Showing posts with label tips. Show all posts
Showing posts with label tips. Show all posts

Monday, 13 June 2016

மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் பயனுள்ள செயலி “ட்ரூ காலர்”. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிக அதிகம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்படுத்தும் 20 கோடி பேரில், 13 கோடி பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்தி மொழி, ஒலிபெயர்ப்பு மற்றும் பிற மாநில மொழிகள் பயன்பாடுகள் இந்த செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த செயலி அனைத்து வகை மொபைல் போன் இயக்க கட்டமைப்புகளில் செயல்படுகிறது. Android, iOS, BlackBerry, Symbian, Windows Mobile, Windows Phone 7, மற்றும் Windows Phone 8 ஆகிய அனைத்திற்குமென இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இந்திய மொழிகள் உட்பட பன்னாட்டு மொழிகளில் இது செயல்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், 35 மொழிகளுக்கு மேல் இதில் பயன்படுத்தப்பட்டன. 

இந்தியாவில் ஒருவர் சராசரியாக, தன் மொபைல் போனில் 12 அழைப்புகளை மேற்கொள்கிறார். 10 அழைப்புகளைப் பெறுகிறார் என்று தனக்குக் கிடைக்கும் தகவல்களின் அழைப்புகளின் அடிப்படையில் ட்ரூ காலர் அறிவித்துள்ளது. இந்த வகையில், ஒருவர் தன் மொபைல் போனில் 20 முறை இயக்கத்தினை மேற்கொள்கிறார். அனைத்து செயல்பாடுகளிலும், ட்ரூ காலர் அவருக்கு உதவுகிறது. இதனோடு இணைந்த ட்ரூ டயலர் செயலி, வெளி அழைப்பு ஒன்று செல்லும் முன்பே, எந்த நபருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது என்று காட்டுகிறது. தகவல் தொலை தொடர்பில், இணையத்தின் வழியான தொடர்பில், ஒருவருடைய மின் அஞ்சல் முகவரியே அவரை அடையாளம் காட்டும் தகவலாகப் பயன்பட்டு வருகிறது. ட்ரூ காலர் மூலம், ஒருவர் அவருடைய மொபைல் எண் மூலம் அடையாளம் காட்டப்படுவது தற்போது பழக்கமாகி வருகிறது. இதனாலேயே, பல இணைய வர்த்தக நிறுவனங்கள் (எ.கா. Quikr, redBus, Goibibo, ShopClues, Naukri.com மற்றும் OYO Rooms) தங்கள் வாடிக்கையாளர்களை அடையாளம் காண, ட்ரூ காலர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.


சென்ற ஆண்டு ஜூலையில், 'ட்ரூ காலர்' தன்னுடைய எஸ்.எம்.எஸ். செயலியை 'ட்ரூ மெசஞ்சர்' என்ற பெயரில் வெளியிட்டது. இது இந்தியாவிற்கு மட்டுமானதாகும். இந்த செயலி, எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகையில், அனுப்பப்படும் மொபைல் போன் எண்ணுக்கு உரியவரை அடையாளம் காட்டும். ஏறத்தாழ 15 கோடி பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமிருந்து இதன் சர்வரில், 170 கோடிக்கு மேற்பட்ட எண்கள் உள்ளன. தினந்தோறும் 12 கோடி ஸ்பேம் அழைப்புகள் தடுக்கப்படுகின்றன. தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், இதனைப் புதியதாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

மொபைல் போன்களில், நம்மை அழைக்கும் நபர், நம் தொடர்புடையவர்களின் எண்கள் பட்டியலில் பதிந்து வைக்கப்படாவிட்டால், அழைக்கும் நபரின் பெயர் நமக்குத் தெரியாது. ஆனால், நமக்கு அன்றாடம் பல அழைப்புகள், வர்த்தக ரீதியாகவும், மோசமான அழைப்பாகவும் கிடைக்கின்றன. இவற்றை நாம் தேடி, அழைப்பவர் யாரென அறிய முடியாது. இந்த இடத்தில் தான், 'ட்ரூ காலர்' செயலி நமக்கு உதவுகிறது. 

'ட்ரூ காலர்' செயலியினை ஸ்கேண்டிநேவியா நாட்டின் True Software Scandinavia AB என்னும் நிறுவனம் வழங்குகிறது. ”தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்” என அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கூறுவார்கள். அதே போல தேவை ஒன்றை உணர்ந்த இருவர் முனைந்து உருவாக்கி, இன்று பன்னாடுகளிலும், பல மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது, 'ட்ரூ காலர்' செயலி.


