Showing posts with label Windows. Show all posts
Showing posts with label Windows. Show all posts

Thursday, 2 June 2016

விண்டோஸ் 8 இயக்க முறைமை நமக்கு அளிக்கப்பட்ட போது, அதில் பல செயல்பாடுகள் முற்றிலும் புதியனவாக இருந்தன. தொடு உணர் செயல் திரை, டைல்ஸ்களில் புரோகிராம்கள் மட்டுமின்றி, இன்னும் பல புதிய வசதிகளும் அளிக்கப்பட்டன. இந்த புதிய வசதிகளில் ஒன்று Power User Menu. இதனைப் பயனாளர்கள் அனைவரும் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டு பயன்படுத்தினார்கள். 
 

அதனாலேயே, விண்டோஸ் 8க்கு மாற்றாக, விண்டோஸ் 10 அறிமுகமானபோது, பல அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டாலும், பவர் யூசர் மெனு அப்படியே தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள பயன்பாடுகள் குறித்தும், விண்டோஸ் 10ல் அவற்றை எப்படி, எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இங்கு காணலாம். விண்டோஸ் 8ல் ஸ்டார்ட் மெனு முழுமையாக நீக்கப்பட்டதால், மைக்ரோசாப்ட் பவர் யூசர் மெனுவினைச் சற்று மறைவாகவே தந்தது. ஸ்டார்ட் மெனுவிற்குப் பதிலாக இது இல்லை என்றாலும், விண்டோஸ் இயக்கத்தின் சில முக்கிய, புதிய செயல்பாடுகளுக்கு பவர் யூசர் மெனு வழி தருகின்றது.
 

விண்டோஸ் 10ல் ஸ்டார்ட் மெனு மீண்டும் அறிமுகமானது. அத்துடன் பவர் யூசர் மெனுவும் தரப்பட்டது. நாம் விண்டோஸ் இயக்கத்தில் பயன்படுத்தும் பல டூல்களையும், செயல்பாடுகளையும், சில நொடிகளில் அணுகிப் பெற பவர் யூசர் மெனு உதவிடுகிறது. ஒரு சில கீ அழுத்தத்தில், கீ போர்ட் ஷார்ட் கட் அமைப்பில், இந்த செயல்பாடுகளை நாம் இந்த பவர் யூசர் மெனு மூலம் பெற முடிகிறது.
 

பவர் யூசர் மெனுவினை, விண்டோஸ் 10 இயக்கத்தில் பெற, ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து, விண்டோஸ் கீயுடன் X யை (Windows Key + X) அழுத்தவும். திரையின் இடது புறத்தில் நெட்டு வாக்கில் செயலிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று காட்டப்படும். இதில் நமக்குத் தேவையான செயலியில் கிளிக் செய்தால், அதனை இயக்கும் வகையில் உடனடியாகப் பெறலாம். இந்தப் பட்டியலில் உள்ளவற்றையும், அவற்றின் பயன்களையும் இங்கு பார்க்கலாம்.
 


Programs and Features: 
 
 
முதலாவதாக நாம் பெறுவது “செயலிகளும் அவற்றின் செயல்பாடுகளும்” என்ற பிரிவு. இதன் மூலம் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள சாப்வேர் செயலிகளை நீக்கலாம். விண்டோஸ் அப்டேட் பைல்கள் எவை பதியப்பட்டுள்ளன என்று பார்க்கலாம். தேவையற்ற அப்டேட் பைல்களை நீக்கலாம். சில விண்டோஸ் சிஸ்டம் செயல்பாடுகளை இயக்கலாம்; அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
 
 

Power Options: 
 
 
இதனைப் பயன்படுத்தி, நாம் மின்சக்தியைப் பயன்படுத்துவதனை நிர்வகிக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு செயலி. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மானிட்டரை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால், அது செயல்படுவதனை நிறுத்த இதனை அமைக்கலாம்.
 
 

Event Viewer:
 
இது ஒரு புதிய செயல்வழி முறை. உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன நிகழ்வுகள் ஏற்பட்டன என்று வரிசையாக, இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி, ஒரு செயலி ஏன் தன் இயக்கத்தினை திடீரென (Crash) முடங்கிப் போயிற்று என்பதனை அறிய முடியும். இந்த செயலியைச் சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டும். எனவே, கம்ப்யூட்டருக்குப் புதியதாக அறிமுகமானவர்கள், இதனைக் கையாளமல் இருப்பதே நல்லது.

 
System: 
 
அடுத்து நமக்குக் கிடைப்பது System. இதனைப் பயன்படுத்தி, நம் கம்ப்யூட்டர் குறித்த சில அடிப்படை தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். விண்டோஸ் 10ல் எந்த வகை இயக்க முறைமை, ராம் மெமரி அளவு என்ன, எந்த சி.பி.யு.வினை நாம் பயன்படுத்துகிறோம் என்ற அடிப்படைத் தகவல்களை இந்தப் பிரிவில் பெறலாம்.
 

Device Manager:
 
 நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு செயலி. கம்ப்யூட்டரில் பதியப்பட்டு இயங்கும் செயலிகள் அனைத்து குறித்தும் இந்தப் பிரிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலிகளின் ட்ரைவர் கோப்புகளை நீக்கவும், அப்டேட் செய்திடவும் இதில் வழிகள் தரப்பட்டுள்ளன.
 

Network Connections: 
 
கம்ப்யூட்டரில் இயங்கும் அனைத்து நெட்வொர்க் இணைப்புகளையும் இந்தப் பிரிவில் பார்க்கலாம். இவற்றின் இயக்கப் பண்புகளை எளிதாக இங்கு மாற்ற முடியும். செயல்படாமல் முடக்கி வைக்கவும் முடியும்.
 

Disk Management:
 
 இதுவும் புதியதாக விண்டோஸ் இயக்கத்தில் தரப்படும் டூல். இதன் மூலம் புதிய பிரிவுகளை ஹார்ட் ட்ரைவில் உருவாக்க முடியும். ஏற்கனவே இயங்கி வரும் பிரிவுகளின் அளவுகளை மாற்றவும் முடியும். எனவே, இதனைப் பயன்படுத்துகையில், அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும்.
 
 

Computer Management: 
 
விண்டோஸ் 10 இயக்க முறைமையில் உள்ள, மறைத்து வைக்கப்பட்டுள்ள வசதிகளைப் பெற உதவும் பிரிவு இது. இதனைக் கொண்டு, புதிதாக வந்துள்ள வசதிகளைப் பயன்படுத்த முடியும் என்பதால், மிகவும் கவனமாக இதனைக் கையாள வேண்டும்.
 
 

Command Prompt:
 
 முந்தைய டாஸ் இயக்கத்தில் கட்டளைகளை இட்டுப் பெறும் பிரிவு இது. துடித்துக் கொண்டிருக்கும் (இன்றைய கர்சருக்குப் பதிலாக) கட்டளைப் புள்ளியில் நேரடியாக, இயக்க முறைமைக்கான கட்டளையினை இட்டு இயக்க முடியும். இதனுடன் Command Prompt (Admin) என்ற டூலும் தரப்படுகிறது. இவை ஒன்றே தான் என்றாலும், சில கூடுதல் உரிமைகளை இது தருகிறது. பைல்களை உருவாக்க, போல்டர்களை அழிக்க, நெட்வொர்க் செயல்பாட்டு கூறுகளை சோதனையிட, புதிய பயனாளர்களுக்கான உரிமையினை உருவாக்கி வழங்க, ஹார்ட் ட்ரைவினை பார்மட் செய்திட என்னும் பல அடிப்படை செயல்பாடுகளை இந்த கட்டளைப் புள்ளியில் இருந்து இயக்கலாம். எனவே தான், ஒரு சில செயல்பாடுகளை, Command Prompt (Admin) என்ற டூல் மூலம் மட்டுமே இயக்க முடியும். 
 
 

Task Manager:
 
 
 இது குறித்து நாம் அனைவருமே அறிந்திருப்போம். கம்ப்யூட்டர் இயக்கப்படும்போது, இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து செயலிகள் குறித்து, இதன் மூலம் அறியலாம். இவை நம்முடைய கட்டளைகளுக்குச் சரியான முறையில் செயல்படவில்லை என்றால், அவற்றின் இயக்கத்தினை முடக்கி வைக்கலாம். கம்ப்யூட்டரைத் தொடங்குகையில், எந்த செயலிகள், விண்டோஸ் 10 இயக்க முறைமையுடன் தொடங்கப்பட வேண்டும், எவை தொடங்கப்படக் கூடாது எனவும் இதன் மூலம் வரையறை செய்திடலாம். முந்தைய விண்டோஸ் இயக்கங்களில், கண்ட்ரோல் பேனல் பிரிவில் மேற்கொண்ட செயல்பாடுகளை இங்கு மேற்கொள்ள முடியும். 
 
 

File Explorer and Search:
 
இவை புதியதாக எந்த வசதிகளையும் தரவில்லை. பைல் எக்ஸ்புளோரர் மற்றும் சர்ச் பிரிவுகளுக்கான ஷார்ட் கட் வழிகளாக இவை இயங்குகின்றன.

Run: இந்தப் பிரிவினைத் தேர்ந்தெடுக்கையில், செயலி ஒன்றைச் செயல்படுத்த கட்டளை கொடுக்கும் Run டயலாக் பாக்ஸ் கிடைக்கும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள ஏறத்தாழ அனைத்து செயலிகளையும் இதன் மூலம் இயக்கலாம். Command Prompt மற்றும் Registry Editor போன்றவற்றையும் கூட, அவற்றின் இயக்கச் செயலியின் பெயரை உள்ளீடு செய்து இயக்குவதன் மூலம் பெற முடியும்.

 
 

Shutdown or sign out: 
 
 
இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உடனடியாக இயக்க நிறுத்தலை மேற்கொள்ளலாம். அல்லது, நிறுத்தி உடன் இயக்கும் ரீஸ்டார்ட் இயக்கத்தினையும் மேற்கொள்ளலாம்.  இந்தப் பட்டியலில் நமக்கு இறுதியாகக் கிடைப்பது டெஸ்க்டாப். இதன் மூலம் நாம் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து செயலிகளின் விண்டோக்களைக் குறுக்கி வைத்து டெஸ்க்டாப் காட்சியைப் பெறலாம்.
 

மேலே சொல்லப்பட்ட அனைத்தையும், ஒரு ஷார்ட் கட் கீ தொடர் மூலமும் இயக்கலாம். விண்டோஸ் கீயுடன் எக்ஸ் கீயை (Windows Key + X) அழுத்துகையில் இந்த பவர் யூசர் மெனு பட்டியல் கிடைக்கிறது. இதன் பெயர்களை உற்றுக் கவனித்தால், ஒரு குறிப்பிட்ட எழுத்தின் கீழ் அடிக்கோடு இடப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, Windows Key + X அழுத்தியவுடன் 'T' அழுத்தினால், டாஸ்க் மானேஜர் திறக்கப்படும். இது போல அனைத்துப் பிரிவுகளுக்கும் ஷார்ட் கட் கீ அமைப்புகள் உள்ளன. பவர் யூசர் மெனு பெற்று, நமக்குத் தேவையான பிரிவைத் தேடி இயக்காமல், இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பு தெரிந்தால், நேரடியாக அவற்றை அழுத்தி, செயலிகளை இயக்கலாம்.
 

பவர் யூசர் மெனு, விண்டோஸ் 10 இயக்கத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய செயல் பிரிவாகும். நமக்குத் தேவையான பல டூல்களை, இதன் மூலம் விரைவாக நாம் பெற முடியும். சில டூல்களைப் பயன்படுத்துவதில், இயக்கத்திற்கே ஊறு விளைவிக்கும் வகையில் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அவற்றைக் கவனமாகப் பயன்படுத்துவது நல்லது.
0

Wednesday, 11 May 2016

கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்ஆப் சேவையை வாட்ஸ்ஆப் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. புதிய செயலிகள் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இவைகளை பயன்படுத்த கணினியில் குறைந்தபட்சம் விண்டோஸ் 8 இயங்குதளம் அல்லது மேக் ஓஎஸ் 10.9 இயங்குதளம் அவசியம் ஆகும். 

Ua8Mj56.jpg

இயங்குதளம்

கணினிகளுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலி அனைத்து பிரபல இயங்குதளங்களிலும் கிடைக்கின்றது. வாட்ஸ்ஆப் செயலியின் கணினி பதிப்பானது செயலி வெளியாகி 14 மாதங்களுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ்ஆப் வெப்

முன்னதாக வாட்ஸ்ஆப் வெப் என்ற பதிப்பு மொபைல் இல்லாத இயங்குதளங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் செயலிகள் வாட்ஸ்ஆப்வெப் போன்றே குறுந்தகவல்களை மொபைல் கருவிகளில் இருந்து பயன்படுத்தும்.

கணினி

கணினிகளில் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்திருக்கின்றோம். இனி மொபைல் அல்லது கணினி அன எங்கும் எப்போதும் வாட்ஸ்ஆப் மூலம் இணைந்திருக்க முடியும் என வாட்ஸ்ஆப் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்க்

புதிய வாட்ஸ்ஆப் செயலிகள் மொபைல் கருவிகளுடன் சின்க் செய்யப்பட்டுள்ளதல், இந்த செயலிகள் கணினியிலும் வேலை செய்வதோடு நோட்டிபிகேஷன்களுக்கும் சப்போர்ட் செய்யும். 

dRDalzj.jpg

ஸ்கேன்

வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் செயலிகளை பயன்படுத்த வாட்ஸ்ஆப் வெப் போன்றே மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலியை கணினியில் QR கோடு மூலம் ஸ்கேன் செய்து அதன் பின் கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். 

செட்டிங்ஸ்

ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் சென்று வாட்ஸ்ஆப் வெப் மெனுவை பார்க்க வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கருவியில் புதிய அப்டேட் கொண்ட வாட்ஸ்ஆப் செயலி கொண்டிருப்பதும் அவசியம் ஆகும்.
0

Monday, 2 May 2016


WhatsApp seems to be the most used free messaging platform out there. It is secure, private and works on individual mobile numbers, making it difficult for a person to provide false information and create fake accounts.

When WhatsApp was first released, you could only send text messages and photos. Later, as time passed by, WhatsApp has upgraded itself to much more by allowing videos, documents and other features such as WhatsApp Web, blue ticks, voice calling End-to-end encryption and a lot more. Information ahead also mentioned WhatsApp could follow Facebook Messenger to add the feature of video chats to its messaging platform. Well, that seems to be true and probably not too far away.

According to information revealed by WABetaInfo, a person on Twitter who seems to be closely following the WhatsApp development, the famous and free messaging platform is working on video calling. Check out the tweet below which shows that WhatsApp is presently testing video calling across the iOS platform.  The screenshot in the leak clearly mentions a missed video call from another user.



 Unlike its web alternative, which needs you to pair the PC with your smartphone, WhatsApp seems to be gearing up to release an app or software that will allow you to run WhatsApp without your phone mobile. According to leaked information from the same Twitter account, the developers are also building (and probably beta testing) an app, or apps, to natively run WhatsApp on the PC and Mac. The leaked information reveals a screenshot that gives out information about software that would be available for download on Windows and Max OS X. The screenshot does not reveal much information, but the lines stating ‘download for Mac’ are enough to mention that the use of WhatsApp will be available via an app or software too. However, the screenshots also do mention that WhatsApp should also be installed on your phone. This could be a requirement for authentication purposes, but maybe, once authenticated, you could use WhatsApp from both sides, individually.


As for now, these are leaked information coming from sources well known for their investigation and research. The information does not confirm when the new feature updates will be released to public or beta testers around the world. Stay tuned for more information on the same.

