இக்காலத்து தொழில்நுட்ப வளர்ச்சி பூமியை கடந்து நிலவு வரை சென்றுவிட்டது.
ஒரு காலத்தில் நிலாவை காட்டி சோறு ஊட்டியவர்கள் இன்று நிலாவிற்கே சென்று சோறு செய்ய ஆயத்தமாகிவிட்டனர்.
1959-ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை நிலவில் இறக்கிய மனிதர்கள் இன்று நிலவில் குடிசை கட்ட தயாரிக்கிவிட்டதோடு அதற்கான பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்..!
திட்டம்
ஐரோப்பாவின் விண்வெளி மையமானது நிலவில் கிராமம் ஒன்றை அமைக்க தீவிரமாக திட்டமிட்டு வருகின்றது.
நோக்கம்
இந்த திட்டம் அறிவியல், வியாபாரம், சுரங்கம் மற்றும் சுற்றுலா போன்றவைகளுக்கு அடித்தளமாக இருக்கும் என ஐரோப்பிய விண்வெளி மையத்தின் தலைவர் ஜொஹான் டையட்ரிச் வார்னர் தெரிவித்தார்.
செவ்வாய்
மற்றவர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற திட்டமிட்டு வரும் நிலையில் பூமியை தொடர்ந்து, மக்கள் குடியேற ஏற்ற சூழல் நிலவில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் நம்புகின்றது.
நிலா
பூமியில் இருந்து செவ்வாய்க்கு செல்ல ஏதுவாக நிலவு கிராமம் இருக்கும் என்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தினர் நம்புகின்றனர்.
நிலவு
'நிலவிற்கு நாம் முதலில் சென்று விட வேண்டும், ஆனால் இது மட்டுமே இறுதி நோக்கம் கிடையாது. மனிதர்கள் இன்னும் அதிக தூரம் செல்வார்கள்' என தான் நம்புவதாக வார்னர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
எளிமை
பொதுவாக கிராமம் என்பது 'பலத்தரப்பு மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஒரு சமூகத்தை உருவாக்குவது' ஆகும். இந்த யோசனையை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என வார்னர் தெரிவித்திருந்தார்.
செவ்வாய்
விண்வெளி வீரர்கள் 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செவ்வாய் கிரகத்தை அடைய வேண்டும் என நாசா திட்டமிட்டு வருகின்றது. ஆனால் இதற்கு சர்வதேச விண்வெளி மையத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகும்.
அருகாமை
சமீபத்திய ஆய்வுகளில் பூமியில் இருந்து நிலவு அருகாமையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நம்பிக்கை
நிலவில் தளம் ஒன்றை உருவாக்குவது மூன்று விஷயங்களுக்கு உதவியாக இருக்கும் என தற்சமயம் வரை நம்பப்பட்டு வருகின்றது.
உதவி
அதாவது மனித வள சுரங்கங்கள், நிலவின் இருள் பகுதியின் வானவியல் கூர்நோக்கு மற்றும் சுற்றுலா போன்றவற்றிக்கு இத்திட்டம் உகந்ததாக இருக்கும் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோட்
லூனார் திட்டங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரோபோட்களின் உதவியோடு விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் தளம், நிலவில் கிடைக்கும் மணலை கொண்டு 3டி ப்ரின்ட் செய்யப்பட்ட அமைப்புகள் கட்டமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment