Saturday, 16 April 2016

விரைவில் இந்தியா வரும் அல்ட்ரா பிக்சல் ஸ்மார்ட்போன்.!

தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான எச்டிசி தனது ப்ரீமியம் ஸ்மார்ட்போன் கருவியை விரைவில் இந்தியாவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

'குளோபல் ஃப்ளாக்ஷிப்' கருவியான எச்டிசி 10 கருவியை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கின்றோம். இது குறித்த விரிவான தகவல் மற்றும் வெளியீடு தேதி சார்ந்த முழு தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்' என எச்டிசி நிறுவனத்தின் தெற்கு ஆசிய தலைவர் ஃபைசல் சித்திக்வி தெரிவித்துள்ளார். 

சிறப்பம்சங்களை பொருத்த வரை எச்டிசி 10 கருவியில் 5.2 இன்ச் திரை, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக மெமரியை 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் பேட்டரி, ஹோம் ஸ்கிரீனினை மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு ஆப்பிள் மற்றம் சாம்சங் கருவிகளை போன்றே 5 எம்பி செல்பீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment