Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Sunday, 12 June 2016

உலகில் அதிகம் விரும்பப்படும் மூன்றாவது

காமிக்ஸ் ஹீரோ-ஸ்பைடர்மேன்

Spider-Man-Marvel-Comics.jpg


கண் இமைக்கும் நேரத்துக்குள் ஒரு கட்டிடத்தின் மீது விறுவிறுவென சரளமாக ஏற முடியுமா? இரும்பைவிட உறுதியான வலையைக் கையில் இருந்து வெளியிட்டுக் கட்டிடங்களுக்கு இடையே தாவித் தாவி பறக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்ததால், உலகில் அதிகம் விரும்பப்படும் மூன்றாவது காமிக்ஸ் ஹீரோவாக இருக்கிறார் ஸ்பைடர்மேன்.

open-uri20150608-27674-zlh902_0530d760.p

பள்ளிப் படிப்பின் முடிவில் இருக்கும் டீன்ஏஜ் இளைஞர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களில் சிலர், சமூகத்தை எதிர்கொள்ளப் பயப்படும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதை மாற்ற உருவாக்கப்பட்ட முதல் காமிக்ஸ் ஹீரோ ஸ்பைடர்மேன்.


உருவான கதை


theamazingspiderman2004.jpg

தாய், தந்தையை இழந்து அத்தையுடன் வசிக்கும் பீட்டர் பார்க்கர், அறிவியல் ஆய்வகத்துக்கு ஸ்கூல் டூர் போகும்போது ஒரு கதிரியக்கச் சிலந்தியால் கடிபட்டுப் புதிய சக்திகளைப் பெறுகிறான். அசாதாரண உடல்வலிமையும், கேட்கும் திறனும் கிடைத்த பிறகு கையில் இருந்து வலைகளைச் செலுத்தும் கருவியை உருவாக்கி, அந்த வலைகள் மூலம் தாவித் தாவிப் பறக்கிறான் பீட்டர்.



நண்பர்கள்

Spider-Man%202.1.jpg

மே பீட்டர் பார்க்கரின் அத்தை மே, அவருக்கு எஞ்சியுள்ள ஒரே உறவு. இவரது வீட்டில்தான் பீட்டர் தங்கி இருக்கிறான். பீட்டர்தான் ஸ்பைடர்மேன் என்பது தெரியாமல், அவனுக்கு ஏன் இப்படிக் காயங்கள் ஏற்படுகின்றன? அவன் ஏன் விடியற்காலையில் அசந்து தூங்குகிறான் என அத்தை மேவுக்குக் குழப்பம் ஏற்படுவது உண்டு.



க்வென் ஸ்டேசி



பீட்டர் பார்க்கரின் பள்ளித் தோழி. இவரது தந்தைதான் நகரத்தின் காவல் தலைவர்.

ஹாரி ஆஸ்பர்ன்: பீட்டரின் பள்ளி தோழனான ஹாரி, விஞ்ஞானியான நார்மன் ஆஸ்பர்னின் மகன்.

மேரி ஜேன்

க்வென் ஸ்டேசியின் மறைவுக்குப் பிறகு, மேரிதான் பீட்டரின் உற்ற தோழி. நாடக நடிகையாவதை லட்சியமாகக் கொண்டவள்.

எதிரிகள்

3109292-945914_461720347250878_211074877


க்ரீன் கோப்ளின்: விஞ்ஞானி நார்மன் ஆஸ்பர்னின் மாற்றுருவே (Alter Ego) இந்த க்ரீன் கோப்ளின். தன்னுடைய திறமையான விஞ்ஞான மூளையை அழிவுசக்திக்குப் பயன்படுத்தும் இவரை ஸ்பைடர்மேன் ஒரு கட்டத்தில் அழித்துவிடுகிறான்.


க்ரீன் கோப்ளின் 2

தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரது மர்மத்தைக் கண்டறியும் ஹாரி, தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கத் தானும் ஒரு வில்லனாக உருவெடுக்கிறான். பீட்டர்தான் ஸ்பைடர்மேன் என்பது தெரிந்தவுடன் அவனைக் கொல்லத் துடிக்கும் ஹாரி, பின்னர் மனம் மாறிவிடுகிறான்.


டாக்டர் ஆக்டோபஸ்


மாபெரும் விஞ்ஞானியான டாக்டர் ஆக்டோபஸ், தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் இயந்திரக் கரங்களைப் பொருத்திக்கொண்டு மிகப் பெரும் வில்லனாக உருவெடுக்கிறார். இவருடைய இயந்திரக் கரங்கள் தானே சிந்திக்கும் திறன் பெற்றவை.

தமிழில் ஸ்பைடர்மேன்

spidey_2238991g.jpg

Spider-Man_India.jpg

ஆரம்பத்தில் குமுதம் இதழில் ஒரு பக்கக் கதையாக வெளியான ஸ்பைடர்மேன், பின்னர் கோத்தம் காமிக்ஸ் முயற்சியால் 'ஸ்பைடர்மேன் இந்தியா' என்று தனிக் கதை வரிசையாக வந்தது. அத்தொடருக்கான வரவேற்பு குறைய, மறுபடியும் மொழிமாற்றம் செய்யப்பட்ட கதைகளே வெளிவர ஆரம்பித்தன.


