லெனோவோ நிறுவனம் சூக் இசட்1 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.13,499க்கு கிடைக்கும் இந்த கருவியின் முதல் ப்ளாஷ் விற்பனை மே மாதம் 19 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அமேசான் தளத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்டது.
இயங்குதளம்
இந்த கருவியின் மிக முக்கிய சிறப்பம்சமாக இருப்பது இயங்குதளம் தான். லெனோவோ சூக் இசட்1 சைனோஜென் ஓஎஸ் 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான அம்சங்களை பெற முடியும்.
பிராசஸர்
லெனோவோ சூக் இசட்1 கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர், 2.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் அட்ரினோ 330 கிராஃபிக்ஸ் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
மெமரி
மெமரியை பொருத்த வரை லெனோவோ சூக் இசட்1 கருவியில் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதோடு 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
கனெக்டிவிட்டி
டூயல் சிம் கொண்ட லெனோவோ சூக் இசட்1 இரு நானோ சிம் கார்டு சப்போர்ட், 4ஜி எல்டிஇ மற்றும் FDD Band 3 (1800MHz) மற்றும் TDD Band 40 (2300MHz) போன்ற இந்திய எல்டிஇ பேன்ட் கனெக்டிவிட்டி கொண்டிருக்கின்றது.
கேமரா
13 எம்பி ப்ரைமரி கேமரா, சோனி IMX214 சென்சார், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment