மே மாதம் 17 ஆம் தேதி மோட்டோ ஜி4 கருவியினை வெளியிட மோட்டோரோலா திட்டமிட்டுள்ளது. இதனினை தனது ட்விட்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டது. இதோடு மோட்டோரோலா மோட்டோ ஜி4 கருவியானது அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் இந்திய தலைவர் அமித் போனி இதே தகவலை தனி செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "இந்திய இணடர்நெட் சந்தையில் மோட்டோ வளர்ச்சி அதிகரித்திருப்பதால், இதே முறையை எங்களது புதிய கருவிகளின் வெளியீட்டிற்கும் பயன்படுத்துவோம். இதற்கென அமேசான்.இன் தளத்துடன் பிரத்யேக ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. "
மோட்டோரோலா
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அறிமுக விழாவிற்கான அழைப்பிதழ்களை கடந்த மாதம் விநியோகித்தது. எனினும் அதில் தேதியை தவிற எவ்வித தகவலும் குறிப்பிடப்படவில்லை.
இந்தியா
லெனோவோ நிறுவனத்தின் மோட்டோரோலா தனது அடுத்த தலைமுறை மோட்டோ ஜி கருவியை முதலில் இந்தியாவில் வெளியிடுவதோடு மோட்டோ ஜி4 கருவியுடன் மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விளம்பரம்
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி4 கருவியை மற்ற கருவியுடன் ஒப்பிட்டு பல்வேறு விளம்பரங்களை பதிவு செய்து வருகின்றது. இவைகளில் கேம் விளையாடும் போது ஹேங் ஆவது, குறைந்த பேட்டரி மூலம் ஸ்விட்ச் ஆஃப் ஆவது உள்ளிட்ட சில பிரச்சனைகளை குறிப்பிட்டிருந்தது.
தகவல்
மோட்டோ ஜி4 மற்றும் மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவி குறித்த தகவல்கள் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சில முறை இணையங்களில் ரகசியமாக கசிந்திருக்கின்றன, எனினும் எந்த தகவலும் மோட்டோரோலா நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் கருவியில் 5.5 இன்ச் ஃபுல்-எச்டி திரை, ஆக்டா கோர் பிராசஸர், 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 13 எம்பி ப்ரைமரி கேமராவும் மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியில் கைரேகை ஸ்கேனர் மற்றும் 16 எம்பி ப்ரைமரி கேமராவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெள்ளை
ஏற்கனவே ரகசியமாக வெளியான புகைப்படங்களில் வெள்ளை நிறம் கொண்ட மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியானது சதுர வடிவத்தில் கைரேகை ஸ்கேனர் பதித்த ஹோம் பட்டன், ஸ்பீக்கர், முன்பக்க கேமரா, ப்ரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ் சென்சார் போன்றவை காணப்பட்டன.
No comments:
Post a Comment