Tuesday, 12 April 2016

அமெரிக்காவின் சிஐஏ : திருட்டு பயலுகளுக்கு ஏற்ற 'திருடன்' தான்..!

சிஐஏ எனப்படும் சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் ஏஜென்சி (Central Intelligence Agency - CIA) என்பது அமெரிக்காவின் முக்கியமான உளவு நிறுவனம் ஆகும். அந்நிறுவனத்தின் கீழ் உளவு வேலை பார்த்த, சிஐஏ வரலாறு முழுக்க பயன்படுத்திய சுமார் 20000 உளவு கருவிகளில் 600 கருவிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அவைகளில் மிகவும் தெளிவான சில உளவு கருவிகளை பார்க்கும் போது சிஐஏ உளவு நிறுவனம் ஆனது 'திருடனுக்கு ஏற்ற சரியான திருடன் தான்' என்பது உறுதியாகிறது..! 

zRjzqak.jpg

ஸ்பை #1 : ஸ்மோக் பைப் உள்ளே ரேடியோ : 

1960-களில் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஸ்மோக் பைப்களுக்குள் ரேடியோ ரிசீவர் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. 

Jnqpak4.jpg

ஸ்பை #2 : சிகெரெட் பாக்கெட்டுக்குள் பொருந்தும் கேமிரா : 

வெறும் 35 எம்எம் பிலிம் கொண்ட இந்த கேமிரா பார்லியாமென்ட்ஸ் சிகெரெட் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. 1960 களில் இது தான் மிகவும் சிறிய கேமிரா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

DJH2J9s.jpg

ஸ்பை #3 : கேரியர் புறா : 

இரண்டாம் உலகப்போரின் போது புறாக்களின் உடலில் லைட் வெயிட் கேமிராக்கள் பொருத்தப்பட்டு பறக்க விடப்பட்டு நூற்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. விமானங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டிலும் புறாக்கள் எடுத்தவைகள் மிகவும் தெளிவானதாக இருந்ததாம். 

ITWz5u4.jpg

ஸ்பை #4 : இன்செக்ட்டோதொப்பர் : 

மினி என்ஜின் மூலம் சுமார் 60 நொடிகள், 750 அடி தூரம் வரை பறக்க கூடிய இந்த இன்செக்ட்டோதொப்பர், ஒரு மைக்ரோபோன் உள்ளடக்கிய போலியான தட்டாரப்பூச்சி (Dragon Fly) ஆகும். 

As4tvIh.jpg

ஸ்பை #5 : டெட் ட்ராப் ஸ்பைக் : 

இன்றும் உளவாளிகள் தொடர்பு கொள்வது சிக்கலான ஒன்று தான். 1960-களில் குறிப்பிட்ட இடத்தில் வேறொரு உலவாளிக்காக வீசப்படும் இவ்வகை டெட் ட்ராப்-க்குள் தகவல்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்குமாம். 

4RaPuW6.jpg

ஸ்பை #6 : அழையாது நுழைபவரை கண்டறியும் சாதனம் : 

மண் தரையோடு மறைந்து கிடக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கண்டறியும் சாதனம் ஆனது 1000 அடிகளுக்கு அப்பால் வரு எதிரியை கூட சுட்டிக்காட்டும் என்பதும் இவ்வகை உளவு கருவியானது பனிப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

WNpskjL.jpg

ஸ்பை #7 : குறியீட்டு காம்ப்பேக்டர் :

முகம் பார்க்கும் சிறிய கண்ணாடியான இதை மிகவும் துல்லியமான கோணத்தில் வைத்து காணும் போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குறியீடு வெளியாகும்..! 

FAUhvc5.jpg

ஸ்பை #8 : லென்சாட்டிக் காம்பஸ் :

வழக்கமான காம்பஸ் போல் இல்லாது, இதன் பின் புறத்தில் மேக்னிபையிங் லென்ஸ்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளன ஆகையால் மிகவும் துல்லியமான முறையில் இது இயங்கும். 1950-களில் இருந்து அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ZWcgpDx.jpg

ஸ்பை #9 : சார்லீ - ரோபோட் மீன் : 

1960-களில் உருவாக்கப்பட்ட ரோபோட் மீன் சார்லீ, எதிரி கப்பல்களில் இருந்து வரும் அண்டர் வாட்டர் சிக்னல்களை உளவு பார்த்தது.

UdFIAk6.jpg


ஸ்பை #10 : கையடக்க ட்ரில்லர் : 

சுவர்களில் எளிமையாக துளையிட்டு அதில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை திணிக்க உதவிய கருவிதான் இந்த ஹாண்ட் க்ரான்க் ட்ரில்லர்..!

wLJmh6x.jpg

ஸ்பை #11 : வெற்று 'வெள்ளி டாலர்' : 

பார்க்க சாதாரண வெள்ளி நாணயம் போல் தெரியும், இதற்குள் வெற்று இடம் இருக்கும் அதனுள் தகவல்களை சேமித்து உளவு பார்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment