Friday, 13 May 2016

இணையத்தில் ரகசியமாய் கசிந்த மோட்டோ எக்ஸ் 2016.!

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ், கருவியை தொடர்ந்து லெனோவோவின் மோட்டோரோலா அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் கருவியை வெளியிட தயாராகி விட்டது. அதன் படி மோட்டோரோலாவின் உடையாத திரை கொண்ட இரண்டாவது கருவி மோட்டோ எக்ஸ்4 அல்லது மோட்டோ எக்ஸ் 2016 என்ற பெயரில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

qNoXnUy.jpg

திரை 

மோட்டோ எக்ஸ் 2016 கருவியில் 5.5 இன்ச் ஏஎம்ஓஎல்இடி திரை கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இதோடு கசிந்திருக்கும் புகைப்படங்களில் ஹோம் பட்டனை சுற்றி சதுர வடிவில் மெட்டல் வளையம் மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கலாம் என்பதை எடுத்துரைக்கின்றது.

Ptpw2Ku.jpg

இரு மாடல்கள் 

இதோடு வெளியான தகவல்களில் மோட்டோரோலா தரப்பில் மோட்டோ எக்ஸ் பெயரில் இரு மாடல்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது.

WMZqtKJ.jpg

ப்ரீமியம்

அதன் படி ப்ரீமியம் மாடலில் 5.5 இன்ச் திரை 1440 பிக்சல் ரெசல்யூஷன், 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

8sjUcb0.jpg

மெமரி 

இந்த கருவியில் 3 அல்லது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் 2600 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

W5TXQzz.jpg

வெர்டெக்ஸ்

மறுபக்கம் வெர்டெக்ஸ் மாடலில் 1080 பிக்சல் என்ற குறைந்த ரெசல்யூஷன் முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு மற்றும் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

tpUmL4w.jpg

பிராசஸர் 

இதோடு 2.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 16 ஜிபி இனடர்னல் மெமரியும் 16 எம்பி ப்ரைமரி கேமரா, லேஸர் மற்றும் ஃபேஸ்-டிடெக்ட் ஃபோகஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment