Friday, 13 May 2016

மைக் டைசன் வீடியோவில் டைம் டிராவல்லர்.!

காலப்பயணம் உண்மையோ, பொய்யோ தெரியாது ஆனால் இதனை விளக்கும் ஆதாரங்களாக இணையத்தில் வெளியாகும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் தினந்தினம் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது.

சமீபத்தில் நம்மிடையே அதிக பிரபலமாகி வரும் காலப்பயணம் உண்மையில் சாத்தியமா என்று அதிகம் யோசிக்காமல், இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள். இதில் காலப்பயணி ஒருவர் இருப்பதாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. 

xviq6G0.jpg

வீடியோ

1995 ஆம் ஆண்டு மைக் டைசன் மற்றும் பீட்டர் மெக்நீலியிடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

டைம் டிராவலர்

இந்த வீடியோவில் பார்வையாளர் ஒருவர் 21 ஆம் நூற்றாண்டின் கேமரா போன் ஒன்றை வைத்து போட்டியை புகைப்படம் எடுப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 

Rvnwy2m.jpg

சதியாலோசனை கோட்பாடு

சதியாலோசனை கோட்பாட்டாளர்களின் மத்தியில் இந்த வீடியோ காலப்பயணத்திற்கான ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. 

AgdtQMC.jpg

ஆதாரம்

1995களில் கேமரா போன்கள் பயன்பாட்டில் இல்லாததால் இந்த வீடியோ காலப்பயணத்திற்கான ஆதாரமாக கருதப்படுகின்றது. 

QmVgTo3.jpg

பதிவேற்றம்

இந்த வீடியோவானது செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு யூட்யூபில் முதல் முறை பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

லாஸ் வேகாஸ்

லாஸ் வேகாஸ் நகரில் 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 19 ஆம் தேதி மைக் டைசன் மற்றும் பீட்டர் மெக்நீலியிடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பார்வையாளர் ஒருவர் கையில் கேமரா போன் வைத்திருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. 

jq04izo.jpg

பரபரப்பு

யூட்யூபில் தற்சமயம் வரை சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கும் இந்த வீடியோ தற்சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

HfpKSPR.jpg

விளக்கம்

மேலும் 1995 ஆம் ஆண்டு மக்களுக்கு சற்றும் அறிமுகமில்லாத கேமரா போன் எப்படி பார்வையளரிடம் வந்தது என்பதற்கு சரியான விளக்கம் அளிக்க சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

வீடியோ

இந்த வீடியோ மற்றும் அதில் காணப்படும் மர்ம மனிதர் குறித்து எவ்வித விளக்கமும் இது வரை அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 



No comments:

Post a Comment