விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் ஏலியன் எனப்படும் வேற்றுகரக வாச தேடலில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் பூமியை போன்ற வாழும் சூழல் கொண்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டிராப்பிஸ்ட்-1 பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் வியாழன் அளவு இருக்கும் பொருள் ஆகும். அவ்வளவு எளிதாக கண்களில் தெரியாத டிராப்பிஸ்ட்-1 வெப்பம் 2,400º செல்ஷியஸ் ஆகும். பூமியை பொருத்த இது அதிகப்படியான எனலாம், ஆனால் நட்சத்திர தரத்தை பொருத்த வரை இது மிகவும் குளுமையான ஒன்று என குறிப்பிடப்படுகின்றது.
மூன்று கிரகங்கள்
சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி டிராப்பிஸ்ட்-1 வட்டப்பாதையில் மொத்தம் மூன்று கிரகங்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
சூழ்நிலை
இந்த கிரகங்களின் சூழ்நிலையானது பூமியை போன்ற வாழ்க்கையை அனுமதிப்பதோடு பூமியை போன்றே அங்கும் வாழ்க்கை இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆய்வு
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம், பெல்ஜியத்தின் லெய்க் பல்கலைக்கழத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சிலியில் இருக்கும் 60 செமீ தொலைநோக்கி மூலம் விரிவான கண்கானிப்பு துவங்கியது.
பெயர்
இந்த தொலைநோக்கியானது TRAnsiting Planets and Planetesimals Small Telescope என அழைக்கப்படுகின்றது. இதில் இருந்தே டிராப்பிஸ்ட் என்ற பெயர் சூட்டப்பட்டது.
வழிமுறை
வெளி கோள்களை கண்டுபிடிக்கும் பொதுவான வழிமுறையானது தொலைநோக்கியை சரியான பாதையில் பொருத்தவது ஆகும். அதாவது கிரகங்கள் சுற்றி வரும் போது நட்சத்திரங்களுக்கிடையே சிறிய அளவு ஒளி சிமிட்டல் ஏற்படும் நேரத்தில் அதனிடையே தெரிவதற்கு ஏற்ப பொருத்தப்பட வேண்டும்.
வடிவமைப்பு
இதற்கென பிரத்யேக கருவிகளை கொண்டு தொலைநோக்கியை வடிவமைக்க வேண்டும் என ஜூலியன் டீ விட் என்ற ஆய்வாளர் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
இன்ஃப்ரா ரெட்
டிராப்பிஸ்ட்-1 குறித்து ஆய்வுகளில் சாதாரணமாக இல்லாமல் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரம் மூலம் ஆய்வு செய்தால் எதையேனும் கற்று கொள்ள முடியும் என ஆய்வு குழு அதிக சிரமம் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
ஆய்வு
இந்த தொலைநோக்கி மொத்தமாக 254 மணி நேரம், அதாவது 62 இரவுகள் ஆய்வு செய்தது. இன்ஃப்ரா ரெட் சிக்னல்களில் மின்மினிப்புகள் இருந்ததால் பூமியை போன்ற அளவில், குறைந்த பட்சம் மூன்று கிரகங்கள் இருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.
சுற்றுவட்டபாதை
மூன்று கிரகங்களில் இரண்டு கிரகங்கள் ஒவ்வொரு 1.5 அல்லது 2.4 நாட்களில் ஒரு முறை சுற்று வட்டபாதையில் சுற்றி வருவதாகவும் தனியே இருக்கும் கிரகமானது 73 நாட்கள் எடுத்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகாமை
பூமியில் இருந்து சூரியன் இருக்கும் தூரத்தை விட இந்த கிரகங்கள் டிராப்பிஸ்ட்-1'உடன் மிகவும் அருகாமையில் இருக்கின்றது. இதே சூழல் பூமியில் நிலவும் போது பூமியின் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும்.
அண்மை
டிராப்பிஸ்ட்-1 உடன் இரு கிரகங்களின் அண்மை நிலை சீராக இருப்பதால் பகல் நேரத்தில் அதிக வெப்பமாகவும், இரவு நேரத்தில் அதிக குளிர்ச்சியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலம்
பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் தற்சமயம் வரை இத்தகைய தூரத்தை கடக்க விண்கலம் பூமியில் தயாரிக்கப்படவில்லை.
ஆய்வு
இத்தகைய கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளதால், உலகெங்கும் இருந்தும் தொலைநோக்கிகளின் மூலம் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகளை செய்து இவை குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இதில் வேற்றுகிரக வாசம் குறித்த சுவார்ஸ்ய தகவல்களும் நிச்சயம் எதிர்பார்க்க முடியும்.
No comments:
Post a Comment