Tuesday, 12 April 2016

வருகிறார் லாரா கிராப்ட் வார்னெர் ப்ரோ'ஸ் ரீபூட்

வருகிறார் லாரா கிராப்ட் வார்னெர் ப்ரோ'ஸ் ரீபூட்


k5t0zclujius9k8id4w0.png


ரீமேக், ரீபூட் என்ற பெயர்களில் பழைய படங்களை மீண்டும் மீண்டும் எடுத்துக் கொண்டேயிருக்கிறது ஹாலிவுட். அந்த வரிசையில், லாரா கிராப்ட் - டாம் ரைடர் திரைப்படத்தையும் ரீபூட் செய்கின்றனர்.



லாரா கிராப்ட் - டாம் ரைடர் திரைப்படம் 2001 -இல் வெளியானது. லாரா கிராப்டாக ஏஞ்சலினா ஜோலி நடித்திருந்தார்.

அவரை ஆக்ஷன் நாயகியாக்கியது இந்தப் படம். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 274.70 மில்லியன் டாலர்களை வசூலித்தது. 2003 -இல் இரண்டாம் பாகம், லாரா கிராப்ட் டாம் ரைடர் - த கிராடில் ஆஃப் லைஃப் வெளியானது. முதல் பாகம் அளவுக்கு படம் போகவில்லை என்றாலும் முதலுக்கு மோசமில்லை.

வெளியான அனைத்து வீடியோ கேம்ஸ்ம் சக்கை போடுபோட்டது குறிப்பிடதக்கது..
2015TombRaider_Press_1_131115.hero.jpg
இப்போது முதல் பாகத்தை ரீபூட் செய்கின்றனர். ஏஞ்சலினா ஜோலி நடித்த லாரா கிராப்ட் வேடத்தில் டெய்சி ரிட்லி நடிக்க உள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ஸ்டார் வார்ஸ் - த ஃபோர்ஸ் அவேகன்ஸ் திரைப்படத்தில் நடித்தவர்.

No comments:

Post a Comment