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, 31 வயதே நிரம்பிய மாமெடி மற்றும் நாமி (Alan Mamedi and Nami Zarringhalam) ஆகிய இருவருக்கும், தங்களின் வேலை வாங்கும் நிறுவன உரிமையாளர்களின் மொபைல் எண்களை அறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி, மாமெடிக்கு பன்னாட்டளவில் அழைப்பு வந்த போது, அவற்றை வடிகட்டி, முக்கிய தொலைபேசி அழைப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் வழியைக் காண திட்டமிட்டார். முதலில் சிறிய அளவில், 'ட்ரூ காலர்' செயலியை உருவாக்கி, இணைய தளம் ஒன்றில் அனைவருக்கும் வழங்கிய போது, முதல் வாரத்திலேயே, 10 ஆயிரம் பேருக்கு மேலாக, இதனைத் தரவிறக்கம் செய்தது தெரிய வந்தது. இதுவே அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்து, அதனை மேம்படுத்தும் பணியில் இறங்கச் செய்தது. தாங்கள் பார்த்து வந்த பணியிலிருந்து விலகி, 'ட்ரூ காலர்' வடிவமைக்கும் பணியில் இறங்கினர். இன்று அவர்கள் வடிவமைத்து இலவசமாகத் தரும் செயலி, உலகின் மிகப் பெரிய தொலைபேசி பேரேட்டினைக் கொண்டுள்ளது. உலகின் அனைத்து தொலைபேசிகளின் எண்கள் மற்றும் அவற்றைக் கொண்டுள்ளவர்களின் விபரங்கள், ஒரே ஏட்டில் கிடைத்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் ட்ரூ காலர் செயலி. அது மட்டுமின்றி, நமக்கு வரும் அநாமதேய அழைப்புகள் தரும் எண்களை மிக எளிதாக இதன் மூலம் தடுக்கலாம்.


”தொலை தொடர்பு என்று வருகையில், மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மன வருத்தம் அளிக்கும் தீங்கு ஒன்றுக்குத் தீர்வாக, 'ட்ரூ காலர்' செயல்படுகிறது” என்று இதனை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கிய இருவரில் ஒருவரான மாமெடி கூறியுள்ளார். ட்ரூ காலர் செயலிக்கு நம் எண்கள் எப்படி கிடைக்கின்றன? இந்தக் கேள்வி, இந்த செயலியைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் தெரிந்து கொண்டவர்கள் மனதில் முதலில் எழுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்த ஒருவர் அதனைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொள்கையில், ட்ரூ காலர் செயலி அவரின் மொபைல் போனில் உள்ள, தொலைபேசி எண்கள் அடங்கிய தொகுப்பினைப் பெற்றுக் கொள்ள சம்மதம் கேட்டுப் பெறுகிறது. “ஒருவரின் சம்மதம் இன்றி அவர் மொபைல் போன்களில் முகவரிப் பிரிவுகளில் உள்ள எண்களை எடுப்பதில்லை” என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இப்படியே, உலகெங்கும் உள்ள பல கோடிப் பேர்களின் மொபைல் போன்களின் தொடர்பு நபர்களின் எண்கள், அவர்கள் பெயர்களுடன், ட்ரூ காலர் செயலியின் சர்வரில் பதியப்படுகின்றன. இந்த வகையில் ஒருவர் ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தினாலும், அவரின் போனில் உள்ள அனைத்து தொடர்புகளும், ட்ரூ காலரின் சர்வரில் பதியப்படுகின்றன. பின்னர், இவை சலித்தெடுக்கப்பட்டு, சரியான பெயர் மற்றும் அவரின் எண்கள் கொண்ட பட்டியல் உருவாக்கப்படுகிறது. அதன் பின்னர், உங்களுக்கு அழைப்பு வருகையில், ட்ரூ காலர் செயலி செயல்பாட்டில் இருந்தால், உடனே எண்ணுக்குரியவரின் பெயர் காட்டப்படுகிறது. 

அல்லது, நீங்களாக, ட்ரூ காலர் செயலியில், ஓர் எண்ணுக்குரியவரைத் தேடி தகவல் பெறலாம். அப்படிப் பெறும்போது, அந்த எண்ணுக்குரியவருக்கு, இது போல, இந்த எண்ணிலிருந்து ஒருவர் உங்கள் எண் குறித்து தேடினார் என்ற செய்தி அனுப்பப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட ஓர் எண்ணை, ”ஸ்பேம்” என அறிவிக்கலாம். ட்ரூ காலர், அந்த எண்ணிடமிருந்து அழைப்பு வருகையில், எத்தனை நபர்கள் அந்த எண்ணை ஸ்பேம் எனக் குறிப்பிட்டுள்ளனர் என்று காட்டுகிறது. 

நமக்கு தேவையற்ற வகையில் அழைப்பு கொடுத்து, நம் நேரத்தை வீணாக்கும் நபரின் எண்ணைக் கொடுத்து, அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், தடுக்கும்படி ட்ரூ காலரைப் பயன்படுத்தலாம். இந்த ஒரு பயன்பாட்டிற்காகவே, அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில், மூன்றாவது இடத்தை ட்ரூ காலர் பெற்றுள்ளது. முதல் இரண்டு இடத்தினைப் பெற்றவை, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகள். 


பெர்சனல் கம்ப்யூட்டர் மூலமும் ஓர் எண்ணுக்குரியவரைக் கண்டறிய ட்ரூ காலர் உதவுகிறது. இதற்கு https://www.truecaller.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். ”200 கோடி போன் எண்களுக்கு மேல் இங்கு தேடிப் பெறுக” என்ற தலைப்புடன் போன் எண் குறித்துத் தேடி அறிய வழி தரப்படுகிறது. இங்கு தரப்பட்டுள்ள நீளத் தேடல் கட்டத்தில், முதலில் தேடப்படும் தொலைபேசி எண் உள்ள நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து நாடுகளின் பெயர்களும், அவற்றிற்கான தொலைபேசி குறியீட்டு எண்ணும் பட்டியலிடப்பட்டு கிடைக்கும். நாட்டைத் தேர்ந்தெடுத்த பின், தொலைபேசி எண்ணை (மொபைல் அல்லது லேண்ட் லைன்) உள்ளீடு செய்து எண்டர் தட்டவும். உடன், அந்த தொலைபேசி எண்ணுக்குரியவர் பெயர், முகவரி, அது மொபைல் அல்லது வயர் வழி இணைப்பு மற்றும் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயர் ஆகியவை காட்டப்படும்.

'ட்ரூ காலர்' செயலி, நம்மை அடையாளம் காட்டுவது, தனி மனித உரிமையைப் பறிக்கும் செயல் ஆகாதா? எனப் பலர் கேட்டுள்ளனர். செயலியைத் தரவிறக்கம் செய்திடும் நபரின் எண்ணை, இந்த செயலி அடையாளம் காட்டலாம். ஆனால், அவர் அழைக்கும் மற்றும் அவரை அழைக்கும் மற்றவர்களின் எண்களை எப்படி அடையாளம் காட்டலாம்? என்று பலர் கோபப்படுகின்றனர். இது நியாயமான கேள்வியே. இதற்கான தீர்வையும் 'ட்ரூ காலர்' வழங்குகிறது. அதன் இணைய தளம் சென்று (https://www.truecaller.com/unlist) உங்கள் எண்ணை பட்டியலிலிருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். தரப்பட்டுள்ள கட்டத்தில், நாட்டிற்கான குறியீட்டு எண்ணுடன் (+91), உங்கள் மொபைல் எண்ணைத் தர வேண்டும். 24 மணி நேரத்திற்குள்ளாக, உங்கள் எண் அதன் சர்வரின் டேட்டா பேஸிலிருந்து நீக்கப்படும். நீங்கள் உங்கள் எண்ணை, அதன் தளத்தில் பதிவு செய்திருந்தால், முதலில் உங்கள் எண்ணை செயல் இழக்கச் செய்திட வேண்டும். இதற்கும் இந்த தளத்தில் இடம் தரப்பட்டுள்ளது. இதன் செயலியில், Settings menu சென்று, About tab தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Deactivate என்பதில் கிளிக் செய்திட வேண்டும். நீங்கள் இதுவரை 'ட்ரூ காலர்' பயன்படுத்தாமல் இருந்தால், செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கலாம்.


0

Tuesday, 17 May 2016


கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு விடுகிறது. அதாவது கணினியில் வேலை செய்யும்போது கண் இமைகள் இமைப்பதற்கு குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனை தவிர்க்க ஓரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

news_30-12-2013_11ey.gif

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையில் அடிப்பாகத்தால் லேசாக அழுத்திவிடவேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிலத்தில் உள்ள பொருட்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை சுழல விட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
7456c784-25e9-42c5-b87f-692e5ca8e8e8_S_s

அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம். மேலும் நீண்ட நேரம் கணினிமுன் உட்காருவதை முடிந்த வரை தவிருங்கள்.
0

Thursday, 12 May 2016


*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# – போனின் சீரியல் எண்ணை காண
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).

*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய



0

Wednesday, 4 May 2016

இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர். கம்ப்யூட்டர் பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக facebook.com இடம் பிடித்துள்ளது. இன்னொரு பக்கத்தில், பேஸ்புக், இந்த உலகின் மிக உயர்ந்த தொழில் நுட்ப திறன் கொண்ட வல்லுநர்களை இழுக்கும் காந்தமாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு பயனாளரும் தங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைத்துப் பயன்படுத்த வழி தருவதிலும், நகாசு வேலைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளிப்பதிலும், தனிப்பட்ட முறையில் இயங்கும் செயலிகளைக் கொண்டிருப்பதிலும், ஒரு தனித்துவம் மிக்க பொறியியல் அறிவின் அடையாளமாக பேஸ்புக் வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 

பேஸ்புக் இணைய தளத்தில், அதன் பயனாளர்கள் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அவை அனைத்தும் அவர்களுக்குத் தெரியுமா என்றால், இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும். இப்படிக் கூறுகையில், பேஸ்புக் இணைய தளத்துடன் இணைந்து செயலாற்றக் கூடிய தர்ட் பார்ட்டி செயலிகளை இங்கு குறிப்பிடவில்லை. அல்லது பிரவுசர் வழியாக இணைந்து செயலாற்றும் செயலிகளை இங்கு பட்டியலிடவில்லை. தெரியாத செயல்பாடுகள் என்று சொல்லப்படுவது, பேஸ்புக் இணையதளத்திலேயே அமைந்து, அனைவரும் இயக்கும் வகையில் தரப்படும் செயல்பாடுகள் தாம். இவற்றைத்தாம் பெரும்பாலானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அவற்றை இங்கு ஆய்வு செய்து பார்க்கலாம். தெரிந்த பின்னர், பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்து பேஸ்புக் சூப்பர் ஸ்டாராக மாறலாம்.

நீங்கள் அறியாத உங்களின் செய்திப் பெட்டி (Hidden Message Box) உங்களுக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றும் அதற்கான தளமும் உள்ளதா? அதில் நீங்கள் விரும்பும் தகவல்களைப் பதிவு செய்கிறீர்கள். போட்டோக்களைப் பதிந்துவைத்து அழகு பார்க்கிறீர்கள். ஓரமாக அரட்டைக் கட்டத்தில் (Chat Box) நண்பர்கள் தென்பட்டால், அவர்களுடன் அரட்டை அடிக்கிறீர்கள். போட்டோ, பைல்களை அனுப்புகிறீர்கள். சில வேளைகளில், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் மெசேஜ்களை, உங்கள் மெசேஜ் பெட்டி திறந்து படிக்கிறீர்கள். இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும், இது தவிர, இன்னும் இரு மறைத்துவைக்கப்பட்ட உங்களுக்கான மெசேஜ் பாக்ஸ் இருப்பது தெரியுமா? இந்த செய்திப் பெட்டியைப் பெற, உங்கள் பக்கத்தில், மேலாக உள்ள "messages" என்னும் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். அல்லது இடது பக்கமாக "messages" என்னும் லிங்க்கின் மீது கிளிக் செய்திடுங்கள். இந்த இன்பாக்ஸைத் திறக்கும் போது, மாறா நிலையில், இதன் "Recent" டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இதன் வலது பக்கத்தில் "Message Request" என்ற டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால், "See filtered requests” என்ற லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உங்கள் நண்பர்களிடமிருந்தும், நீங்கள் அறியாத யார் யாரிடமிருந்தோ பல செய்திகள் இருக்கும். இவர்களுக்கு மறுமொழி அளிக்கலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம். அல்லது நீக்கிவிடலாம். முதலில், இது போன்ற அறியாதவர்களிடமிருந்து வரும் செய்திகளைப் படிக்கும் இன்பாக்ஸ் திறப்பதற்கு, 2012ல், ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், இது உயர்த்தப்பட்டு, 100 டாலர் (மார்க் உட்பட அனைவருக்கும்) வரை சென்றது. பின்னர், இது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
 


உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்த நபர் யார்?

சில வேளைகளில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பேஜில், வேறு யாரோ ஒருவர் நுழைந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. உங்கள் பாஸ்வேர்டைத் தெரிந்த ஒருவர் அல்லது நீங்கள் உங்கள் நண்பர் வீட்டில் பேஸ்புக் பார்த்துவிட்டு, கணக்கை மூடாமல் வந்த பக்கத்தைப் பார்த்த ஒருவர் என அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவரை நீங்கள் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? முதலில் உங்கள் settings page (https://www.facebook.com/settings?tab=account) செல்லவும். அங்கே, Security போல்டரில், "Where You're Logged In" என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் பேஸ்புக் தளத்தை அணுகிய விபரங்கள் அனைத்தும் காட்டப்படும். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் எனப் பிரிக்கப்பட்டு இந்த பட்டியல் இருக்கும். இதில் நீங்கள் பயன்படுத்தாத சாதனம், பிரவுசர் மற்றும் நாள் இருப்பின், அதன் அருகே உள்ள End All Activity என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் பேஸ்புக் பார்த்துவிட்டு அதிலிருந்து முறையாக முடித்து வைத்து வெளியேறாமல் இருந்தால், அதுவும் காட்டப்படும். அதனை இங்கிருந்து முடித்துவிடலாம்.


