ஐபோன் 7 இன்னும் வெளியாகவில்லை, ஆனால் எல்லோரும் ஐபோன் 8 பற்றி பேச துவங்கிவிட்டனர். ஆப்பிள் சார்ந்த தகவல்களை ஏரதாழ சரியாக கணிப்பதில் வல்லுநரான கேஜிஐ சேர்ந்த மிங்-சி-க்யோ ஐபோன் 7 கருவியில் ஏகப்பட்ட மாற்றங்கள் மற்றும் பல புதிய அம்சங்களை எதிர்பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.
டூயல் கேமரா
அதன்படி வெளியாக இருக்கும் அனைத்து ஐபோன் 7 ப்ளஸ் மாடல்கள் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
புதிய கேமரா
முன்னதாக இவர் கணிப்பின் படி ப்ளஸ் வகையில் குறிப்பிடத்தக்க மாடல்களில் மட்டும் புதிய வகை கேமரா செட்டப் கொண்டிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
ரேம்
மற்ற தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ரேம் சார்ந்த அம்சங்களை ப்ளஸ் மாடல்களில் அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதோடு திரை ரெசல்யூஷனும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரவேற்பு
முன்னதாக வெளியிடப்பட்ட ஐபோன் 6 ப்ளஸ் மாடல்களில் 1 ஜிபி ரேம் எதிர்பார்த்த அளவு ஒத்துழைக்காத நிலையில் ஆப்பிள் நிறுவனம் ரேம் சார்ந்த அம்சங்களை அதிகரிக்க இருப்பதாக கூறப்படும் முடிவு வரவேற்க்கத்தக்கது என்றே கூறப்படுகின்றது.
சோனி மற்றும் எல்ஜி
இந்த குறிப்பில் இருக்கும் கூடுதல் தகவல்களில் சோனி மற்றும் எல்ஜி நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் டூயல்-கேமரா அம்சம் வழங்க ஒத்துழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
வாட்டர் ப்ரூஃப்
இதோடு புதிய ஐபோன் கருவிகளில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் அகற்றப்பட்டு கூடுதலாக வாட்டர் ப்ரூஃப் அம்சம் மற்றும் கேபாசிட்டிவ் டச் ஹோம் பட்டன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment