Sunday, 1 May 2016

பெர்முடா முக்கோணத்திற்குள்ளே (Bermuda Triangle) : புதிய சர்ச்சை கிளப்பும் ஜெர்மன் கடல் ஆய்வாளர்..!

ஒரு கட்டத்திற்கு மேல் ஆர்வமானது பேராசையாகி விடும். அப்படிதான் பெர்முடா முக்கோணமும்..! முதலில் அதன் மர்மங்களையும், அது உள்ளடக்கி வைத்திருக்கும் புதிர்களையும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டோம், ஆர்வம் காட்டினோம், அதை புரிந்துக்கொள்ளவே முடியாத நிலைபாட்டிற்கு வந்தபின்பு, தற்போது பெர்முடா முக்கோணமானது மனித இனத்தின் பேராசையாகி விட்டது..! 

அனுதினமும், பெர்முடா முக்கோணம் பற்றிய கோட்பாடுகளும் கணிப்புகளும் வெளியாகிய வண்ணம் இருக்க, ஜெர்மானிய கடல் ஆராய்ச்சியாளர் ஒருவர் பெர்முடா முக்கோணம் பற்றிய புதிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்..! 

AihEldo.jpg

பூமியில் உருவாகாத : 

கடல் ஆய்வு ஒன்று பெர்முடா முக்கோணத்தின் கடல் பகுதியின் அடியில், சாதரணமான ஒரு தொழில்நுட்பம் ஆனால் பூமியில் உருவாகாத ஒரு தொழில்நுட்பம் இருப்பதாக தெரிவிக்கின்றது. 

x93TQ3L.jpg

கடல் பிரதேசம் : 

வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில், மேற்கு பகுதியில் பெர்முடா முக்கோணமானது மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் கடல் பிரதேசமாகும். 

uBByea3.jpg

அங்கீகரிக்கப்படவில்லை : 

அமெரிக்க கப்பற்படையின்படி பெர்முடா முக்கோணம் என்ற பகுதி கிடையவே கிடையாது அது மட்டுமின்றி பெர்முடா முக்கோணம் என்ற புவியியல் பெயர் ஆனது அமெரிக்க வாரியம் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

RshTYVr.jpg

உயிர்பலி : 

பல வதந்திகளையும், நம்பிக்கைகளையும் சுமக்கும் பெர்முடா முக்கோணம் பற்றிய விடயங்களில் எது உண்மையோ இல்லையோ, பெர்முடா முக்கோணத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது என்பது மட்டும் உண்மை..! 

7Usvyl6.jpg

பிரமிட்கள் : 

தற்போது டாக்டர் மேயர் , ஜெர்மானிய கடல் ஆய்வாளர் - பெர்முடா முக்கோணத்தின் மையப் பகுதியில் இரண்டு மாபெரும் பிரமிட்கள் உள்ளன என்ற தனது சதியாலோசனை கோட்பாட்டை முன் வைத்துள்ளார். 

3bvNpDC.jpg

தடிமனான கண்ணாடி : 

அங்கு இருக்கும் இரண்டு பிரமிட்களும் தடிமனான கண்ணாடிகளால் உருவாக்கம் பெற்றுள்ளன என்றும் அவைகள் மிகவும் வசீகரமான ஒன்றாக உள்ளன என்றும், பரந்த கடல் அடியில் காணப்படும் இந்த தொழில்நுட்பமானது நவீன அறிவியலின் மாபெரும் மர்மம் என்றும், டாக்டர் மேயர் கூறுகிறார்.

oz374uD.jpg

முரண்பாடான கட்டமைப்பு : 

அந்த பிரமிட்கள் 2,000 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள முரண்பாடான கட்டமைப்பு என்றும் அவைகள் சோனார் கருவிகளின் உதவியுடன் கண்டுப் பிடிக்கப் பட்டுள்ளன என்றும் டாக்டர் மேயர் தெரிவித்துள்ளார். 

oefVRLd.jpg

காரணம் : 

தொடர்ச்சியான முறையில் அங்கு கப்பல்களும் விமானங்களும் காணமல் போனதிற்கு பெர்முடா முக்கோணத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பிரமிட்கள் தான் காரணம் என்று ஆணித்தனமாக டாக்டர் மேயர் நம்புகிறார். 

es6kX61.jpg

பிரமிட்களின் எண்ணிக்கை : 

மேலும் சில சதியாலோசனை கோட்பாட்டு வலைதளங்களின்படி பெர்முடா முக்கோணத்திற்குள் இருக்கும் பிரமிட்களின் எண்ணிக்கை அதிகம் என்ற கருத்தும் நிலவுகிறது. 

OQxwx3J.jpg

கிரிஸ்டல்கள் : 

சுமார் 2 கிலோமீட்டர்கள் கடல் ஆழத்தில் அமைந்துள்ள பிரமிட்கள், கிரிஸ்டல்கள் (Sort of Crystals) மூலம் உருவக்கப்பட்டுள்ளதால் தான் அங்கு கப்பல் மற்றும் விமானங்கள் மாயமாகும் சம்பவங்கள் நிகழ்கின்றனவாம். 

oXObci1.jpg

கண்டறியும் தொழில்நுட்பம் : 

பறக்கும் தட்டுகளை நம்பும் யூஎப்ஒலிஜிஸ்ட்கள் பெர்முடா முக்கோணத் திற்குள் உண்மையில் என்னதான் இருக்கிறது, என்னதான் நிகழ்கிறது என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்பது தான் நிதர்சனம் என்கின்றனர். 

LIo8SZ4.jpg

புரளி : 

பெர்முடா முக்கோணத்திற்குள் பிரமிட்கள் இருப்பதாக பலதரப்பட்ட தகவல்களும், புகார்களும் வருகின்ற போதிலும் துரதிர்ஷ்டவசமாக அவைகள் எல்லாம் வெறும் புரளிகளாக தான் இன்று வரை நம்பப்படுகின்றன என்றும் யூஎப்ஒலிஜிஸ்ட்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ouT1bVy.jpg

அமெரிக்க கடல் ஆய்வாளர்கள் : 

20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க கடல் ஆய்வாளர்கள் பெர்முடா முக்கோண கடலடி பகுதியில், கண்ணாடி அல்லது கிரிஸ்டல்களால் உருவான முரண்பாடான கட்டமைப்புகளில் சமமான பகுதியில் இருப்பதாக கூறினர். 

18TPq6K.jpg

புகைப்படம் : 

மேலும் அந்த கட்டமைப்புகள் எகிப்தில் உள்ள கிசா பிரமிடை விட மூன்று மடங்கு பெரிய அளவில் உள்ளதால் அவைகளை புகைப்படம் எடுக்க இயலாது என்றும் கூறியிருந்தனர். 

PpjbPj5.jpg

அரசாங்க ஏஜன்சி : 

பல நாடுகளின் இராணுவத்தினாலும், அரசாங்க ஏஜன்சிகளாலும் மறைக்கப்படும் பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் நாம் கற்பனை செய்வதற்கு எதிராக அல்லது துளியும் சம்பதந்தமில்லாத ஒன்றாககூட இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 

uAGhwz6.jpg

எல்லாமே கட்டுகதைகள் : 

மறுப்பக்கம் பெர்முடா முக்கோணத்தில் ஒன்றுமே இல்லை என்று நம்புபவர்கள், டாக்டர் மேயர் கூறும் ஆய்வு தகவலை மட்டுமின்றி டாக்டர் மேயர் என்று ஒரு ஜெர்மானிய கடல் ஆய்வாளர் இருக்கிறார் என்பதை கூட யாராலும் உறுதி செய்ய இயலாது, எல்லாமே கட்டுகதைகள் என்று தங்கள் கருத்துகளை கூறியுள்ளனர். 

kD69LmV.jpg

No comments:

Post a Comment