Monday, 9 May 2016

சாம்சங் புதுவரவு : கேலக்ஸி ஜெ5, ஜெ7 (2016) அறிமுகமானது.!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஜெ5 மற்றும் ஜெ7 2016 மாடல் கருவிகளை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி ஜெ5 ரூ.13,990 மற்றும் ஜெ7 ரூ.15,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதோடு கேலக்ஸி ஜெ7 கருவியுடன் ஆறு மாதங்களுக்கு சுமார் 30ஜிபி வரை ஏர்டெல் இண்டர்நெட் டேட்டா வசதியும் வழங்கப்பட இருக்கின்றது. இச்சலுகை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் மே மாதம் 10 ஆம் தேதி 12.00 மணிக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

lZ5rZHm.jpg

ஹார்டுவேர்

சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் இரு கருவிகளிலும் அட்டகாசமான ஹார்டுவேர் மற்றும் புதிய மெட்டல் ஃபிரேம் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

4KimGtp.jpg

திரை

கேலக்ஸி ஜெ7 (2016) 5.5 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்இடி திரை, எக்சைனோஸ் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

qX7lfb5.jpg

கேமரா

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும், இவை இரண்டிலும் f/1.9 அப்ரேச்சர் லென்ஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

UzsASin.jpg

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, என்எஃப்சி, வை-பை, ப்ளூடூத் வி4.1 வழங்கப்பட்டுள்ளதோடு 3300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதோடு 50 சதவீத டேட்டா சேமிக்கும் டேட்டா சேவிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

HuOlexs.jpg

கேலக்ஸி ஜெ5 (2016)

கேலக்ஸி ஜெ5 (2016) கருவியில் 5.2 இன்ச் ஏம்ஓஎல்இடி திரை, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

ldfDsh8.jpg

கேமரா

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் 3100 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment