ஃபேஸ்புக் கணக்கு துவங்க குறைந்த பட்ச வயது 13 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறுவன் தனது விடா முயற்சியால் அந்நிறுவனத்திடம் இருந்து பரிசையும் பாராட்டையும் பெற்றுள்ளான்.
ஃபேஸ்புக் சமூக வலைதளம் தகவல் பரிமாற்ற முறையை முற்றிலுமாக மாற்றியமைத்து இன்று வியாபார ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக 10 வயது சிறுவனக்கு ஃபேஸ்புக் நிறுவனம் பரிசு தொகையை அறிவித்துள்ளது.
ஜானி
இன்ஸ்டாகிராம் சர்வர்களில் நுழைந்து பயனர்கள் பதிவு செய்த வார்த்தைகளை அழிக்க வழிமுறையை ஜானி கண்டுபிடித்ததாக ஃபின்லாந்து செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பக் பவுண்டி ப்ரோகிராம்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் பக் பவுண்டி ப்ரோகிராம் அதாவது பிழை கண்டறிந்தவருக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் $10,000 இந்திய மதிப்பில் ரூ. 6,65,299.50 வழங்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம்
புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் இன்ஸ்டாகிராம் செயலியில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்த வார்த்தைகளை தன்னால் அழிக்க முடிந்ததாக ஜானி தெரிவித்தார்.
ஜஸ்டின் பீபர்
இதோடு இன்ஸ்டாகிராமில் ஜஸ்டின் பீபரின் கமென்ட்களை அழிக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இணையதளம்
ஜானியின் தநத்தை கூறும் போது ஜானி மற்றும் அவரது சகோதரர் இணைந்து பல்வேறு இணையதளங்களில் பிழைகளை கண்டறிந்திருப்பதாக தெரிவித்தார்.
பக் பவுண்டி ப்ரோகிராம்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் பக் பவுண்டி ப்ரோகிராமில் யார் வேண்டுமானாலும் பிழைகளை கண்டறிந்து அதற்கான பணத்தை பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூகுளின் செக்யூரிட்டி ரிவார்டு ப்ரோகிராம் போன்றதாகும்.
பிழை
ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய தகவலின் படி 2015 ஆம் ஆண்டில் மட்டும் அந்நிறுவனம் உலகம் முழுவதும் இருந்து ஆராய்ச்சியாளர்களிடம் மொத்தம் 13,000 பிழைகளுக்கான சமர்ப்பிப்புகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
பணம்
2015 ஆம் ஆண்டில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் $936,000 இந்திய மதிப்பில் ரூ.62,283,733.20 வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment