Monday 13 June 2016

ஹபிள் 'கண்களில்' சிக்கிய மர்மமான, தனித்த - யுஜிசி 4879..!

மற்ற நட்சத்திரங்களை சுற்றியுள்ள கிரகங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகும். பிரபஞ்சத்தில் உள்ள பிற விண்வெளி பொருட்களை விடவும் கிரகங்கள் மிகவும் சிறிய அளவிலான ஒன்றாகும். அதிலும் அந்த கிரகங்கள் ஆனது தான் சுற்றுப்பாதை நட்சத்திரத்தை விட பில்லியன் மடங்கு மங்கலான ஒன்றாகத்தான் இருக்கின்றன. அவைகளையெல்லாம் - சாத்தியமான முறையில் கண்டறிய உருவாக்கப்பட்டது தான் - ஹபிள்..! 

ஹபிள் என்று அழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியானது (Hubble Space Telescope) டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். இதுவரையிலாக பல எக்ஸோபிளான்ட்களை கண்டுபிடித்துள்ள ஹபிள் தொலைநோக்கியின் கண்களில் சமீபத்தில் மிகவும் மர்மமான ஒரு விண்மீன் சிக்கியுள்ளது. 


ஹபிள் தொலைநோக்கி மூலம் ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ள ஒரு மர்மமான தனித்த, குள்ள விண்மீனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு யுஜிசி 4879 என்று பெயரிடப்பட்டுள்ளது. 


கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள மர்மமான விண்மீன் ஆனது நம் அண்டை விண்மீன் திரள்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குளறுபடியாகவும், சிறியதாகவும் இருக்கிறது, உடன் ஒரு கம்பீரமான சுழற்சி ஒழுங்கு நிலையை இழந்துள்ளது. 


யுஜிசி 4879 ஆனது லியோ ஏ-வின் அருகாமை விண்மீன் என்றும், அதன் இடைப்பட்ட தொலைவு சுமார் 2.3 மில்லியன் ஒளியாண்டுகள் என்பதை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி வெளிப்படுத்தியுள்ளது. 


இந்த மர்ம விண்மீன் சுற்றியுள்ள எந்த விண்வெளி பொருட்கள் மற்றும் விண்மீன் திரள்களுடன் இடைத்தொடர்பில் இல்லை என்பதால் இதனை கொண்டு நட்சத்திர உருவாக்கம் மற்றும் இது ஏன் இவ்வளவு ஒழுங்கற்ற நிலையில் உள்ளது என்பதை துல்லியமாக ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


யுஜிசி 4879 மற்றும் பிற நட்சத்திரங்கள் எல்லாம் பெரும்பான்மையாக பிக் பாங்க்-கிற்கு பிறகு வந்த முதல் நான்கு பில்லியன் ஆண்டுகளில் உருவானதாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 


பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும், பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாகும்..!

No comments:

Post a Comment