Showing posts with label US. Show all posts
Showing posts with label US. Show all posts

Sunday, 24 April 2016

1959-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 (Luna 2) விண்கலம் தான் நிலவை சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாகும். அதன் பின்பு சரியாக 10 ஆண்டுகள் கழித்து, அதாவது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலமானது மனிதர்களை நிலவில் தரை இறக்கியது, பின்பு ஜூலை 24, 1969ல் அப்போலோ 11 பூமிக்கு திரும்பியது - இதுதான் நாம் அறிந்த 'மூன் லேண்டிங்' வரலாறு..! 

இந்த குறிப்பிட்ட வரலாறு அதாவது, அமெரிக்கா நிலவுக்கு போன சம்பவம் ஆனது முழுக்க முழுக்க ஒரு நாடகம், ஒரு போலியான கதை என்றும் அமெரிக்கா நிலவிற்கு போகவே இல்லை என்றும் இன்றுவரையிலாக பெரும்பாலானோர்களால் நம்பப்படுகிறது. அதற்கு ஏகப்பட்ட பலமான ஆதரங்களும், சதியாலோசனை கோட்பாடுகளும் உண்டு. அவைகளை மேலும் பலப்படுத்தும் வண்ணம் அதிரடியான ஆதாரம் ஒன்றை சீனா அம்பலப் படுத்தியுள்ளது..! 

w5Ul374.jpg

பெய்ஜிங் டெய்லி எக்ஸ்பிரஸ் :

அமெரிக்காவின் அப்போலோ 11 மூன் லேண்டிங் ஆனது முழுக்க முழுக்க ஒரு போலியான சம்பவம் என்று சீன விண்வெளி திட்டம் உயர் அதிகாரிகள் பெய்ஜிங் டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கைகு பெட்டி அளித்துள்ளனர். 

TiW1xEU.jpg

'அடையாளமே' இல்லை :

அதாவது அமெரிக்கா நிலவிற்கு வந்ததற்கான எந்த விதமான 'அடையாளமுமே' அங்கு இல்லை என்பது சீன லூனார் ரோவர் (Lunar Rover) ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

uUgZh4b.jpg

விளக்கம் கேட்டு மனு :

அமெரிக்க அரசாங்கத்திடமும், நாசாவிடமும் நிலவில் இறங்கியதற்க்கான துல்லியமான விளக்கம் கேட்டு மனு ஒன்றில் 200 சீன விண்வெளி மையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளன. 

62xuy1s.jpg

கட்டாயத்தில் அமெரிக்கா :

தாங்கள் நிலவில் கால் தடம் பதித்தது போலியான நிகழ்வு இல்லை என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கிறது என்றும் சீன விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

UeqZhLV.jpg

குற்றச்சாட்டு :

சீனாவின் லூனார் ரோவர் மூலம் கிடைக்கபெற்ற நிலவு புகைப்படங்களை வைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

tRAwGnh.jpg

வரலாறு கூறுவது போல :

சீன லூனார் ரோவர் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து, அங்கு வரலாறு கூறுவது போல அமெரிக்கா தரை இறங்கியதற்கான எந்த விதமான அடையாளமும் இல்லை என்பதை சீனா உறுதி செய்துள்ளது. 

Nt6ai0j.jpg

யூட்டு விண்கலம் :

நிலவில் இருந்து புகைப்படங்களை அனுப்பியது யூட்டு (Yutu) விண்கலம் என்பதும் இது 2013-ஆம் ஆண்டு நிலவில் தரை இறங்கியது என்பதும் குறிபிடத்தக்கது. 

5hvxmEy.jpg

ரஷ்ய விண்வெளி :

உலக புகழ்பெற்ற ரஷ்ய அணு பொறியாளர் யூரி இக்னாட்யெவிச் முக்ஹின் (Yuri Ignatyevich Mukhin) உட்பட மேலும் பல ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிகளும் அமெரிக்க விளக்கத்திற்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். 

KBKrEIl.jpg

விண்வெளி போட்டி :

இந்த விடயத்தில் ரஷ்ய அரசாங்கமானது, 1970 -ஆம் ஆண்டில் இருந்தே பெரிய அளவிலான ஆர்வத்தை காட்டி வருகிறது. ஏனெனில், அந்த காலகட்டத்தில் யார் முதலில் நிலவை அடைவது என்ற விண்வெளி போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றது அமெரிக்கா தான்..! 

0

Tuesday, 12 April 2016

சிஐஏ எனப்படும் சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் ஏஜென்சி (Central Intelligence Agency - CIA) என்பது அமெரிக்காவின் முக்கியமான உளவு நிறுவனம் ஆகும். அந்நிறுவனத்தின் கீழ் உளவு வேலை பார்த்த, சிஐஏ வரலாறு முழுக்க பயன்படுத்திய சுமார் 20000 உளவு கருவிகளில் 600 கருவிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அவைகளில் மிகவும் தெளிவான சில உளவு கருவிகளை பார்க்கும் போது சிஐஏ உளவு நிறுவனம் ஆனது 'திருடனுக்கு ஏற்ற சரியான திருடன் தான்' என்பது உறுதியாகிறது..! 

zRjzqak.jpg

ஸ்பை #1 : ஸ்மோக் பைப் உள்ளே ரேடியோ : 

1960-களில் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஸ்மோக் பைப்களுக்குள் ரேடியோ ரிசீவர் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. 

Jnqpak4.jpg

ஸ்பை #2 : சிகெரெட் பாக்கெட்டுக்குள் பொருந்தும் கேமிரா : 

வெறும் 35 எம்எம் பிலிம் கொண்ட இந்த கேமிரா பார்லியாமென்ட்ஸ் சிகெரெட் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. 1960 களில் இது தான் மிகவும் சிறிய கேமிரா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

DJH2J9s.jpg

ஸ்பை #3 : கேரியர் புறா : 

இரண்டாம் உலகப்போரின் போது புறாக்களின் உடலில் லைட் வெயிட் கேமிராக்கள் பொருத்தப்பட்டு பறக்க விடப்பட்டு நூற்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. விமானங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டிலும் புறாக்கள் எடுத்தவைகள் மிகவும் தெளிவானதாக இருந்ததாம். 

ITWz5u4.jpg

ஸ்பை #4 : இன்செக்ட்டோதொப்பர் : 

மினி என்ஜின் மூலம் சுமார் 60 நொடிகள், 750 அடி தூரம் வரை பறக்க கூடிய இந்த இன்செக்ட்டோதொப்பர், ஒரு மைக்ரோபோன் உள்ளடக்கிய போலியான தட்டாரப்பூச்சி (Dragon Fly) ஆகும். 

As4tvIh.jpg

ஸ்பை #5 : டெட் ட்ராப் ஸ்பைக் : 

இன்றும் உளவாளிகள் தொடர்பு கொள்வது சிக்கலான ஒன்று தான். 1960-களில் குறிப்பிட்ட இடத்தில் வேறொரு உலவாளிக்காக வீசப்படும் இவ்வகை டெட் ட்ராப்-க்குள் தகவல்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்குமாம். 

4RaPuW6.jpg

ஸ்பை #6 : அழையாது நுழைபவரை கண்டறியும் சாதனம் : 

மண் தரையோடு மறைந்து கிடக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கண்டறியும் சாதனம் ஆனது 1000 அடிகளுக்கு அப்பால் வரு எதிரியை கூட சுட்டிக்காட்டும் என்பதும் இவ்வகை உளவு கருவியானது பனிப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

WNpskjL.jpg

ஸ்பை #7 : குறியீட்டு காம்ப்பேக்டர் :

முகம் பார்க்கும் சிறிய கண்ணாடியான இதை மிகவும் துல்லியமான கோணத்தில் வைத்து காணும் போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குறியீடு வெளியாகும்..! 

FAUhvc5.jpg

ஸ்பை #8 : லென்சாட்டிக் காம்பஸ் :

வழக்கமான காம்பஸ் போல் இல்லாது, இதன் பின் புறத்தில் மேக்னிபையிங் லென்ஸ்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளன ஆகையால் மிகவும் துல்லியமான முறையில் இது இயங்கும். 1950-களில் இருந்து அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ZWcgpDx.jpg

ஸ்பை #9 : சார்லீ - ரோபோட் மீன் : 

1960-களில் உருவாக்கப்பட்ட ரோபோட் மீன் சார்லீ, எதிரி கப்பல்களில் இருந்து வரும் அண்டர் வாட்டர் சிக்னல்களை உளவு பார்த்தது.

UdFIAk6.jpg


ஸ்பை #10 : கையடக்க ட்ரில்லர் : 

சுவர்களில் எளிமையாக துளையிட்டு அதில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை திணிக்க உதவிய கருவிதான் இந்த ஹாண்ட் க்ரான்க் ட்ரில்லர்..!

wLJmh6x.jpg

ஸ்பை #11 : வெற்று 'வெள்ளி டாலர்' : 

பார்க்க சாதாரண வெள்ளி நாணயம் போல் தெரியும், இதற்குள் வெற்று இடம் இருக்கும் அதனுள் தகவல்களை சேமித்து உளவு பார்க்கப்பட்டுள்ளது.
0