படங்களைப் பகிர்ந்து கொள்வதும், நண்பர்களை அந்தப் படங்களுக்கு டேக் (Tag) செய்வதும், பேஸ்புக்கில் வழக்கமான ஒரு பழக்கமாகும். சில வேளைகளில் நாம் ஒரு படத்தில் இருக்கிறோமோ இல்லையோ, அல்லது நமக்கு அந்தப் படம் பிடிக்கிறதோ இல்லையோ, நம் நண்பர்களில் சிலர் நம்மை இணைத்துவிடுகின்றனர். இது சில வேளைகளில் நமக்கு எரிச்சலைத் தருகிறது. ஒரு சில படங்கள் நம் நல்ல பெயரைக் கெடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது. அது போன்ற வேளைகளில், இதனைக் கட்டுப்படுத்த முடியாதா என்று ஆசைப்படுகிறோம். எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.
நிலை 1: முதலில் பேஸ்புக்கில் லாக் இன் செய்து, Settings கிளிக் செய்திடவும். இது வலது ஓரத்தில், தலைகீழாகக் காணப்படும் முக்கோணத்தில் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் இருக்கும்.
நிலை 2: இனி கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம் உள்ள மெனுவில் Timeline and Tagging என்பதைக் கிளிக் செய்திடவும். இப்போது Timeline and Tagging Settings என்ற விண்டோ கிடைக்கும்.
நிலை 3: இதில் மூன்றாவது பிரிவாக How can I manage tags people add and tagging suggestions?
என்ற பிரிவு இருக்கும். இதில் உங்களை டேக் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பல ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் வகையில் செட்டிங்ஸ் அமைத்து வெளியேறவும். இனி நீங்கள் இடம் தராமல், யாரும் உங்களை எந்த பதிவுடனோ அல்லது போட்டோவுடனோ டேக் செய்திட முடியாது.
என்ற பிரிவு இருக்கும். இதில் உங்களை டேக் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பல ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் வகையில் செட்டிங்ஸ் அமைத்து வெளியேறவும். இனி நீங்கள் இடம் தராமல், யாரும் உங்களை எந்த பதிவுடனோ அல்லது போட்டோவுடனோ டேக் செய்திட முடியாது.
ஏற்கனவே டேக் செய்த போட்டோக்களை என்ன செய்திடலாம்? இந்தப் போட்டோக்களை நீக்க, போட்டோவினை ஆல்பத்திலிருந்து திறக்கவும். உங்கள் பெயர் அருகே, கர்சரைக் கொண்டு சென்றால், Remove tag என்று காணப்படும். அதில் கிளிக் செய்திடவும். இந்த வசதி காட்டப்படவில்லை என்றால், கீழாக வலது பக்கம் கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலைக் காணவும். பின்னர் இதில், Remove Tag. என்பதில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவுடன் கிடைக்கும் கட்டத்தில், ஏன் நீங்கள் நீக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்படும். இதற்குப் பதில் அளிக்காமலும் விடலாம். டேக் நீக்கப்படும்.
சில வேளைகளில், சில போட்டோக்களில் நீங்கள் டேக் செய்யப்பட்டிருப்பீர்கள். அதனை நீக்க விரும்பமாட்டீர்கள். ஆனால், அது குறித்து வரும் லைக், கமெண்ட் குறித்து தகவல் உங்களுக்குத் தேவை இல்லை என எண்ணலாம். இதற்கு போட்டோவினைக் கிளிக் செய்து, கமெண்ட் பாக்ஸுக்கு மேலாக உள்ள, Unfollow Post என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் டேக் செய்த போட்டோவில் இணைக்கப்படும் தகவல்கள் கிடைக்காது.
No comments:
Post a Comment