Monday 13 June 2016

மின்சாரம் இல்லாமல் வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி கண்டுபிடிப்பு.!

மற்ற ஊர்களில் வெயில் காலத்தில் வெயில் காலத்தில் மட்டும் தான் வெயில் வாட்டி வதைக்கும், ஆனா நம்ம ஊரில் தான் வெயில் எப்பவும் வாட்டி வதைக்கின்றது. வெயிலில் இருந்து தப்பிக்க பணம் இருப்பவர்கள் வீட்டில் குளிர்சாதன பெட்டியை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் பணம் இல்லாதவர்கள் மனம் தரளாமல் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தங்களால் முடிந்தளவு முயற்சிக்கின்றனர். 


இவ்வாறு முயற்சிப்பவர்களுக்கு உதவவும், தானும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் வங்கதேச விஞ்ஞானி ஒருவர் குறைந்த செலவில் குளிர்சாதன பெட்டி ஒன்றை வடிவமைத்துள்ளார். 

வங்கதேசத்தை சேர்ந்த அஷிஸ் பால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி குளிர்சாதன பெட்டியை வடிவமைத்துள்ளார். 


முற்றிலும் மின்சாரம் இன்றி இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியை வடிவமைக்க குறைந்த அளவு பணம் போதும் என்பதோடு இதற்கு ஈகோ கூலர் என்றும் பெயரிட்டுள்ளார்.

காற்று விரிவடையும் போது குளிராவது தான் இந்த ஈகோ கூலர் கருவியின் அடிப்படை தந்திரம் ஆகும். 


வெயிலில் இருந்து தப்பிக்க மிகவும் குறைந்த செலவில் கிடைக்கும் இந்த குளிர்சாதன பெட்டியானது வங்கதேசம் முழுக்க சுமார் 25,000 வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனது.

இந்த ஈகோ கூலர் கருவி பயன்பாடுகளுக்கு ஏற்ப பயன் அளிக்கும். எனினும் சாதாரண அளவு அறையில் வெப்பநிலையை சுமார் 5 டிகிரி வரை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. 


இது எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிந்து கொள்ள வாய் மூலம் காற்றை வீசி அதனினை கையில் உணர முடியும். 



இதே முறையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் காற்றை அழுத்தி உள்ளே அனுப்புவதால் காற்று குளிர்விக்கப்படுகின்றது. 

ஈகோ கூலர் கருவியை கண்டுபிடித்தவர்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தங்களது இணையதளத்தில் விளக்கியுள்ளனர்.


No comments:

Post a Comment