Showing posts with label HEALTHY EATING NEWS. Show all posts
Showing posts with label HEALTHY EATING NEWS. Show all posts

Monday, 2 May 2016


கோடை கால காய்கறி சாலட்
1461656928veg%20salad.jpeg

தேவையான பொருள்கள்;-

துருவிய வெள்ளரிக்காய்
துருவிய முட்டை கோஸ்,
துருவிய கேரட்,
பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம்
கொத்தமல்லி தழை பொடியாய் நறுக்கியது
எலுமிச்சை சாறு
இஞ்சி சாறு
தக்காளி பொடியாய் நறுக்கியது
குட மிளகாய்  சிறிதாக நறுக்கியது
மாதுளை  2 டேபிள்
உப்பு 

செய்முறை
அனைத்து காய்கறிகளையும்  சேர்த்து   அதனுடன் . எலுமிச்சை சாறு , இஞ்சி சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு கலந்து சாப்பிடலாம்
  இந்த கலவை கோடையில் உங்கள்    உடல்  வெப்பத்தை  குறைத்து  உடலை சீராக வைத்திருக்க உதவும்.
0


மில்க் பர்பி
1408798633milk%20burfi.jpg

தேவையானவை;-

காய்ச்சிய பால் – 1 கப்
சர்க்கரை – அரை கப்
சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
பச்சை புட் கலர் – கால் ஸ்பூன்
செய்முறை:
பால், சர்க்கரை, கோவா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து கலக்கி மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.
கலவை இறுகி வரும் சமயம் புட் கலரைச் சேர்க்கவும். பிறகு கலவை கெட்டியானவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பி நெய்யில் வறுத்த முந்திரிகளை அலங்கரித்து ஆறியவுடன் டைமண்ட் வடிவத்தில் வில்லைகள் போடவும்.
0


தேங்காய் பால் பணியாரம்
1461741183pal%20paniyaram.jpg

தேவையான பொருள்கள்;-

பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய்
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்குஅரைக்கவும். (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்)  தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும்.
அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்
நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்
0