ட்

நோக்கியா பிரான்டினை தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கானிற்கு விற்பனை செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று (18/05/2016) தெரிவித்துள்ளது. 

WAnS2GH.jpg

மதிப்பு

பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் நோக்கியா பிரான்டினை சுமார் $350 மில்லியனிற்கு வாங்குகின்றது.

G8U0QcS.jpg

தயாரிப்பு

இதன் மூலம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியா பிரான்ட் பயன்படுத்தி பீச்சர் போன், ஸ்மார்ட்போன், மற்றும் டேப்ளெட் கருவிகளை தயாரிக்க முடியும். 

q71KWN5.jpg

லூமியா

2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா பிரான்ட் தவிர்த்து லூமியா மற்றும் விண்டோஸ் போன்களின் மீது அதிக கவனம் செலுத்தியது. 

koJwdIO.jpg

பீச்சர் போன்

ஸ்மார்ட்போன்களை தவிர்த்த போதும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா பிரான்டினை பீச்சர் போன்களுக்கு மட்டும் பயன்படுத்தி வந்தது.

YkHUy4m.jpg

மவுசு

மேற்கு பகுதிகளில் விற்பனை குறைந்த போதும் சர்வதேச அளவில் பீச்சர் போன்களுக்கான சந்தை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் கருவிகளை விட அதிகமாகவே இருக்கின்றது. 

ay2nBMi.jpg

விற்பனை

2015 ஆம் ஆண்டு பீச்சர் போன்களின் விற்பனை சர்வதேச அளவில் சுமார் 590 மில்லியன் வரை இருக்கும் என முன் அறிவிப்புகளில் எதிர்பார்க்கப்பட்டது, இது ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் பாதியாகும். 

4TCcpUf.jpg

கணிப்பு

மேலும் 2019 ஆம் ஆண்டுகளில் பீச்சர் போன்களின் விற்பனையானது சுமார் 350 மில்லியன் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment