கண்டுபிடிப்பு எளிய வார்த்தை தான். ஆனால் ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பது என்பது எளிமையான காரியம் கிடையாது. உலகில் இல்லாத, புதியதாய் உருவாக்கப்பட்ட ஒரு பொருள், வழிமுறை அல்லது தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பாக கூற முடியும்.
ஒரு எண்ணக்கருவை, முழுமையான நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்பாக மாற்றுவது எப்பொழுதும் முழுமையாக நடைபெறுவதில்லை. சில சமயம் முழுமை பெறும் போது அது சார்ந்த சில சிக்கல்கள் எழுவது வாடிக்கையான ஒன்று தான்.
சில விஷயங்களை கண்டுபிடித்தவுடன், அவற்றை கண்டறிந்த ஆய்வாளர்கள் மர்மமாக மரணித்த பல்வேறு சம்பவங்கள் வரலாற்று பக்கங்களில் மர்மம் நிறைந்தவையாக இடம் பெற்றுள்ளன. அவைகளில் சில ..
ஒரு எண்ணக்கருவை, முழுமையான நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்பாக மாற்றுவது எப்பொழுதும் முழுமையாக நடைபெறுவதில்லை. சில சமயம் முழுமை பெறும் போது அது சார்ந்த சில சிக்கல்கள் எழுவது வாடிக்கையான ஒன்று தான்.
சில விஷயங்களை கண்டுபிடித்தவுடன், அவற்றை கண்டறிந்த ஆய்வாளர்கள் மர்மமாக மரணித்த பல்வேறு சம்பவங்கள் வரலாற்று பக்கங்களில் மர்மம் நிறைந்தவையாக இடம் பெற்றுள்ளன. அவைகளில் சில ..
ஜிஇசி-மார்கோனி ஆய்வாளர்கள்
1980'களில் ரோனால்டு ரீகன் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட ஸ்ட்ரேடெஜிக் டிஃபென்ஸிவ் இனிஷியேட்டிவ் எனும் பாதுகாப்பு முயற்சியை அறிமுகம் செய்தனர்.
நோக்கம்
இந்த திட்டம் மூலம் விண்வெளியில் இருந்து வரும் ஏவுகணைகளை லேஸர் கொண்டு தாக்கும் வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டது.
மரணம்
1982 முதல் 1990 வரை ஜிஇசி-மார்கோனி தலைமையில் சுமார் 25 ப்ரிட்டன் ஆய்வாளர்கள் பணியாற்றினர். இவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து விட்டனர். சிலர் இவர்கள் சோவியத் உளவாளிகளால் கொலை செய்யப்பட்டனர் என்றும் சிலர் இவர்களை அரசாங்கமே கொலை செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
டேவிட் கெல்லி
2003 ஆம் ஆண்டு உயிரியல் போர்முறை வல்லுநர் டேவிட் கெல்லி, ப்ரிட்டன் அரசாங்கம் ஈராக்கில் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த பொய் தகவல்களை வழங்கியதை ரகசியமாக அம்பலப்படுத்தினார்.
குழு
இத்தகவல் பிரதமர் டோனி பிளேயருக்கு தெரிந்த பின் பாராளுமன்ற குழு ஒன்றை அமைத்து கெல்லியிடம் விசாரனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
தற்கொலை
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது நாள் கெல்லி தன் வீட்டில் மரணித்து விட்டார். காவல் துறை சார்பில் கெல்லி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது
டான் வைலெ
அணு ஆயுத பிரிவில் வல்லுநராக திகழ்ந்தவர் தான் டான் வைலெ. 2001 ஆம் ஆண்டின் ஆந்த்ராக்ஸ் தாக்குதலின் போது இவரின் கார் பாலம் ஒன்றில் ஆன் செய்யப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
உடல்
அதன் பின் இவரது உடல் மிஸிஸிப்பி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு ஆந்த்ராக்ஸ் ஆராய்ச்சியாளரான விளாடிமிர் சைனிக் இதே சமயத்தில் மரணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோட்னி மார்க்ஸ்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர் ரோட்னி மார்க்ஸ், சவுத் போல் ஆய்வு மையத்தில் மர்மமான முறையில் மரணித்து கிடந்தார்.
காரணம்
எவ்வித காரணமும் இல்லாமல் இவரது உடல் அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் ரேதான் கைப்பற்றினர். பின்னர் மெத்தனால் விஷம் மூலம் மார்க்ஸ் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
போலார் ஆய்வாளர்கள்
ஒரே திட்டத்தில் பணியாற்றி வந்த மூன்று வெவ்வேறு ஆய்வாளர்கள் 2013 ஆம் ஆண்டு உலக வெப்பமயமாதலின் தாக்கம் குறித்த ஆய்வுகளில் ஈடுப்பட்டு வந்தனர். இவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
கொலை
இந்த ஆய்வாளர்கள் அமெரிக்க அரசாங்கம் அல்லது எண்ணெய் சந்தை தலைவர்களால் கொலை செய்யப்பட்டு விட்டனர் என கூறப்பட்டு வருகின்றது
மர்மம்
இன்று வரை இவர்களின் மரணம் மர்மமாகவே இருப்பது மட்டும் தான் உண்மையாக இருக்கின்றது.
No comments:
Post a Comment