ரகசிய உணர்ச்சி சித்திரங்கள்

கம்ப்யூட்டர் வழியாக நட்பு தொடர்புகளில், நாம் நம் உணர்வுகளைத் தெரிவிக்க, அதற்கென அமைந்த சிறிய படங்களை இணைப்பது வழக்கமாக உள்ளது. இவற்றை எமோட்டிகான் (emotion+icon) என அழைக்கிறோம். பேஸ்புக்கில், பல எமோட்டிகான்கள் உள்ளன. ஆனால், அவை நாம் எளிதாக அறியும் வகையில் இல்லை. நாம் பொதுவாகப் பயன்படுத்துவது :)/ :D/ ^_^ ஆகியவற்றையே. ஆனால், இன்னும் சில உள்ளன. அவை: (y) = வெற்றி எனப்படும் 'தம்ப்ஸ் அப்” அடையாளம். (^^^) =பெரிய வெள்ளை ஷார்க் மீன், :|] = ரோபோ என அழைக்கப்படும் இயந்திர மனிதன், <(") = பெங்குவின் பறவை. இவற்றை நீங்கள் வால் போஸ்ட், சேட், நம் கமெண்ட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். இவற்றை டைப் செய்தவுடனேயே, அவை அந்த சிறிய ஐகானாக மாறும். எடுத்துக் காட்டாக, பெங்குவின் பறவைக்கானதை டைப் செய்தால், உடனே அது சிறிய பெங்குவின் பறவையாக மாறும். (உடனே பேஸ்புக்கில் டைப் செய்து பாருங்கள்.)



மெசஞ்சர் வழியாக பைல் பரிமாற்றம்

பேஸ்புக் மெசஞ்சர் விண்டோவை நீங்கள் திறந்தால், அதில் சிறிய கியர் ஐகான், வலது மேல்புறம் இருப்பதனைப் பார்க்கலாம். இதில் தட்டினால், அதில் "Add Files...", என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே கம்ப்யூட்டரிலிருந்து பைலைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இந்த ஆப்ஷன் சேட் விண்டோவிலும் கிடைக்கும். இதனைப் பெறுபவர், இதில் காட்டப்படும் லிங்க்கில் கிளிக் செய்து பைலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



தலைகீழாக ஆங்கிலம்

பேஸ்புக்கில் நாம் காணும், அல்லது அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள் அனைத்தும் தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கற்பனைக்கான விடையை, பேஸ்புக் தளத்தினை வடிவமைத்தவர்கள், ஓர் ”ஈஸ்டர் எக்” ஆக அமைத்துள்ளனர். இதனைக் காண்பதற்கு, பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட் தளத்தில் மொழி அமைப்பினை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் தளத்தில், General Account Settings > Language எனச் செல்லவும். அங்கு ஏற்கனவே English (US) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில், English upside down என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்துவிட்டால், உங்கள் பக்கத்தில் உள்ள ஆங்கில சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். ஒன்றை கவனத்தில் கொள்ளவும். இதனை எளிதாகப் படிக்க முடியாமல் எரிச்சல் அடைவோம். மாற்றிவிட்ட பின்னர், மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கையில், மெனுக்களில் உள்ள சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். கவனமாக அதனைக் கண்டு, மீண்டும் English US என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இல்லையேல், நீங்கள் கம்ப்யூட்டர் முன்னால் தலைகீழாக சிரசாசனம் செய்து பேஸ்புக் தளத்தினைப் படிக்க வேண்டும். எப்படி வசதி?



பேஸ்புக்கில் வலைமனை (Blog) வசதி

பேஸ்புக் தளத்தில் நம் கருத்துகளைப் பதிவிடுகிறோம். சில படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வெளியிடுகிறோம். சில வேளைகளில், மிகப் பெரிய உரைக்கோவை ஒன்றை பதிவிட விரும்பினால், பேஸ்புக், அதற்கான சிறிய வலைமனை ஒன்றை அமைக்க வசதி தருகிறது. இதற்கு எச்.டி.எம்.எல். தெரிந்திருக்க வேண்டியதில்லை. facebook.com/notes என்னும் முகவரி உள்ள பக்கத்திற்குச் செல்லுங்கள். இங்கு உங்களுடன் நட்பாயிருப்பவர்களின் குறிப்புகள் இருக்கும். இதில் உங்களுடையதையும் இணைக்க விரும்பினால், மேல் வலது மூலையில் உள்ள "+ Write a Note" என்பதில் கிளிக் செய்திடவும். உடன் புதிய வலைமனைப் பக்கம் ஒன்று கிடைக்கும். இதன் மேலாக, படத்தை வைக்க இடம் உண்டு. அடுத்து, உங்கள் கருத்து குறித்த தலைப்பினை அமைக்கலாம். அடுத்து உங்கள் கருத்தை விளக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டலாம். அல்லது எழுதலாம். ஒரே முயற்சியில் நீங்கள் விரும்பியதை எல்லாம், எழுதி அமைக்க முடியவில்லை என்றால், இயன்றதை எழுதி, சேவ் செய்து, பின்னர் வெளியிடலாம்.



பேஸ்புக்கில் உங்கள் இனிய நட்பு

உங்களுடைய பேஸ்புக் இணைய நட்பு குறித்து அறிய www.facebook.com/us என்ற முகவரியை டைப் செய்து காட்டப்படும் தளத்தினைப் பாருங்கள். உங்கள் அனைத்து நண்பர்களின் புகைப்படங்கள், நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் என அனைத்து நடவடிக்கைகளின் அடையாளம் கிடைக்கும். 
 

பின்னால் பார்த்துக் கொள்ள காத்திடு

சில வேளைகளில், பேஸ்புக்கில் நம் நண்பர்கள், முக்கியமான இணைய தளங்களை நாம் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதன் லிங்க் அனுப்பி வைப்பார்கள். நமக்கு அப்போது நேரம் இல்லாததால், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவைப்போம். ஆனால், லிங்க்கினை சேவ் செய்திட மாட்டோம். இது போல “அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்ற விஷயங்களை, சேவ் செய்து வைத்துப் பின்னால் பார்க்க, பேஸ்புக் வழி அமைத்துத் தருகிறது. இந்த டூலின் பெயர் "Save for Later".  எந்தப் பதிவினையாவது சேவ் செய்திட வேண்டும் என்றால், அந்தப் பதிவின் மேல் வலது முனையில் உள்ள சின்ன அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Save "[name of story]" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இது, உங்களுடைய சேவ் செய்யப்பட்ட போல்டருக்கு இந்த பதிவினை அனுப்பி சேவ் செய்திடும். "saved" என்ற பெயரில் ரிப்பன் ஒன்று காட்டப்படும். முதல் முதலாக ஏதேனும் ஒரு பதிவினை சேவ் செய்த பின்னரே இந்த போல்டர் உருவாக்கப்படும். பின்னர் அடுத்தடுத்து சேவ் செய்திடுகையில், அவை இங்கு வைக்கப்படும். அதில் கிளிக் செய்தால், அனைத்து சேவ் செய்யப்பட்டவைகளையும் பார்க்கலாம். 
 


மொத்த பேஸ்புக் செயல்பாடு பார்க்க

நீங்கள் பேஸ்புக் தளத்தில் மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும், அதாவது “அனைத்தும்” மொத்தமாக பார்க்க விருப்பமா? பேஸ்புக் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு போஸ்டிங், படம், விடியோ, தகவல், நண்பர்களுடன் அரட்டை என “அனைத்தும்” பெறலாம். உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தில் Settings > General என்று செல்லவும். அங்கு "Download a copy of your Facebook data" என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அங்கு தரப்படும் வழிகளைப் பின்பற்றவும். நீங்கள் மேற்கொண்ட அனைத்தும் காட்டப்படும். நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்க முடிவு செய்தால், உங்கள் பேஸ்புக் நாட்களை காப்பி எடுத்து வைக்க இந்த டூல் உதவுகிறது. 



நம் பேஸ்புக் வாரிசு யார்?

பேஸ்புக்கில் உள்ள அனைவரும் ஒரு நாள் மரணத்தைச் சந்திக்கத்தான் போகிறோம். அய்யோ! அப்படியானால், நான் இத்தனை நாள் பதிவு செய்து, வளர்த்து ஆளாக்கிய என் பேஸ்புக் தளம் என்னாவது? பேஸ்புக் மட்டுமல்ல. இது அனைத்து சமூக வலைத் தளங்களுக்கும் பொருந்தும். நீங்கள் மட்டுமல்ல, பேஸ்புக்கில் உள்ள உங்கள் நண்பர்களும் மரணத்தைத் தழுவுவார்கள். பேஸ்புக் இதற்காகவே, உங்கள் மரணத்திற்குப் பின், சட்ட ரீதியாக, உங்கள் தளப் பக்கத்தினை ஏற்றுக் கொள்ளும் வாரிசை நியமிக்க வழி செய்துள்ளது. பேஸ்புக் இதனை a legacy contact என அழைக்கிறது. பேஸ்புக்கில் உங்கள் நண்பராய் உள்ள ஒருவரை இதற்கென நியமிக்கலாம். அது உங்கள் மகன் / மகள் / மனைவியாகக் கூட இருக்கலாம். இதற்கு to Settings > Security > Legacy Contact என்று சென்று நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர், உங்கள் பேஸ்புக் தளப்பக்கத்தினை நிர்வகிப்பார். உங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு உங்கள் மறைவு குறித்த தகவலைத் தெரிவிப்பார். 

இவ்வாறு நியமிக்கப்படுபவரை பின் நாளில், நீங்கள் மாற்றவும் செய்திடலாம். உங்கள் இணைய தளப் பக்கத்தினை நீக்கிவிடவும் இங்கு வழி தரப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் பெற https://www.facebook.com/help/1568013990080948 என்ற முகவரியில் உள்ள பேஸ்புக் இணைய தளத்தினைப் பார்க்கவும். மேலே கூறப்பட்டவை மட்டுமின்றி, இன்னும் பல வசதிகள் வெளிப்படையாக இல்லாமல், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் உள்ளன.


0

Friday, 29 April 2016


மாலை நேரத்தில் தவிர்க்க வேண்டியஉணவு


காலை, மதிய, இரவு உணவுகளை விட பல நேரங்களில் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை. கலோரிகள் அதிகமான இவற்றை உண்ட பிறகு எந்த வேலையும் செய்யாமல் நாம் நேரடியாக உட்கார்ந்து வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம். இதனால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. இனி இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனி உணவுகள் பற்றி காணலாம்..
                                                                       சமோசா

டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.
கச்சோரி
எண்ணெய் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் கச்சோரியை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், எண்ணெயில் வறுத்த எந்த உணவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மாலை வேளையில் தவிர்த்துவிடுங்கள்.
                                                                                                                    வடை, பஜ்ஜி
டீ, காப்பியின் உடன் பிறவா சகோதரர்கள் இந்த பஜ்ஜி, போண்டா, வடை போன்றவை. பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள்.
ஜிலேபி
சிலர் மாட்டும் தான் இடைவேளையில் ஜிலேபி, ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.
                                                                                                                        வடா-பாவ்
மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றும் இதில் இருக்கிறது. எனவே, இதை கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது.
0

Saturday, 23 April 2016


மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் தொகுப்பினை அறிமுகப்படுத்திய போது, பயனாளர்கள் பலரும் பாராட்டி, பயன்படுத்தி, அனுபவித்த ஒரு டூல், ஸ்டார்ட் மெனு ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவினை, விண்டோஸ் 95 சிஸ்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர், இதன் தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏதும் தரப்படவில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள், இதனைப் பெரிதும் ரசித்துப் பயன்படுத்தினார்கள். அதனால் தான், விண்டோஸ் 8 சிஸ்டம், ஸ்டார்ட் மெனு இல்லாமல் அறிமுகமானபோது, அனைவரும் திகைத்துப் பின் வாங்கினார்கள். பெரும் அளவில் குழப்பக் கூக்குரல்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்குக் காரணமான பல புரோகிராமர்கள், அலுவலர்களை மைக்ரோசாப்ட் வீட்டுக்கு அனுப்பியது.  மைக்ரோசாப்ட் தன் தவறை உணர்ந்து கொண்டது. என்னதான், புதிய கட்டமைப்பு என்றாலும், பயனாளர்களின் பாசத்திற்குரிய ஒன்றை நீக்கியிருக்கக் கூடாது என்று தன்னைத் திருத்திக் கொண்டது.


விண்டோஸ் 8.1.ல் ஓரளவிற்கு ஸ்டார்ட் மெனு தரப்பட்டது. விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனு முழுமையாக மாற்றப்பட்டு, பயனாளர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. சில கூடுதல் வசதிகளும் இதில் இணைக்கப்பட்டன. அதே நேரத்தில், தான் முயற்சி செய்து வழங்கிய டைல்ஸ்கள் கொண்ட இடைமுகத்தினையும், விண்டோஸ் 10ல் தர மைக்ரோசாப்ட் தயங்கவில்லை. மக்கள் விரும்பி, மகிழ்ந்து பயன்படுத்தும் இந்த ஸ்டார்ட் மெனு குறித்து இங்கு பார்க்கலாம்.
 

எதற்காக ஸ்டார்ட் மெனு?

விண்டோஸ் சிஸ்டத்தில், புரோகிராம்களை இயக்க, ஸ்டார்ட் மெனு ஒரு தொடக்க நிலை கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டது. விண்டோஸ் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, டெஸ்க்டாப், புரோகிராம்களை இயக்க ஒரு தளம் அல்ல; அந்தப் பணியை ஸ்டார்ட் மெனு மூலமே மேற்கொண்டு வந்தோம். ஸ்டார்ட் மெனுவினை திரையின் இடது மூலையில் தரப்படும் ஐகானில் கிளிக் செய்து அல்லது விண்டோஸ் கீயினை அழுத்திப் பெற்றோம். இந்த இரு வழி செயல்பாடுகளிலும், விண்டோஸ் புரோகிராம்கள் நமக்கு ஒரு கொத்தாகக் கிடைக்கப் பெற்றன. ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், நமக்கு உடனே புரோகிராம் இயக்கம் கிடைத்து வந்தது. அந்த அளவிற்கு அது ஓர் எளிதான செயலாக இருந்தது. 
 


விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனுவில் என்ன சிறப்பு?

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் கிடைக்கும் ஸ்டார்ட் மெனு, வழக்கமான பாரம்பரிய ஸ்டார்ட் மெனுவின் அம்சங்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 7 வரை நாம் பழகி வந்த ஸ்டார்ட் மெனு, அதே பயன்களைச் சற்றும் குறைவில்லாத வகையில் கொண்டதாக புதிய ஸ்டார்ட் மெனு உள்ளது. அதே நேரத்தில், பெரும்பாலான மக்கள் பார்த்து சற்று அச்சப்பட, குழப்பமடைந்த, விண்டோஸ் 8ல் தரப்பட்டுள்ள டைல்ஸ் வகை ஸ்டார்ட் மெனுவும் தரப்பட்டுள்ளது. 

சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு இடது பக்கம் பழைய மெனுவினையும், வலது பக்கம் புதிய டைல்ஸ்களையும் கொண்டதாக உள்ளது. இதனால், புரோகிராம்களை அறிந்து இயக்க, நமக்கு இரு வழிகள் கிடைக்கின்றன. 
இடதுபுறத்தில், அப்ளிகேஷன்கள் / புரோகிராம்கள், நமக்கு அகர வரிசையில் கிடைக்கின்றன. வலது பக்கம் உள்ள புரோகிராமிற்கான டைல்ஸ்களை, நம் விருப்பப்படி, எந்த வரிசையிலும் அமைத்து இயக்கலாம். இதனால், நாம் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை, குழுவாக அமைத்து எளிதாக இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். சிலர், மைக்ரோசாப்ட் ஆபீஸ் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரு குழுவாகவும், போட்டோக்கள் சம்பந்தப்பட்டவற்றை ஒரு குழுவாகவும் அமைத்து இயக்கி வருவது இதற்கான ஓர் எடுத்துக் காட்டாகும்.  சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு, நம் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது. இதனை எப்படி வளைக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

 


அளவை மாற்றலாம்

ஸ்டார்ட் மெனு மிகவும் அகலமாகவோ அல்லது மிகக் குறுகியதாகவோ உள்ளதாக நீங்கள் உணர்ந்தால், அதன் அளவினை மாற்றலாம். மிகவும் சிறியதாகவோ அல்லது மிக உயரமானதாக இருப்பதாக எண்ணினால், அதனையும் மாற்றலாம். கர்சரை அதன் முனைகளில் ஒன்றில் வைத்து, மவுஸின் இடது பட்டனை அழுத்திப் பிடித்தவாறே இழுக்க வேண்டும். இதன் மூலம், ஸ்டார்ட் மெனுவின் அளவினை, வடிவத்தினை நீங்கள் விரும்பும்படி அமைத்துக் கொள்ளலாம். ஸ்டார்ட் மெனுவின் அளவு மிகச் சிறியதாக உள்ளது என்று எண்ணி, அதன் அளவைப் பெரிதாக்கும்போது, சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், ஸ்டார்ட் மெனு சார்ந்த அனைத்தின் அளவினையும் அது பெரியதாக்கிவிடும். இதற்கு Start | Settings | System | Display என்று செல்லவும். பின்னர் ஸ்லைடரை வலது புறமாக நகர்த்தவும். இதன் பின்னர், Apply என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Logout/Restart to see the changes என கிளிக் செய்து வெளியேறவும்.

குழுவாக மாற்றி அமைத்தல்

டைல்ஸ்களை குழுவாக மாற்றி அமைக்க, விருப்பப்படும் டைல் மீது கிளிக் செய்தவாறே, எங்கு அதனை வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த இடம் வரை இழுத்து விடவும். இந்த குழுவிற்குப் புதுப் பெயரிட, குழுவின் வலதுபுறமாக உள்ள, மூன்று சிறிய பட்டைக்கோடுகளின் மீது கிளிக் செய்து, பெயரினை டைப் செய்திடவும். உங்களுக்குத் தேவைப்படாத டைல் என்று நீங்கள் எண்ணும் டைல் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். பின்னர், Unpin from Start என்பதில் கிளிக் செய்திடவும். இங்கிருந்தவாறே, புரோகிராம்களை 'அன் இன்ஸ்டால்' என்றபடி நீக்கலாம். ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைந்து தரப்பட்டுள்ள புரோகிராம்களை, இவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திட முடியாது. குறிப்பாக, “லைவ் டைல்ஸ்” எனச் சில அழைக்கப்படுகின்றன. அதாவது, மாறிக் கொண்டே இருக்கும் தகவல்களைத் தரும் டைல்களை இவ்வாறு அழைக்கின்றனர். இவை உங்களுக்குத் தேவை; ஆனால், மாறிக் கொண்டே இருக்கும் தகவல்களைப் பார்க்க விரும்பவில்லை என்றாலும், அதற்கான வழிகளை மேற்கொண்டு அமைக்கலாம். 

லைவ் டைல் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், More என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Turn Live Tile off என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். பெரும்பாலான டைல்களின் அளவினை மாற்றி அமைக்கலாம். இதற்கு அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் தேவையான ஆப்ஷனைக் கிளிக் செய்தால் போதும். இவற்றிற்கு, ஸ்டார்ட் மெனுவின் இடது புறத்தில், ஷார்ட் கட் இணைக்கலாம். இதற்கு Start | Settings | Personalization | Start என்று செல்லவும். இங்கு, CHOOSE WHICH FOLDERS APPEAR ON START என்ற பிரிவில், இயக்கநிலை (On) / இயக்கம் இல்லா நிலை (Off) என்பதில் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
 

வண்ணம் மாற்றி அமைக்கலாம்: 

டைல்களின் வண்ணத்தினை, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கலாம். இதற்கு Start | Settings | Personalisation | Colours என்று செல்லவும். பின்னர், Show colour on Start, taskbar and action centre என்பதனை இயக்கவும். இங்கு விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது, விண்டோஸ் சிஸ்டமே, உங்கள் டெஸ்க்டாப் பின்புல வண்ணத்திற்கேற்ற வகையில் ஒரு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கும்.



0