நாம் அனைவரும் நன்கு அறிந்த ஹூண்டாய் கார் தயாரிப்பது மட்டுமின்றி பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகளிலும் ஈடுப்பட்டு வருகின்றது. இவ்வாறு அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் ஆய்வு குறித்த விரிவான தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
ஐயன் மேன்
ஹாலிவுட்டின் ஐயன் மேன் எனப்படும் இரும்பு மனிதன் படத்தில் வரும் இரும்பு கவச ஆடையினை அந்நிறுவனம் வடிவமைத்து தயாரித்தும் வருகின்றது.
பாதுகாப்பு
இந்த ஆடையின் முக்கிய குறிக்கோள் எக்சோஸ்கெலிட்டன் ஆகும். இதை அணிந்து கொண்டால் நம்மால் அதிக எடைகளை சுலபமாக தூக்க முடியும். மேலும் இது பணியாளர்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
எடை
அதிக எடையை சுமப்பது குறித்த கவலையின்றி சுலபமாக எத்தகையை எடையையும் தூக்க முடியும். இதை கொண்டு அதிக எடையை நீண்ட தூரத்திற்கு கடக்க முடியும்.
பயன்கள்
உலகெங்கும் இருக்கும் பல்வேறு நிறுவனங்களிலும் இந்த ஆடையை பயன்படுத்த முடியும். தயாரிப்பு ஆலை மட்டுமின்றி ராணுவம் மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்கும் இது உகந்ததாக இருக்கும்.
எச்-லெக்ஸ் மார்க் 2
எச்-லெக்ஸ் அதாவது ஹூண்டாய் லைஃப் கேரிங் எக்சோஸ்கெலிட்டன் வகையின் மேம்படுத்தப்பட்ட மாடல் தான் புதிய எச்-லெக்ஸ் மார்க் 2 ஆகும். இதை கொண்டு வயதில் மூத்தவர்கள் எளிமையாக நடக்க முடியும்.
ஆலைகள்
இவ்வகை ஆடைகளை கொண்டு தயாரிப்பு திறன் அதிகரிக்க முடியும் என்பதால் இவை உலகம் முழுக்க பயன்தரும் ஒன்றாக இருக்கும் என்றே கூற வேண்டும்.
No comments:
Post a Comment