Monday, 9 May 2016

விரைவில் அறிமுகமாகும் வாட்ஸ்ஆப் வீடியோ கால் வசதி.!?

வாட்ஸ்ஆப் தனது செயலியில் பல்வேறு புதிய வசதிகளை வழங்குவது குறித்த பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. முன்னதாக வாட்ஸ்ஆப் செயலியில் கால்பேக், வாய்ஸ்மெயில் மற்றும் சிப் ஃபைல் பகிர்ந்து கொள்வது போன்ற வசதிகள் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்சமயம் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ கால் அம்சம் வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது. 

2DZtDAc.jpg

வீடியோ கால்

வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ கால் அம்சம் சேர்க்கப்பட இருப்பதாக ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

rOsmXfS.jpg

மொழி மாற்றம்

வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து மொழி மாற்றம் செய்யும் கோரிக்கைகளில் "வீடியோ கால்" (Video call), மற்றும் "வீடியோ காலிங் இஸ் அன் அவெய்லெபிள் அட் திஸ் டைம் (Video calling is unavailable at this time) போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததாக ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

LXrH4uj.jpg

பீட்டா

ஆப் மேலும் அந்த குறிப்பில் வீடியோ கால் அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளின் பீட்டா செயலியில் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Z8xtIDY.jpg

தகவல்

தற்சமயம் வரை மற்ற பயனர்களுக்கு வீடியோ கால் அம்சம் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை, ஆனாலும் இந்த அம்சம் அழைப்பு மூலம் சிலருக்கு மட்டும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment