ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் தனது LYF-பிரான்ட் 4ஜி கருவிகளை விற்பனை செய்ய ஆன்லைன் விற்பனையாளர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்த கருவிகள் வெளியான முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் இந்திய கருவிகளில் ஐந்தாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அமேசான்
அதன் படி இந்நிறுவனம் ஒரு மாடலை விற்பனை செய்ய அமேசான் தளத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.
இ-ஸ்டோர்
இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு கருவி ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக இரு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன்
இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைனில் கருவிகளை வாங்குவதால் ரிலையன்ஸ் நிறுவனமும் ஆன்லைன் விற்பனையில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
மோட்டோ
ஏற்கனவே மோட்டோ ஜி மற்றும் ஒன்ப்ளஸ் ஒன் போன்ற கருவிகள் ஆன்லைன் விற்பனையில் சாதனை படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அறிமுகம்
ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் LYF Water 5 மாடல் கருவியை அமேசான் தளத்தில் ரூ.11,699க்கு அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அந்நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
விரோதம்
ஆன்லைன் விற்பனையில் விலையை கொண்டு மற்ற நிறுவனங்களுடன் விரோதிக்க விரும்பவில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரம்
வாடிக்கையாளர்களுக்கு அதிக தரம் கொண்ட கருவிகளை எளிய முறையில் வழங்கி ரிலையன்ஸ் டிஜிட்டல் விரும்புவதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விற்பனையாளர்
LYF கருவிகளை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோர் மற்றும் மொபைல் விற்பனையாளர்களுடன் சேர்த்து இதுவரை சுமார் 1.2 லட்சம் விற்பனையாளர்கள் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment