Sunday, 12 June 2016

இருதயமே இல்லாமல் ஒரு வருடத்திற்கு மேலாக வாழ்ந்த இளைஞர்..!

குருதிச் சுற்றோட்டத் தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு தசையாழ் ஆன ஓர் உறுப்பு தான் - இருதயம்..!

ஒரு சராசரி மனிதனின் இருதயமானது நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும் என்பதும், அதன் துடிப்பு நின்றதும் மனிதனின் மரணம் நிகழும் என்பதும் நாம் அறிந்த ஒன்றே. ஆனால், இருதயமும் இன்றி இருதய துடிப்பும் இன்றி வாழும் மனிதரை பற்றி தெரியுமா..?

AuMOPYT.jpg

ஸ்டான் லார்க் (Stan Larkin) என்ற 25 வயது இளைஞருக்கு இருதயம் அவரின் உடலுக்குள் இல்லை, அவரின் முதுகில் ஒரு பேக்-பாக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறது. 

uLxI2WB.jpg

முழுமையான ஒரு செயற்கை இருதயமான (artificial heart) அது 24 மணி நேரமும் என 555 நாட்களுக்கு இயங்கும் வண்ணம் வடிவமைக்கப் பெற்றுள்ளது.

SSMiBsg.jpg

அவர் அணிந்திருக்கும் செயற்கை இருதயமானது, அவரது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை நிகழ்த்தி அவரை உயிருடன் வைத்திருக்க உதவுகிறது. 

lqeq8dj.jpg

இந்த செயற்கை இருதயத்தின் வெற்றி மூலம் முழுமையான இருதய செயலிழப்பு நேரிட்டு இருதய தானத்திற்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கும் இதை நடைமுறைப் படுத்தலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

1vGh1bn.jpg

2014-ல் ஸின்கார்டியா (Syncardia) எனப்படும் இந்த செயற்கை இருதயமானது ஸ்டானுக்கு தான் முதன்முதலாக பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு அவர் டிஸ்சார்ஜூம் செய்யப்பட்டார். 

ZyES0jr.jpg

எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இதய செயலிழப்பு ஏற்படுத்தும் மரபணு இதய நிலையான (familial cardiomyopathy) குடும்ப இதயத்தசைநோயால் ஸ்டான் லார்க் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

8iqsOpb.jpg

பிற தொழில்நுட்பங்கள் வேலை செய்ய போவதில்லை என்ற அவரின் தனிப்பட்ட உடற்கூறு நிலைமை மற்றும் இருதய தானத்திற்காக காத்திருக்க முடியாத சூழ்நிலையில் ஸ்டானின் இருதயம் நீக்கப்பட்டு ஸின்கார்டியா சாதனம் பொருத்தப்பட்டது. 

kViSY8c.jpg

மற்றொரு இருதய செயலிழப்பு சாதனமான டிபிப்ரில்லடர்ஸ் (defibrillators)போன்றவை, பகுதி இதய செயலிழப்புக்கு உதவுமே இன்றி இருபுறமும் செயல் இழந்த இருதயத்திற்கு ஸின்கார்டியா சாதனம் தான் சிறந்ததாக நம்பப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. 

k582o6Y.jpg

ஸ்டானின் சகோதரரான டொமினிக்கிற்கும் இதே நிலை ஏற்பட்டு இருவருக்கும் ஒரே நேரத்தில் செயற்கை இருதயம் பொருதப்பட்டது எனினும் ஒரு சில வாரங்களில் டொமினிக்கிற்கு இருதய தானம் கிடைத்துவிட்டது. 

gm9xEy8.jpg

ஆனால், ஸ்டான் இன்னும் ஒரு ஆண்டு வரையிலாக இருதய தானத்திற்காக காத்திருக்க வேண்டும் என்பதால் அது வரையிலாக ஸ்டானை ஸின் கார்டியா உயிர்ப்புடன் வைத்திருக்கும் என திட்டமிடப்பட்டு அவருக்கு அந்த சாதனம் பொருத்தப்பட்டது. 

3dm7dxw.jpg

எளிதில் சுமந்து கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸின்கார்டியா ஆனது 6 கிலோ (அதாவது 13.5 பவுண்ட் எடை கொண்ட பையுடனும் கூடிய ஒரு சாதனமாகும். 

GQMrC3e.jpg

நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கப்படும் ஸின்கார்டியாவானது உடல் முழுவதும் பிராணவாயு உடன் இரத்த ஓட்டத்தையும் நிகழ்த்துகிறது. 


கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி இருதய தானம் பெறப்பட்ட ஸ்டான் தற்போது அணைத்து வகையான மருத்துவ செயல்முறைகளிலும் இருந்து விடுபட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment