Wednesday, 4 May 2016

1971-ல் கடலுக்குள் இருந்து கிளம்பிய யூஎப்ஓக்கள்..! நிஜம்தானா..?

1952-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர பகுதியில் இருக்கும் நியூ ஜெர்சியில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத பறக்கும் பொருள் (Unidentified flying object - UFO) ஒன்றின் தெளிவான புகைப்படம் சிக்கியது. 

1940 மற்றும் 1950-களில் விசித்திரமான இந்த பறக்கும் பொருள்கள் - பறக்கும் சாசர் (Flying Saucer) அல்லது பறக்கும் டிஸ்க் (Fluying Disc) என்ற பொது பெயரில் உலா வந்தது. 

அவைகளை "அங்கு பார்த்தேன்", "இங்கு பார்த்தேன்" என்று கூறப்பட்டு வந்த நிலையில் தெளிவாக புகைப்படத்தில் சிக்கிய அடுத்த ஆண்டே, அதாவது 1953-ஆம் ஆண்டு அந்த விசித்திரமான பறக்கும் பொருளுக்கு யூஎப்ஓ (UFO) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டு பின் அவைகள் பூமி கிரகத்தை சேர்ந்த பொருள் அல்ல என்ற நம்பிக்கை பரவியது..! 

V5PsjWm.jpg

1971 : 

விண்ணில் தோன்றும் யூஎப்ஓக்கள் வழக்கத்திற்கு மாறாக 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடலில் இருந்து கிளம்பின, மேலும் அவைகள் தெளிவான முறையில் புகைப்படங்களிலும் சிக்கின. 

be0Hkdv.jpg

பதிவு : 

உலகை உலுக்கிய அந்த புகைப்படங்களை அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் ட்ரேபாங்க் எஸ்எஸ்என்-674 (USS Trepang SSN-674) பதிவு செய்தது. 

TLQwTUs.jpg

நெருக்கமான சந்திப்பு : 

வெளியான புகைப்படங்கள் அமெரிக்க கடற்படை படைகளுக்கும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு "நெருக்கமான சந்திப்பு" ஆர்க்டிக் பெருங்கடலின் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி படுத்துகின்றன. 

hjsdLNq.jpg

டாப் சீக்ரெட் மேகசின் : 

இந்த புகைப்படங்கள் 'டாப் சீக்ரெட் மேகசின்' (Top Secret Magazine) என்னும் இதழின் பக்கங்களில் இருந்து ஸ்கேன் செய்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

dtzDR5X.jpg

உருவம் : 

ஒரு ஏவுகணையை உருவம் கொண்ட அந்த மர்ம பொருள் ஆனது கடலுக்குள் இருந்து வெளியே வருவதை உணர்த்துகிறது.

hQ0OPZZ.jpg

கடலுக்குள் நுழைகிறதா : 

இது பறக்கும் பொருளா..?? கடலுக்குள் நுழைகிறதா அல்லது கடலுக்குள் இருந்து வெளியேறுகிறதா என்பதை பற்றிய ஆய்வு இதன் ஒரிஜினல் புகைப்படங்களை கொண்டு அமெரிக்க ராணுவ ஆய்வகத்தில் ஆராயப்பட்டுக் கொண்டு வருகிறதாம். 

cj7Yx5k.jpg

பக்கவாட்டமாக செல்வது : 

முக்கோண வடிவ யுஎப்ஒ ஒன்று பதிவானது அது கடலில் மூழ்குவதற்கு முன்னதாக பக்கவாட்டாக செல்வது போல பதிவாகியுள்ளது. 

E3TyNsT.jpg

புகை : 

மற்றொரு யூஎப்ஓ ஆனது பாதிப்புக்கு உள்ளானது போலவும் அதில் இருந்து புகை வெளியேறுவது போலவும் பதிவாகியுள்ளது. 

R3qF5GL.jpg

அனலாக் கேமிரா : 

இவை அனைத்துமே தாக்குதல் நீர்மூழ்கியின் அனலாக் கேமிராவின் (analog camera) மூலம் பதிவாக்கப்பட்டுள்ளது. 

mNxEPCs.jpg

அதிகாரப்பூர்வம் :

இது சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவலோ அல்லது பதிவாக்கபட்ட யூஏப்ஓ-க்களின் ஒரிஜினல் புகைப்படங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


tlbwW2M.jpg

No comments:

Post a Comment