ஆப்ரேஷன் ஹை ஜம்ப் என்பது இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் கழித்து, அமெரிக்க கடற்படையினரால் உலகின் அடிமட்டத்தை, அதாவது அண்டார்டிக்காவை குறிவைத்து அவசரமாய் - திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு மிஷன் ஆகும்..!
100 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலாக அமெரிக்கா படையினர் அண்டார்டிக்கா பிரேதேசத்தை அடைந்திருக்கவில்லை. ஆக, தென் துருவத்தை நோக்கி தனது முழு விடயங்களையும் விரைவில் நகர்த்த நிகழ்த்தப்பட்ட ஒரு திட்டம் தான் ஆப்ரேஷன் ஹைஜம்ப்..!
உரிமை :
1940-களில் அரசியல் ரீதியாக, உத்தரவுகளை பெற்ற அமெரிக்க கடற்படை அண்டார்டிகாவில் நிகழ்த்திய ஒரு [நில] உரிமைகோரலுக்கான அடிப்படை என்று இதனை கூறலாம்.
மிகப்பெரிய பயணம் :
இதுவரை நிகழ்த்தப்பட்ட அண்டார்டிகாவிற்கான கடற்படை பயணங்களில் இதுதான் மிகப்பெரிய பயணமாகும். அதாவது, இதில் 13 கப்பல்கள் , 23 விமானங்கள் உடன் சுமார் 4,700 ஆண்கள் ஈடுபட்டனர்.
தலைமை :
அட்மிரல் ரிச்சர்ட் பைர்ட் (Admiral Richard Byrd) தலைமையில் தான் ஒட்டுமொத்த ஆப்ரேஷன் ஹைஜம்ப் திட்டம் நடந்தது.
தோல்வி :
இதில் பணியாற்றிய விமானி ஒருவர் நாங்கள் என்ன செய்கிறோம் என்ன தேடுகிறோம் என்பதே தெரியாமல் திரிந்தோம் என்று கூறியுள்ளார் இதன் மூலம் இந்த திட்டம் தோல்வி அடைந்தது என்பது உறுதி செய்யப்படுகிறது.
விபத்து :
இந்த ஆப்ரேஷனில் ஏற்பட்ட விபத்துகளில் பலியானவர்களின் உடல் மற்றும் காயப்ப்படவர்கள் மீட்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு..!
கடற்கரை :
இது சார்ந்து நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலம், விமான வசதி இல்லாததால் காயப்பட்டவர்கள் சுமார் 10 மைல் தூரத்திற்கு நடந்து கடற்கரையை அடைந்தால் மட்டுமே மீட்க படுவர் என்ற நிலைகள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பான்தோம் கோஸ்ட் :
மேலும் அண்டார்டிக்காவின் கடற்கரைகள் 'பான்தோம் கோஸ்ட்' எனப்படுகின்றன, அதாவது மறைமுக கடற்கரைகள் - அவைகளை கண்டறிவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காதாம், சில பேர் அந்த கடற்கரைகளை கண்டுப்பிடிக்கவே முடியாது என்றும் கூறுகின்றனர்.
போட்டோ மேப்பிங் :
இருப்பினும் அமெரிக்க அரசாங்கம் அன்டார்டிக்கவை போட்டோ மேப்பிங் செய்து அந்த பிரதேசத்தை நன்கு புரிந்து கொள்ள ஆப்ரேஷன் ஹைஜம்ப் உதவியது என்பதும் உண்மை தான்.
பாறைபடுக்கை :
கிழக்கு அண்டார்டிக்கா பகுதியில் பனிக்கட்டியே இல்லாத வெறும் பாறைபடுக்கை மற்றும் தண்ணீர் படுக்கை கொண்ட பகுதி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டதே அதற்கு எடுத்துக்காட்டாகும்.
No comments:
Post a Comment