 

0

Saturday, 23 April 2016


நாம் எதிர்பார்க்காமல், நம் மொபைல் போனுக்கு மற்றும் மின் அஞ்சல் முகவரிக்குப் பல நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்புகின்றன. நாம் எந்தச் சூழ்நிலையிலும், இணையத்தில் சென்று பார்க்காத நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து பல தகவல்கள் பாப் ஆகிக் கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நம் விருப்பத் தேடலின் போது, சில இணைய தளங்கள், நம்முடைய மின் அஞ்சல் முகவரியினைக் கேட்கும். கூடவே, நம் மொபைல் போன் எண்ணையும் கேட்டுப் பெறும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள், மற்ற நிறுவனங்களுக்கும் செல்கின்றன. “நீங்கள் அளிக்கும் தகவல்கள் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது” என்ற செய்தியுடன் செயல்படும் பல இணைய தளங்கள், அவற்றுடன் தொடர்பு கொண்டுள்ள இணைய தளங்களிடம் அவர்கள் அறியாமலேயே தங்களிடம் உள்ள தகவல்களைத் தந்து விடுகின்றன. இதுவே, பலமான பரவலுக்கு இலக்காகி, நாம் தொடர்ந்து நமக்குத் தேவையில்லாத தகவல்களைப் பெறும் நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை உருவாக்குகின்றன. 

இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அப்போதைக்கு மட்டும் ஏதேனும் ஒரு மின் அஞ்சல் முகவரியைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாமா? அதே போல ஏதேனும் ஓர் எண்ணை, தொலைபேசி எண்ணாகத் தரலாமா? இது கூட நல்ல யோசனைதான். ஆனால், நமக்கு அந்த தற்காலிக முகவரியும், எண்ணும் எப்படி கிடைக்கும்? ஒருமுறை பயன்படுத்திவிட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படும் “டிஸ்போஸபில் சிரிஞ்ச்” போல நமக்கு இந்த முகவரியும் எண்ணும் வேண்டுமே?

இவற்றை நமக்குத் தந்து உதவுவதற்கென்றே, சில இணைய தளங்கள் இயங்குகின்றன. இந்த தளங்களில் எந்தவிதமான பதிவும் இல்லாமல், எந்த எண்ணையும் தராமல், அப்போது மட்டுமே பயன்படுத்திவிட்டு 'எறிந்துவிடக்கூடிய' மின் அஞ்சல் முகவரிகளும், தொலைபேசி எண்களும் கிடைக்கின்றன. இந்த தளங்களில், நான் பயன்படுத்த விரும்புவது, http://www.temp-mail.org என்ற இணையதளம் ஆகும். இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்றவுடன், உங்களுக்கென ஓர் இமெயில் முகவரி உருவாக்கப்பட்டு வழங்கப்படும். இதனைக் கூட, நீங்கள் விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.


இந்த மின் அஞ்சல் முகவரியினை, உங்களிடம் முகவரி கேட்கும், நீங்கள் அதன் பார்வையிலிருந்து ஒளிந்து கொள்ள விரும்பும் தளங்களில், பயன்படுத்தலாம். அந்த தளங்கள், உங்களுக்குத் தரப்படும் விளம்பர மின் அஞ்சல்கள் அனைத்தும் அந்த முகவரிக்கு அனுப்பப்படும். நீங்கள் விரும்பினால், இந்த இணைய தளம் சென்று, உங்களுக்கான அஞ்சல்களைக் காணலாம். இந்த தற்காலிக மின் அஞ்சல் முகவரியை நீங்களாக, அழிக்காதவரை அது உங்களுக்கான ஒளியும் அஞ்சல் முகவரியாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

அண்மைக் காலமாக, இணைய தளங்கள், உங்கள் சரியான அடையாளத்தை உறுதி செய்திட, இரட்டை முறை சோதனையை மேற்கொள்கின்றன. அந்த வகையில் உங்கள் மொபைல் எண்ணைக் கேட்கின்றன. வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை நீங்கள் தர வேண்டியதுள்ளது. அப்படி தருகின்ற பட்சத்தில், பல தேவையற்ற இடங்களிடமிருந்து ஸ்பேம் செய்திகள் குவிகின்றன. இதனைத் தடுக்க, மேலே தற்காலிக மின் அஞ்சல் முகவரிகள் தருவது போல, தற்காலிக எண்களையும் நீங்கள் பெறலாம். இரு தளங்கள் இந்த வகையில் பயனுள்ளதாய் உள்ளன. இந்த தளங்களின் முகவரிகள் http://www.smsreceivefree.com / http://www.tempophone.com. இங்கு சென்றவுடன், உங்களுக்கென சில எண்கள் காட்டப்படும். 

அவற்றிலிருந்து இரண்டினை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்களிடம், மொபைல் எண் கேட்கும் நிறுவனங்களின் இணைய தளத்தில் இந்த எண்களைத் தரலாம். இந்த எண்களுக்கு அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ். தகவல்கள், இந்த தளத்தில் கிடைக்கும். எனவே, தகவல்களை எதிர்பார்க்கையில், இந்த தளம் சென்று, அவற்றைப் பெறலாம். ஆனால், 30 நாட்களில், இந்த எண்களின் செயல்பாடு காலாவதியாகிவிடும். நீங்கள் மீண்டும் புதிய எண்களை இந்த தற்காலிக மொபைல் எண் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த வகையில், இணைய வெளியில், உங்கள் உண்மையான அடையாளத்தைக் காட்டாமல், ஒளிந்து நின்று செயல்படலாம்.


0


மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் தொகுப்பினை அறிமுகப்படுத்திய போது, பயனாளர்கள் பலரும் பாராட்டி, பயன்படுத்தி, அனுபவித்த ஒரு டூல், ஸ்டார்ட் மெனு ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவினை, விண்டோஸ் 95 சிஸ்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர், இதன் தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏதும் தரப்படவில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள், இதனைப் பெரிதும் ரசித்துப் பயன்படுத்தினார்கள். அதனால் தான், விண்டோஸ் 8 சிஸ்டம், ஸ்டார்ட் மெனு இல்லாமல் அறிமுகமானபோது, அனைவரும் திகைத்துப் பின் வாங்கினார்கள். பெரும் அளவில் குழப்பக் கூக்குரல்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்குக் காரணமான பல புரோகிராமர்கள், அலுவலர்களை மைக்ரோசாப்ட் வீட்டுக்கு அனுப்பியது.  மைக்ரோசாப்ட் தன் தவறை உணர்ந்து கொண்டது. என்னதான், புதிய கட்டமைப்பு என்றாலும், பயனாளர்களின் பாசத்திற்குரிய ஒன்றை நீக்கியிருக்கக் கூடாது என்று தன்னைத் திருத்திக் கொண்டது.


விண்டோஸ் 8.1.ல் ஓரளவிற்கு ஸ்டார்ட் மெனு தரப்பட்டது. விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனு முழுமையாக மாற்றப்பட்டு, பயனாளர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. சில கூடுதல் வசதிகளும் இதில் இணைக்கப்பட்டன. அதே நேரத்தில், தான் முயற்சி செய்து வழங்கிய டைல்ஸ்கள் கொண்ட இடைமுகத்தினையும், விண்டோஸ் 10ல் தர மைக்ரோசாப்ட் தயங்கவில்லை. மக்கள் விரும்பி, மகிழ்ந்து பயன்படுத்தும் இந்த ஸ்டார்ட் மெனு குறித்து இங்கு பார்க்கலாம்.
 

எதற்காக ஸ்டார்ட் மெனு?

விண்டோஸ் சிஸ்டத்தில், புரோகிராம்களை இயக்க, ஸ்டார்ட் மெனு ஒரு தொடக்க நிலை கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டது. விண்டோஸ் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, டெஸ்க்டாப், புரோகிராம்களை இயக்க ஒரு தளம் அல்ல; அந்தப் பணியை ஸ்டார்ட் மெனு மூலமே மேற்கொண்டு வந்தோம். ஸ்டார்ட் மெனுவினை திரையின் இடது மூலையில் தரப்படும் ஐகானில் கிளிக் செய்து அல்லது விண்டோஸ் கீயினை அழுத்திப் பெற்றோம். இந்த இரு வழி செயல்பாடுகளிலும், விண்டோஸ் புரோகிராம்கள் நமக்கு ஒரு கொத்தாகக் கிடைக்கப் பெற்றன. ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், நமக்கு உடனே புரோகிராம் இயக்கம் கிடைத்து வந்தது. அந்த அளவிற்கு அது ஓர் எளிதான செயலாக இருந்தது. 
 


விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனுவில் என்ன சிறப்பு?

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் கிடைக்கும் ஸ்டார்ட் மெனு, வழக்கமான பாரம்பரிய ஸ்டார்ட் மெனுவின் அம்சங்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 7 வரை நாம் பழகி வந்த ஸ்டார்ட் மெனு, அதே பயன்களைச் சற்றும் குறைவில்லாத வகையில் கொண்டதாக புதிய ஸ்டார்ட் மெனு உள்ளது. அதே நேரத்தில், பெரும்பாலான மக்கள் பார்த்து சற்று அச்சப்பட, குழப்பமடைந்த, விண்டோஸ் 8ல் தரப்பட்டுள்ள டைல்ஸ் வகை ஸ்டார்ட் மெனுவும் தரப்பட்டுள்ளது. 

சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு இடது பக்கம் பழைய மெனுவினையும், வலது பக்கம் புதிய டைல்ஸ்களையும் கொண்டதாக உள்ளது. இதனால், புரோகிராம்களை அறிந்து இயக்க, நமக்கு இரு வழிகள் கிடைக்கின்றன. 
இடதுபுறத்தில், அப்ளிகேஷன்கள் / புரோகிராம்கள், நமக்கு அகர வரிசையில் கிடைக்கின்றன. வலது பக்கம் உள்ள புரோகிராமிற்கான டைல்ஸ்களை, நம் விருப்பப்படி, எந்த வரிசையிலும் அமைத்து இயக்கலாம். இதனால், நாம் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை, குழுவாக அமைத்து எளிதாக இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். சிலர், மைக்ரோசாப்ட் ஆபீஸ் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரு குழுவாகவும், போட்டோக்கள் சம்பந்தப்பட்டவற்றை ஒரு குழுவாகவும் அமைத்து இயக்கி வருவது இதற்கான ஓர் எடுத்துக் காட்டாகும்.  சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு, நம் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது. இதனை எப்படி வளைக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

 


அளவை மாற்றலாம்

ஸ்டார்ட் மெனு மிகவும் அகலமாகவோ அல்லது மிகக் குறுகியதாகவோ உள்ளதாக நீங்கள் உணர்ந்தால், அதன் அளவினை மாற்றலாம். மிகவும் சிறியதாகவோ அல்லது மிக உயரமானதாக இருப்பதாக எண்ணினால், அதனையும் மாற்றலாம். கர்சரை அதன் முனைகளில் ஒன்றில் வைத்து, மவுஸின் இடது பட்டனை அழுத்திப் பிடித்தவாறே இழுக்க வேண்டும். இதன் மூலம், ஸ்டார்ட் மெனுவின் அளவினை, வடிவத்தினை நீங்கள் விரும்பும்படி அமைத்துக் கொள்ளலாம். ஸ்டார்ட் மெனுவின் அளவு மிகச் சிறியதாக உள்ளது என்று எண்ணி, அதன் அளவைப் பெரிதாக்கும்போது, சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், ஸ்டார்ட் மெனு சார்ந்த அனைத்தின் அளவினையும் அது பெரியதாக்கிவிடும். இதற்கு Start | Settings | System | Display என்று செல்லவும். பின்னர் ஸ்லைடரை வலது புறமாக நகர்த்தவும். இதன் பின்னர், Apply என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Logout/Restart to see the changes என கிளிக் செய்து வெளியேறவும்.

குழுவாக மாற்றி அமைத்தல்

டைல்ஸ்களை குழுவாக மாற்றி அமைக்க, விருப்பப்படும் டைல் மீது கிளிக் செய்தவாறே, எங்கு அதனை வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த இடம் வரை இழுத்து விடவும். இந்த குழுவிற்குப் புதுப் பெயரிட, குழுவின் வலதுபுறமாக உள்ள, மூன்று சிறிய பட்டைக்கோடுகளின் மீது கிளிக் செய்து, பெயரினை டைப் செய்திடவும். உங்களுக்குத் தேவைப்படாத டைல் என்று நீங்கள் எண்ணும் டைல் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். பின்னர், Unpin from Start என்பதில் கிளிக் செய்திடவும். இங்கிருந்தவாறே, புரோகிராம்களை 'அன் இன்ஸ்டால்' என்றபடி நீக்கலாம். ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைந்து தரப்பட்டுள்ள புரோகிராம்களை, இவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திட முடியாது. குறிப்பாக, “லைவ் டைல்ஸ்” எனச் சில அழைக்கப்படுகின்றன. அதாவது, மாறிக் கொண்டே இருக்கும் தகவல்களைத் தரும் டைல்களை இவ்வாறு அழைக்கின்றனர். இவை உங்களுக்குத் தேவை; ஆனால், மாறிக் கொண்டே இருக்கும் தகவல்களைப் பார்க்க விரும்பவில்லை என்றாலும், அதற்கான வழிகளை மேற்கொண்டு அமைக்கலாம். 

லைவ் டைல் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், More என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Turn Live Tile off என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். பெரும்பாலான டைல்களின் அளவினை மாற்றி அமைக்கலாம். இதற்கு அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் தேவையான ஆப்ஷனைக் கிளிக் செய்தால் போதும். இவற்றிற்கு, ஸ்டார்ட் மெனுவின் இடது புறத்தில், ஷார்ட் கட் இணைக்கலாம். இதற்கு Start | Settings | Personalization | Start என்று செல்லவும். இங்கு, CHOOSE WHICH FOLDERS APPEAR ON START என்ற பிரிவில், இயக்கநிலை (On) / இயக்கம் இல்லா நிலை (Off) என்பதில் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
 

வண்ணம் மாற்றி அமைக்கலாம்: 

டைல்களின் வண்ணத்தினை, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கலாம். இதற்கு Start | Settings | Personalisation | Colours என்று செல்லவும். பின்னர், Show colour on Start, taskbar and action centre என்பதனை இயக்கவும். இங்கு விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது, விண்டோஸ் சிஸ்டமே, உங்கள் டெஸ்க்டாப் பின்புல வண்ணத்திற்கேற்ற வகையில் ஒரு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கும்.



0

Tuesday, 12 April 2016

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஐடியாபேட் 100 எஸ் லேப்டாப் வகைககளை லெனோவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி புதிய லேப்டாப் கருவிகளின் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் 

D7r1fNw.jpg

ஐஎஃப்ஏ

முன்னதாக ஐஎஃப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேப்டாப் கருவியானது தற்சமயம் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

bRKurJI.jpg

மாற்றம்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதை விட சில அம்சங்கள் இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

h9mvG2U.jpg

திரை

11.6 இன்ச் திரை மற்றும் 1366*768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட இந்த லேப்டாப் கருவியானது இன்டெல் பிராசஸர் மூலம் இயங்குகின்றது. 

NWQymy9.jpg

பிராசஸர்

அதன்படி லெனோவோ ஐடியாபேட் 100எஸ் லேப்டாப் கருவியானது 1.83 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் ஆடம் Z3735F பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

prCOEy0.jpg

மெமரி

32ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் சரியாக 1 கிலோ எடை கொண்டிருக்கின்றது. 

VWFz7TO.jpg

கனெக்டிவிட்டி

0.3 எம்பி வெப்கேமரா, ஸ்டான்ர்டு கீபோர்டு, ப்ளூடூத் வி4.0, வை-பை 802.11 b/g/n, யுஎஸ்பி 2.0, எச்டிஎம்ஐ, ஹெட்போன் ஜேக் மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.
0