மாற்று ஊடகங்களில்

08-spider-man-2002.jpg

இளைஞர்கள் மத்தியில் ஸ்பைடர்மேன் அசாத்திய வெற்றி பெற்றதால் டிவி தொடர், கார்ட்டூன் தொடர், திரைப்பட வரிசை, நாடகங்கள் எனப் பல வகைகளில் ஸ்பைடர்மேன் கதைகள் வருகின்றன.

ஸ்பைடர்மேன் பொம்மைகள், வீடியோ கேம், கம்ப்யூட்டர் கதைகள், ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்கள் என்று உலகில் அதிகம் விரும்பப்படும் மூன்றாவது காமிக்ஸ் ஹீரோ ஸ்பைடர் மேன்தான் என்பதைப் பல வழிகளிலும் நிரூபிக்கிறார்.



ஸ்பைடர்மேன் இன்று:

spider-man-in-civil-war-174255.jpg

ஐக்கிய நாடுகளின் சமாதானத் தூதுவராக ஸ்பைடர்மேன் அறிவிக்கப்பட்டவுடன், உலகச் சமாதானத்துக்காகச் சிறப்பு காமிக்ஸ் கதைகள் வெளியிடப்பட்டன.
2009-ம் ஆண்டு பச்சோந்தி என்ற வில்லன் அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கடத்தி, தான் அமெரிக்க அதிபராக மாறி உலகைக் கைப்பற்ற நினைக்கிறான்.

அவனை ஸ்பைடர்மேனும் ஒபாமாவும் எதிர்கொண்ட காமிக்ஸ் லட்சக்கணக்கில் விற்றுச் சாதனை படைத்தது.

spiderman-624-1399044151.jpg

'With great power there must also come great responsibility' (சக்தி அதிகமாக இருந்தால் பொறுப்பும் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்) என்ற ஸ்பைடர்மேனின் வாசகம் உலக அளவில் புகழ்பெற்றது.

பெயர்: ஸ்பைடர்மேன்.

மற்ற பெயர்கள்: பீட்டர் பெஞ்சமின் பார்க்கர், அமேசிங் ஸ்பைடர்மேன்

உருவாக்கியவர்: ஸ்டான் லீ (கதாசிரியர்), ஸ்டீவ் டிக்டோ (ஓவியர்)

முதலில் தோன்றிய தேதி: ஜூன் 5, 1962 (ஆகஸ்ட் 1962 தேதியிட்ட அமேசிங் ஃபேன்டஸி 15-வது இதழில்). முதன்முறையாக ஒரு டீன்ஏஜ் இளைஞனை சூப்பர் ஹீரோவாகச் சித்திரித்து ஜெயித்தது ஸ்பைடர்மேன்தான்.

தொழில்: சட்டத்தின் பாதுகாவலர்

விசேஷச் சக்தி: கையிலிருந்து எஃக்கைவிட உறுதியான வலை பாயும். அசாத்தியமான கேட்கும் திறன். சிலந்தியைப் போலக் கட்டிடங்களின் மீது சுலபமாக ஏறும் தன்மை. காயங்கள் வேகமாக ஆறும் தன்மை.
0

Monday, 6 June 2016


It's been claimed about the photograph that it is of a group of girls from Kerala and these girls are wearing lungis to protest a ban on jeans imposed by in colleges. THIS NEWS FAKE. 
Image is genuine 
The viral photograph showing girls wearing lungis is GENUINE.
0

Wednesday, 25 May 2016

லட்சக்கணக்கில் கொள்ளையடித்து போலீசில் சிக்கிய பெண் லட்சணமாக இருந்ததால் மாடல் ஆகிவிட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆகவேண்டும்.இளம் பதின் வயது கும்பலை வைத்துக் கொண்டு கனடாவில் பல வீடுகளில் புகுந்து சரமாரியாக கொள்ளையடித்து தப்பியவர் தான் இந்த ஸ்டீபன் ப்யூடோயன்.
இவரது முகநூலில் இருந்து லீக்கான புகைப்படம் சர்வதேச நாளிதழில் வெளியாகி இவருக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இவரது பிகினி புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து பல ஆன்லைன் தளங்களில் தலைப்பு செய்தியாக மாறிவிட்டது..


சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி! 27
ஸ்டீபன் ப்யூடோயன் 
(Stéphanie Beaudoin) ஸ்டீபன் ப்யூடோயன் தான் இப்போது உலகின் ஹாட்டான கிரிமினல் மாடல் என்ற பெயர் பெற்று திகழ்கிறார். உலகமகா கேடியான இந்த ஸ்டீபன் ப்யூடோயன் வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் சிறையில் இருந்தால் போதுமென நீதிமன்றம் கூறிவிட்டது. மற்ற நாட்களில் இவர் காண்டிராக்ட் முறையில் மாடலிங் செய்துக் கொள்ளலாம்.

27-1456573490-20worldshottestcriminalmod

சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி! 

2014 -ம் ஆண்டு கைது

27-1456573399-3worldshottestcriminalmode


கடந்த 2014-ம் ஆண்டு உலகின் டீனேஜ் திருடர்களின் லீடர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டார். இவர் 39 வீடுகளை உடைத்து பொருளாகவும், பணமாகவும் 41,667 யூரோக்கள் கொள்ளையடித்துள்ளார்.

சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி! 


கேடி டூ மாடலிங்

27-1456573388-1worldshottestcriminalmode

தனது 21வது வயதில் இந்த மூளைக்கார பெண்ணின் பிகினி புகைப்படம் ஒரு உலக முன்னணி நாளிதழ் வெளிவந்ததால். பெரும் புகழ்பெற்றது மட்டுமின்றி உலகின் ஹாட்டான கிரிமினல் மாடல் என்ற பட்டப்பெயர் கிடைத்துள்ளது.

  சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி! 

முகநூலில் கலக்கும் ஸ்டீபன்

27-1456573393-2worldshottestcriminalmode

ப்யூடோயன் இவரது பெயரில் பல முகநூல் பக்கங்கள், முகவரிகள் முகநூலில் உலாவிக் கொண்டிருக்கிறது. முகநூலில் சமீபத்திய வைரல் இவரது புகைப்படங்கள் தான்.
  சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி!


திங்கள் முதல் வெள்ளி வரை

27-1456573415-6worldshottestcriminalmode

இந்த வார தீர்ப்பில், இவர் வார இறுதியில் மட்டும் சிறையில் இருக்க வேண்டும் என்றும். திங்கள் முதல் வெள்ளி வரை சுதந்திரமாக வெளியில் சென்று மாடலிங் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி! 

இரண்டு மாதத்தில்

27-1456573420-7worldshottestcriminalmode



கடந்த ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 5, 2014 வரையில் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவர் 30 வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்துள்ளார். ஏறத்தாழ ஆயிரக்கணக்கான பவுண்ட்ஸ் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தை திருடியுள்ளார்.
சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி! 


மிட்சுபிஷி லான்சர்

27-1456573425-8worldshottestcriminalmode

இவரது ட்ரேட்மார்க் காரான பிங்க் நிற ரிம் கொண்ட மிட்சுபிஷி லான்சரை வைத்து தான் போலீசார் இவரை பிடித்துள்ளனர்.

சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி!


முகநூல் புகைப்படங்கள்

27-1456573441-11worldshottestcriminalmod


இவர் போலீசில் பிடிப்பட்ட உடனேயே இவரது முகநூலை முடக்க ஓர் முன்னாள் நர்ஸ் மாணவி கேட்டுக் கொண்டார். ஆனால், இவர் காவல் நிலையம் சென்றடைவதற்குள் முகநூல் முழுக்க பரவி வைரல் ஆகிவிட்டது.

 சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி! 


சர்வதேச புகழ்

stef.jpg

இவரது புகைப்படங்கள் சில சர்வதேச அளவில் தலைப்புகளில் வந்து புகழ் பெற ஆரம்பித்தன. இதனால் கடந்த 2015 செப்டம்பர் மாதம் பி மாடல் நிர்வாகம் இவரை தங்களது மாடலாக தேர்வு செய்தது.

stef  சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி!

செக்சி தீஃப்

27-1456573451-13worldshottestcriminalmod


நீதிபதி “செக்ஸி தீஃப்” எனும் பெயரை ஸ்டீபன் ப்யூடோயன் பயன்படுத்தக் கூடாது என்றும், மேலும் இவரது குற்ற செயல்களை எந்த வகையிலும் ஊக்குவிக்கும் படியாக வெளிப்படுத்த கூடாது என்றும் கூறியிருக்கிறார்.


சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி! 


ஸ்டீபன் ப்யூடோயனின் வழக்கறிஞர்

27-1456573457-14worldshottestcriminalmod

இதுக்குறித்து ஸ்டீபன் ப்யூடோயனின் வழக்கறிஞர் கூறுகையில், “ஸ்டீபன் ப்யூடோயன்-க்கு இதுவொரு நல்ல வாய்ப்பு. வார இறுதியில் சிறைக்கு வரும் போது நல்ல புத்தகத்துடன் வந்து படித்து முடித்துவிட்டு, வார நாட்களில் மாடலிங் செய்யட்டும். இது இவரது வாழ்க்கையை மாற்ற உதவும்.” என கூறியிருக்கிறார்.
சிறையில் இருந்த திருடி செக்ஸியாக இருந்ததால் மாடலிங் செய்ய அனுமதித்த நீதிபதி!
 
ஸ்டீபன் ப்யூடோயன் கருத்து


“ஸ்டீபன் ப்யூடோயன் என்ற பெயரிலேயே நான் மாடலிங் செய்ய விரும்புகிறேன். சருமநலப் பொருட்களுக்கு மாடலிங் செய்யலாம் என கருதுகிறேன். ஆனால், சில பிராண்டுகள் என்னை “ஸ்டீபன் தி கிரிமினல்” என அழைக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நான் அதை பொருட்படுத்த விரும்பவில்லை” என கூறியுள்ளார்.
0