Tuesday, 10 May 2016

தமிழ் சினிமா அப்டேட்ஸ்.....

தமிழ் சினிமா அப்டேட்ஸ்.....




தேர்தலில் விஜய் ஆதரவு யாருக்கு


vijay_narpanimandaram_m1.jpg

இளையதளபதி விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே அகில இந்திய இளையதளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்து, விஜய் அவர்கள் இந்த தேர்தலில் நடுநிலை வகிப்பதாக அனைத்து நகர மன்ற நிர்வாகிகளுக்கும் கூறியிருந்தார். தற்போது அவர் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனந்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்த கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.


ஆனால் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைபாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன்.

இந்நிலையில் சில ஊடகங்களில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே இளையதளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்து கொள்கிறேன்.

இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.


"எந்திரன்" சாதனையை முறியடித்தது ''தெறி''



கோலிவுட் திரையுலகில் விநியோகிஸ்தர்களுக்கு அதிக லாபம் தந்த திரைப்படமாக அதாவது ரூ.55 கோடி ஷேர் கிடைத்த படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படம் இருந்தது.

ஆனால் தற்போது இந்த சாதனையை விஜய்யின் 'தெறி' முறியடித்துள்ளது. கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' திரைப்படம் 25 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் விநியோகிஸ்தர்கள் ஷேர் ஆக மட்டும் எந்திரன் சாதனையான ரூ.55 கோடியை எட்டிப்பிடித்துவிட்டது.

மேலும் 25 நாட்களையும் தாண்டி தற்போது இந்த படம் 40 முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்னும் சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் ஓடிக்கொண்டிருப்பதால் விநியோகிஸ்தர் ஷேர் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

'தெறி'யின் இந்த சாதனையை சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...



அஜித் படத்தில் செய்ததை ரஜினி படத்திலும் செய்வேன்- சுதன்ஷூ பாண்டே



பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் முடிந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


இந்த படத்தில் அக்ஷயகுமார் மெயின் வில்லனாக நடித்தபோதிலும், 'பில்லா 2' படத்தின் வில்லன் சுதன்ஷூ பாண்டேவும் இன்னொரு வில்லனாக நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


தனது கேரக்டர் குறித்து சுதன்ஷூ பாண்டே கூறியதாவது: இந்த படத்தின் முதல்பாகமான 'எந்திரன்' படத்தில் விஞ்ஞானியாக நடித்திருந்த Danny Denzongpa அவர்களின் மகனாக நான் நடிக்கின்றேன். இந்த படத்தில் நானும் ஒரு விஞ்ஞானிதான்.


அக்ஷய்குமாருடன் நான் இணைந்து நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் படமாக்கப்பட்டது. விரைவில் ரஜினியுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

என்னுடைய கேரக்டருக்காக ஐந்துவித ஹேர்ஸ்டலை ஷங்கர் தேர்வு செய்து அவற்றில் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். மேலும் எனது விஞ்ஞானி கேரக்டருக்காக அமெரிக்காவில் இருந்து ஸ்பெஷல் கண்ணாடியை ஷங்கர் வரவழைத்துள்ளார்' என்று கூறினார்.

எனது முதல் தமிழ்ப்படமான 'பில்லா 2' படத்தில் நானே தமிழில் டப் செய்திருந்தேன். அதேபோல் ஷங்கர் அனுமதித்தால் '2.0' படத்திலும் தமிழில் டப் செய்ய காத்திருக்கின்றேன்' என்று சுதன்ஷூ பாண்டே கூறியுள்ளார்.


முதல் பேயுடன் இணையும் ராகவா லாரன்ஸ்



சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் 'ரஜினிமுருகன்' படத்தில் முக்கிய வேடம் ஏற்று அனைவரின் மனதை கவர்ந்த நடிகர் ராஜ்கிரண் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன்னர் 'கொம்பன்', மஞ்சப்பை ஆகிய படங்களிலும் அவர் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள 'நாகா' என்ற படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ராஜ்கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ள த்ரில் படமான 'நாகா' படத்தில் ராஜ்கிரணின் கேரக்டர் படத்திற்கு பக்கபலமாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


வேந்தர் மூவீஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படம் 'முனி' படங்களின் சீரியல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் தற்போது 'மொட்டசிவா கெட்டசிவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் அவர் 'நாகா' படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏ.ஆர்.முருகதாஸ் சாதனையை முறியடித்த அட்லி

enthiran_theri_1052016_m.jpg

இளையதளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று விநியோகிஸ்தர்களுக்கு நல்ல வசூலை தந்தது என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் படங்களில் அதிக வசூல் தந்த படங்களின் பட்டியலில் மேற்கண்ட இரண்டு படங்கள் முன்னணியில் இருந்தது.

ஆனால் தற்போது இந்த பட்டியலில் விஜய்+அட்லி கூட்டணியின் 'தெறி' திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தமிழக அளவில் விநியோகிஸ்தர்களுக்கு அதிக லாபம் தந்த படமாக இருந்த 'எந்திரன்' பட சாதனையை 'தெறி' முறியடித்தது என்பதை முதலில் பார்த்தோம். இந்நிலையில் விஜய் படங்களிலேயே அதிக வசூல் தந்த படமாக தற்போது 'தெறி' முதலிடத்தை பெற்றுள்ளது.

மேலும் கடந்த வெள்ளியன்று வெளியான '24' படம் வெளிவந்து நல்ல ரிசல்ட்டை பெற்றபோதிலும் 'தெறி' படம் 25வது நாட்களை கடந்து இன்னும் நல்ல வசூலை பெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக அதிக வசூல் பெற்ற படமாக 'தெறி' விளங்கி வரும் நிலையில் இந்த சாதனையை எந்த படம் முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment