அறிவியலுக்கு அப்பால் நிறைய விடயங்கள் உள்ளன. அவைகள் நமது தற்போதைய அறிவிற்க்கு சவால் விடும் அளவிற்க்கான கோட்பாடுகளை கொண்டவைகளாக இருக்கும். அவைகள் நம் கற்பனைகளை தூண்டும் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளை திறந்து பார்க்கும், ஆராய்ந்து பார்க்கும் யோசனைகளை ஏற்படுத்தும். அப்படியான பேரார்வத்தை ஏற்படுத்தும் விண்வெளி பொருள்களில் ஒன்றுதான் - செவ்வாய் கிரகம்..!
பூமிகிரக வாசிகளுக்கு செவ்வாய் கிரகம் மீது எப்போதுமே ஒரு சிறப்பு கவனம் உண்டு, அதற்கு குறைவில்லாத வண்ணம் செவ்வாய் கிரகமும் தன்னுள் பல புதிர்களையும், மர்மங்களையும் அடக்கி வைத்துள்ளது. அப்படியாக, சமீபத்தில் கிளம்பிய புதிய 'மார்ஸ் மிஸ்ட்ரி' (அதாவது செவ்வாய் மர்மம்) பற்றிய தொகுப்பே இது..!
ஐசோடோப்பு செனான் 129 :
சமீபத்தில் செவ்வாய் கிரக வளிமண்டலத்தில், ஐசோடோப்பு செனான் 129 ( isotope Xenon 129) என்ற உயர் செறிவு எரிவாயு (high concentration of the gas) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அணுக்கரு வினை :
ஐசோடோப்பு செனான் 129 ஆனது அணுக்கரு வினைகளால் (nuclear reaction) உற்பத்தியாகக் கூடிய ஒன்றாகும்.
யுரேனியம், தோரியம் :
மேலும் இந்த சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பில் யுரேனியம், தோரியம் (uranium and thorium) போன்றவைகளும் அதிகமாக உள்ளது.
தாறுமாறான அணு வெடிப்பு :
இந்த நிலைமைகள், கடந்த காலத்தில் செவ்வாய் கிரகத்தில் நிகழ்ந்த இரண்டு பெரிய தாறுமாறான அணு வெடிப்புகளின் விளைவாக ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
அத்தாட்சி :
உந்துவிசை விஞ்ஞானி டாக்டர் ஜான் பிராண்டன்பேர் "செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்த பெரிய வெப்பாற்றல் வெடிப்பிற்கான அத்தாட்சி" என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
ஓக்லோ :
இதே போல பூமியில் ஓக்லோ என்னும் பகுதியில் 1972-ஆம் ஆண்டு யுரேனியம் மற்றும் அசாதாரண பண்புகள் கண்டறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து வேறுபாடு :
பல விஞ்ஞானிகள் பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தில் அணுக்கரு வினைகள் இயற்கையாகவே நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்புகின்றனர், இதில் சில விஞ்ஞானிகளுக்கு கருத்து வேறுபாடும் உண்டு.
இயற்கை :
ஒருவேளை இந்த எதிர்வினைகள் இயற்கையாக ஏற்பட்டதல்ல எனில், மனித இனம் அல்லது வேற்று கிரக வாசிகள் போன்ற அன்னிய இனம் மூலம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோட்பாடுகளும் கிளம்பியுள்ளன.
No comments:
Post a Comment