Wednesday, 4 May 2016

அற்புதமா..? விபரீதமா..? : பூமி போன்றே மூன்று 'சிவப்பு உலகங்கள்'..!

கடந்த திங்களன்று ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழுவானது, மூன்று 'பொட்டன்ஷியல் ஹாபிடபில்' கிரகங்களை, அதாவது உயிரினங்கள் வாழத்தக்க சாத்தியமான கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தின் வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமி போன்ற கிரகங்களிலேயே மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு இதுதானம்..! 

கண்டுபிடிக்கப்பட்ட 3 சிவப்பு உலகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் 

ZMiKj2c.jpg

39 ஒளியாண்டுகள் : 

பூமியில் இருந்து சுமார் 39 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் அந்த மூன்று கிரகங்களும் அல்ட்ராகூல் குள்ள நட்சத்திரம் (Ultracool drawf stars) ஆகும்.

7mwiHb6.jpg

வாழ்வாதாரம் : 

இந்த கண்டுபிடிப்பு மூலம் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வாழ்வாதாரம் சார்ந்த இரசாயன தடயங்களை கண்டுபிடிக்கும் முதல் வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கருத்து கூறியுள்ளார் முன்னணி எழுத்தாளர் மைக்கேல் கில்லான். 

RFKiEkE.jpg

போட்டி : 

கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கிரகங்களும் அளவில் பூமி யை போலவே இருப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் வண்ணம் இருக்கிறது, அதனால் அவற்றின் வளிமண்டலங்களைப் தற்போதைய தொழில்நுட்பம் கொண்டு ஆராய வேண்டும் என்றும் கில்லான் கூறியுள்ளார். 

L4KCoa4.jpg

அளவு மற்றும் வெப்பநிலை : 

கண்டுபிடிக்கபட்டுள்ள கிரகங்களின் அளவு மற்றும் வெப்பநிலையை, பூமி மற்றும வீனஸ் கிரகத்துடன் ஒப்பிடலாம் என்கிறது 'நேச்சர்' பத்திரிகையின் ஆய்வு அறிக்கை. 

acWGbww.jpg

வேட்டை : 

இந்த கண்டுபிடிப்பு 'வாழத்தக்க கிரகங்கள்' சார்ந்த ஒரு முழு புதிய 'வேட்டை'யை ஆரம்பித்து வைத்துள்ளது. 

09T5NCP.jpg

குள்ள கிரகங்கள் : 

கில்லான் மற்றும் சக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சிலியில் உள்ள 60 சென்டிமீட்டர் தொலைநோக்கியை பயன்படுத்தி ட்ராப்பிஸ்ட்-1 (TRAPPIST-1) எனப்படும் கிரகத்தை முதன்மையாக வைத்து டஜன் கணக்கில் குள்ள கிரகங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 

Q51Kb8Y.jpg

சூடு - ஒளி : 

ஆய்விற்கு உட்படுத்தப்படும் கிரகங்கள் ஆனது பெரிய அளவில் சூடான ஒன்றாக இல்லாத அதே சமயம் (தொலைநோக்கிக்குள் சிக்காத அளவில்) மிகுந்த குறைவான ஒளிகொண்ட கிரகமாய் இல்லாமலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

sWURT5M.jpg

சுற்றுப்பாதை :

பல மாதங்களாய் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட குள்ள கிரகங்கள் ஆனது அகச்சிவப்பு சமிக்ஞைகளை குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடுவதால் அது சுற்றுப்பாதையில் உள்ள ஒரு பொருள் தான் என்பதை புரிந்து கொள்ள முடியும். 

m734WUU.jpg

பகுப்பாய்வு :

மேலும் சில பகுப்பாய்வுகளை நிகழ்த்திய பின்பு அவைகள் எக்ஸ்ஸோபிளான்ட் (Exoplantes) தான் என்பதும், அவைகள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சதிரங்களை சுற்றி வரும் கிரகங்கள் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்வார்கள்.

nYMRYDn.jpg

சிவப்பு உலகங்கள் : 

இந்த கண்டுபிடிப்பின் மூலம் இத்தகைய 'சிவப்பு உலகங்கள் ' அதாவது தீவிரமான குளிர் குள்ள நட்சத்திரங்களின் இருப்பு தத்துவார்த்த ரீதியாக உறுதியாகியுள்ளது. அதுவும் ஒற்றை இல்லை, மூன்று கிரகங்கள்..! 

k4PUskq.jpg

ஏலியன் :

பிரபஞ்சத்தில் வேறு வாழ்க்கை (ஏலியன்களை) தேடும் "ஒரு நிலைப்பாட்டில் மாற்றத்தை" உண்டாக்கும் கண்டுபிடிப்பு என்றும் இது நம்பப்படுகிறது. 

Rl9Aoqh.jpg

திரவ நீர் மற்றும் உயிர் : 

குறைந்த தீவிரம், நட்சத்திரங்களின் அளவு மற்றும் நெருக்கம் போன்றவைகளின் மூலம் இந்த மூன்று கிரகங்களில் திரவ நீர் மற்றும் உயிர் வாழ பொருத்தமான வெப்பநிலை போன்ற பகுதிகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment