லெனோவோ நிறுவனம் புதிய வைப் கே5 என்ற புதிய 4ஜி ஸ்மார்ட்போன் கருவியினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் மிகவும் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கருவிக்கான முன்பதிவு ஜூன் மாதம் 22ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோ நிறுவனம் தற்சமயம் நடைபெற்று வரும் மொபைல் வேல்டு காங்கிரஸ் 2016 விழாவில் லெனோவோ வைப் கே5 மற்றும் கே5 ப்ளஸ் என இரு கருவிகளை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. லெனோவோ வைப் கே5 ப்ளஸ் கருவியின் இந்திய விலை ரூ.8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..
லெனோவோ வைப் கே5 கருவியானது கே5 ப்ளஸ் போன்ற வடிவமைப்பு கொண்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியானது பிளாட்டினம் சில்வர், ஷாம்பெயின் கோல்டு மற்றும் கிராஃபைட் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.
லெனோவோ வைப் கே5 கருவியில் 5.0 இன்ச் எச்டி திரை 720*1280 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.
கே 5 நோட் கருவியானது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 415 பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்னாப்டிராகன் 415 பிராசஸர் குவிக் சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் பயன்படுத்துவதால் கருவியினை 75 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்திட முடியும்.
மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
இதோடு 4ஜி, எல்டிஇ, 3ஜி, வை-பை, ப்ளூடூத், மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், ஆணட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளன.
இத்தனை அம்சங்கள் கொண்ட லெனோவோ வைப் கே5 நோட் கருவியானது 2750 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
லெனோவோ வைப் கே5 நோட் மற்றும் வைப் கே5 நோட் ப்ளஸ் கருவிகளுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கின்றது. வைப் கே5 நோட் ப்ளஸ் கருவியில் ஃபுல்எச்டி திரை மற்றும் சற்றே அதிக திறன் கொண்ட குவால்காம் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ வைப் கே5 ஸ்மார்ட்போன் கருவியானது சமீபத்தில் வெளியிடப்பட்ட லீஈகோ லீ 1எஸ், சியோமி ரெட்மி நோட் 3 மற்றும் மோட்டோரோலா மோட்டோ ஜி3 போன்ற கருவிகளுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என கூறப்படுகின்றது.
சமீபத்தில் கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் லெனோவோ நிறுவனம் டாப் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment