Tuesday, 12 April 2016

1859 ஆம் ஆண்டு நிகழ்ந்த சூரிய புயல் 'மீண்டும்' நடந்தால், மீள்வது மிகவும் கடினம்

எப்போது சூரியனின் மேற்பரப்பு வெடித்து, ஒரு சக்தி வாய்ந்த ஜியோமேக்னடிக் சூரியப்புயல் (geomagnetic solar storm)உருவாகி எப்போது பூமியை தாக்கும் என்பதற்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை.

இது போன்ற தருணங்களில், 1859 ஆம் ஆண்டு நிகழ்ந்த சூரிய புயல் ஆனது பூமியின் காந்தப்புலம்தனை தாக்கி தந்தி அமைப்புகளை இயக்குபவர்களின் மீது மின்சாரம் பாய்ச்சியது மட்டுமின்றி அமெரிக்க மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள தந்தி அமைப்புகளை 'உடைத்து எரிந்தது'. இச்சூரியப்புயலே பூமியினைத் தாக்கிய மிகப்பெரிய புவிக்காந்தப்புயல் ஆகும். இதனை ஹரிங்டன் நிகழ்வு என்றும் கூறுவார்கள். 

oKDOvQ8.jpg

பெரிய அளவிலான தாக்குதல் :

மீண்டும் இது போன்ற சூரியப்புயல் தாக்குதல் நிகழ்த்தப் படலாம் என்றும் இம்முறை மிகவும் பெரிய அளவிலான தாக்குதல்களை நாம் சந்திக்க நேரலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

UP8nqqg.jpg

பாதிக்கப்படும் :

அதாவது, பூமியின் ஒட்டுமொத்த தொடர்பு சாதனங்களும் பாதிக்கப்படும். செயற்கைகோள்கள், ஜிபிஎஸ், தொலைபேசிகள், இன்டர்நெட், விமான பயணம் என அனைத்தும் பாதிக்கப்படும். 

TCI1mGn.jpg

இருண்ட காலம் :

அதாவது தொழில்நுட்ப அடிப்படையில் மீண்டும் இருண்ட காலத்திற்கே (Dark Ages) நம்மை எல்லாம் திருப்பி அனுப்பும் அளவிலான சூரிய புயல் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

aPMZyC1.jpg

ஆண்டுகள் வரை ஆகும் :

சூரிய புயல் பூமியை தாக்கினால், கற்பனைக்கு எட்டாத அளவிலான பெரிய பேரழிவுகளோ அல்லது மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளோ ஏற்படாது என்கிற போதிலும் பூமி முழுக்க இருக்கும் தொடர்பு கருவிகளுக்கும், தினம் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கும் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள மாத கணக்கில் தொடங்கி ஆண்டுகள் வரை ஆகும். 

DzGmBj2.jpg

வல்லமை :

தொழில்நுட்ப பாதிப்புகளை மட்டுமின்றி தண்ணீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அழிப்பு, சேமிக்கப்பட்ட தரவுகளை அழித்தல், கம்ப்யூட்டர் மெமரிகளை அழித்தல் போன்றவைகளையும் சூரியப்புயல் நிகழ்த்தும் வல்லமை கொண்டது.

uEhOBoQ.jpg

விண்வெளி வீரர்கள் :

உடன் பாதுக்காப்பான காந்தப்புலம் இல்லாத விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்கள் சூரிய்ப்புயல் மூலம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

QnuX4vR.jpg

நிதி :

பாதிப்பிற்கான செலவு மற்றும் நிதி கண்ணோட்டத்தில் பார்க்கும் போது சுமார் 600 பில்லியன் டாலர்களில் இருந்து 2.6 ட்ரில்லியன் டாலர்கள் வரையிலாக சூரிய புயல் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

4WQFxy9.jpg

வாய்ப்பு :

இதுபோன்ற சூரியப்புயல் தாக்குதலையும் அதன் பாதிப்புகளையும் கேட்கும் போது சற்று அச்சுறுத்தலாக இருப்பினும் கூட சூரியப்புயல் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகபட்சம் இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

6Ab8uE3.jpg

உயர்ந்த அளவிலான தாக்கம் :

சூரியப்புயல் தாக்குதலுக்கான வாய்ப்பு ஹை லெவலில் இல்லை என்பது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் மீறி நிகழும்போது உயர்ந்த அளவிலான தாக்கம் நிகழும் என்பதும் (low probability but high-impact event) குறிப்பிடத்தக்கது. 

T24EBdo.jpg

நாசா :

இதன் காரணமாக, கற்பனிக்கு எட்டாத நிகழ்வு ஏதேனும் நிகழ்ந்தால் தயாராக இருக்கும் படியாக விண்வெளி வானிலை நிபுணர்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் நாசா, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், மத்திய அவசரகால நிர்வாக அமைப்பு ஆகிய பிற அமெரிக்க ஏஜென்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கின்றனர். 

No comments:

Post a Comment