பிளாக் ஹோல் - அதாவது கருங்குழிகள் என்பது கண்களுக்கு புலப்படாத தீவிரமான ஈர்ப்புக்குரிய ஒரு விண்வெளி பிரதேசமாகும். ஆகையால், அதுனுள் இருந்து ஒளி கூட மீண்டு வெளியே வர இயலாது. விண்வெளியில் இருக்கும் நட்சத்திரங்களின் விசித்திரமான பண்புகளை வைத்தே அதன் அருகாமையில் பிளாக் ஹோல் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுக் கொண்டிருகிறது. ஸ்டெல்லர் பிளாக் ஹோல் எனப்படும் நட்சத்திர கருங்குழியானது மாபெரும் நட்சத்திரம் ஒன்றின் அழிவின் போது அதன் மையப்பகுதியில் இருந்து உருவாகின்றன. அவ்வகையான நிகழ்வு சூப்பர்நோவா, அல்லது நட்சத்திர வெடிப்பு என்றும் கூறப்படுகிறது..!
கருங்குழிகள் என்பதற்கான விளக்கம் இப்படியிருக்க, தலைசிறந்த அண்டவியலாளர் ஆன ஸ்டீபன் ஹாக்கிங்கோ - பிளாக் ஹோல் சார்ந்த பொதுவான கருத்து ஒன்றொரு ஒற்றுப்போக விரும்பவில்லை..!
நுழைந்த ஒளி :
பிளாக் ஹோல்கள் - ஒரு ஈர்ப்பு புதைகுழி, அதனுள் நுழைந்த ஒளியை கூட ஈர்த்துக்கொள்ளும், ஒளிகூட மீண்டு வெளியே வராது என்ற கருத்தில் மட்டும் ஸ்டீபன் ஹாக்கிங் அதிகம் வாதாடுகிறார்.
ஆற்றல் :
1970-ல் உருவாக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிளாக் ஹோல் மாதிரியானது சிறிய துகள்கள் வெளியிடுவதில்லை. ஆனால் ஆற்றல் தப்பிக்க அனுமதிக்கிறது என்று விளக்கம் அளித்தது.
புரிதல்கள் :
அது உண்மைஎனில், பிரபஞ்சம் மீது நமக்கு இருக்கும் புரிதல்கள், ஆழமான தாக்கங்கள் ஆகிய அனைத்தையுமே அந்த பிளாக் ஹோல் மாதிரி தவுடு பொடுயாக்கிவிடும் என்பது தான் நிதர்சனம்.
கணித கண்டுபிடிப்பு :
மறுபக்கம், பிளாக் ஹோல் சார்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் கணித கண்டுபிடிப்பு இன்னும் பலவகையான கவனிப்பு மற்றும் ஆய்வின்மூலம் நிரூபிக்கப்பட வேண்டிய உள்ளது.
ஃபோனான்கள் :
இந்நிலையில் , பிளாக் ஹோலில் இருந்து ஃபோனான்கள் (phonons) வெளியேறுவது சார்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஹைஃபா டெக்னியானில் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் ஜெஃப் ஸ்டெயின்ஹௌர் கூறியுள்ளார்.
உறுதி :
இது உறுதி செய்யப்பட்டால், அறிவியலின் மாபெரும் பரிசான நோபல் பரிசானது ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு கிடைக்க வழி வகுக்கும்.
No comments:
Post a Comment