Showing posts with label whatsapp VIDEO CALL. Show all posts
Showing posts with label whatsapp VIDEO CALL. Show all posts

Tuesday, 17 May 2016

சில தினங்களுக்கு முன் பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்பட்டு வந்த வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சமானது புதிய அப்டேட் மூலம் முழுமையாக நீக்கப்பட்டு விட்டது. வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பின் வி2.16.80 வெர்ஷன்களில் வீடியோ கால் செய்ய கூடிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கால் அம்சம் ஐகான் வடிவில் வழங்கப்பட்டிருந்தாலும், தற்சமயத்திற்கு வீடியோ கால் செய்ய இயலாது என்ற நிலையிலேயே இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

6CO1V8C.jpg

புதிய அப்டேட்

சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற போதும், புதிய அப்டேட் மூலம் வீடியோ கால் அம்சத்தினை வாட்ஸ்ஆப் நீக்கி விட்டது.

தயார் 

திடீரென வீடியோ கால் அம்சம் நீக்கப்பட்டதற்கு இந்த அம்சமானது சோதனை செய்யவும் தயார் நிலையில் இல்லை என்பதையே உணர்த்துகின்றது.

xm2n7jV.jpg

டெஸ்க்டாப் ஆப் 

அனைத்து இயங்குதளங்களிலும் வேலை செய்ய கூடிய டெஸ்க்டாப் எனப்படும் கணினி ஆப் ஒன்றினை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் வெப் 

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் அம்சமும் முன்னதாக அந்நிறுவனம் அறிமுகம் செய்த வாட்ஸ்ஆப் வெப் அம்சமும் ஒரே பயன்களை வழங்குகின்றது.

1tZOXQc.jpg

சேவை 

இன்று நாங்கள் அறிமுகம் செய்யும் அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் எந்நேரமும் தங்களது நட்பு வட்டாரங்களுடன் இணைப்பில் இருக்க முடியும் என அந்நிறுவனம் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தது.



வாட்ஸ்ஆப் வீடியோ கால் மேற்கொள்வது எப்படி??


வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் அம்சத்தினை வழங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ கால் சோதனையானது பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாட்ஸ்ஆப் செயலியின் போன் ஐகானை க்ளிக் செய்து வீடியோ கால் மேற்கொள்ள முடியும். முன்னதாக வாய்ஸ்கால் செய்ய வழங்கப்பட்ட இந்த ஐகான் மூலம் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் என இரு அம்சங்களை வழங்கும். தற்சமயம் வரை இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

fprSHsl.jpg

முயற்சி 

வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சத்தினை உடனடியாக பயன்படுத்த விரும்புவோர் தற்சமயம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு கருவிகளில் முயற்சிக்க முடியும். 

செயலி 

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தங்களது ப்ளே ஸ்டோர்களில் இருந்து பூயா எனும் செயலியை கொண்டு பயன்படுத்த முடியும். 

6hB8a4F.jpg

காண்டாக்ட்

இந்த செயலியை இன்ஸ்டால் செய்ததும் வாட்ஸ்ஆப் காண்டாக்ட், புகைப்படம், மீடியா, கேமரா, வை-பை போன்றவைகளை ஆய்வு செய்யும். 

0nRJeTe.jpg

வீடியோ கால்

வீடியோ கால் அம்சத்தினை க்ளிக் செய்தவுடன் காண்டாக்ட்களை இணைக்க லின்க் அனுப்பப்படும். ஒரு வேளை வீடியோ கால் செய்யும் போது செயலியை க்ளோஸ் செய்தால் வீடியோ கால் வாய்ஸ் கால் போன்று மாற்றப்பட்டு விடும். 

க்ரூப் வீடியோ கால் 

பூயா செயலியை பயன்படுத்தி க்ரூப் வீடியோ கால் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் பயன்படுத்த கருவியில் பூயா செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
0

Monday, 9 May 2016

வாட்ஸ்ஆப் தனது செயலியில் பல்வேறு புதிய வசதிகளை வழங்குவது குறித்த பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. முன்னதாக வாட்ஸ்ஆப் செயலியில் கால்பேக், வாய்ஸ்மெயில் மற்றும் சிப் ஃபைல் பகிர்ந்து கொள்வது போன்ற வசதிகள் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்சமயம் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ கால் அம்சம் வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது. 

2DZtDAc.jpg

வீடியோ கால்

வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ கால் அம்சம் சேர்க்கப்பட இருப்பதாக ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

rOsmXfS.jpg

மொழி மாற்றம்

வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து மொழி மாற்றம் செய்யும் கோரிக்கைகளில் "வீடியோ கால்" (Video call), மற்றும் "வீடியோ காலிங் இஸ் அன் அவெய்லெபிள் அட் திஸ் டைம் (Video calling is unavailable at this time) போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததாக ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

LXrH4uj.jpg

பீட்டா

ஆப் மேலும் அந்த குறிப்பில் வீடியோ கால் அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளின் பீட்டா செயலியில் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Z8xtIDY.jpg

தகவல்

தற்சமயம் வரை மற்ற பயனர்களுக்கு வீடியோ கால் அம்சம் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை, ஆனாலும் இந்த அம்சம் அழைப்பு மூலம் சிலருக்கு மட்டும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
0