"அமைதியாக இருங்கள். ஒரு அணு ஆயுத தாக்குதல் ஆனது எப்போது வேண்டுமானாலும் நிகழ்த்தப்படலாம்" என்றகிறார் ரஷ்ய இராணுவ ஆய்வாளர் பவெல் பெல்கேன்ஹர். மூன்றாம் உலகப்போர் பீதியை அடிக்கடி கிளப்பி விடும் நாடுகளில் ரஷ்யா மட்டுமல்ல பல நாடுகள் மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த நொடி வரையிலாக பெரிய அளவில் அணு ஆயுதங்கள் செயல் சேவைக்காக வைப்பில் உள்ளன..!
அப்படியாக, நாம் வாழும் ஒரு பிரதேசத்தில் ஒரு ஆணு ஆயுத தாக்குதல் நடந்தால், நாம் உயிர் பிழைத்துக் கொள்ள நமக்கு கிடைக்கும் ஒரு கடைசி வாய்ப்பு எதுவாக இருக்கும்.?
'நான்கு நிமிட எச்சரிக்கை' கிடைக்கப்பெறாது :
நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு என்பது ஒரு தேசிய அமைப்பு சார்ந்த எச்சரிக்கை ஒலியாகும், குறிப்பாக இது ஒரு அணு தாக்குதலுக்கு முன்பு எழுப்பப்படும் எச்சரிக்கையாகும்.
தப்பி பிழைக்க :
1992-களில் பெரும்பாலான மக்கள் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பி பிழைக்க இந்த நான்கு நிமிட எச்சரிக்கை தான் காரணம்..!
1992 :
ஆனால், மூன்றாம் உலக யுத்தமொன்று நிகழ்ந்து அதில் அணு ஆயுத தாக்குதல்கள் நிகழ்ந்தால் 1992-களில் கிடைத்தது போல நமக்கு நான்கு நிமிட எச்சரிக்கை கிடைக்க வாய்ப்பே இல்லை..!
மெசேஜ் வரலாம் :
அதற்கு பதிலாக நமது மொபைல் மெசேஜ் வரலாம் என்று நம்பப் படுகிறது, அதாவது அணு ஆயுத தாக்குதலுக்கு முன்பு வரும் எச்சரிக்கை தகவல்.
பேரழிவு :
சில நாட்டு அரசாங்கம் அணு ஆயுத தாக்குதல்களின் பேரழிவுகளில் இருந்து நாட்டு மக்கள் தப்பி பிழைத்துக் கொள்ள 'கடைசி நேர' குறுந்தகவல் ஒன்று அனுப்பும் தொழில்நுட்பத்தை சோதித்துள்ளன.
2013:
தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் உருவாக்கம் பெற்ற இந்த பாதுகாப்பு அமைப்பானது 2013-ஆம் ஆண்டு கிளாஸ்கோ மற்றும் யார்க்ஷயரில் சோதனை செய்யப்பட்டது.
குறுகிய நேரம் :
உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும்படியாக குறுந்தகவல் வந்தாலும், அந்த மிக குறுகிய நேரத்தில் ஒன்றும் செய்திட இயலாது என்பது தான் நிதர்சனம்.
மூன்று நிமிட நேரம் :
'நான்கு நிமிடம் எச்சரிக்கை' அமைப்பு இருந்த காலத்தில் கூட, அதிகபட்சம் மூன்று நிமிட நேரம் கிடைக்கும் ஆனால் அதையே மொபைல் குறுந்தகவலில் எதிர்பார்க்க முடியாது.
அருகாமை :
அதிலும் குறிப்பாக நீங்கள் அணு ஆயுக தாக்குதல் நிகழ்த்தப்படும் இடத்தின் அருகாமையில் இருந்தால் நீங்கள் தப்பிக்கும் வாய்ப்பு அரியதாகி விடும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
கதிரியக்க விஷம் :
அதிலும் ஹைட்ரஜன் வெடிகுண்டு என்றால் முழு நகரத்தையும் நாசப்படுத்தி விடுமாம். வீடுகள் தரைமட்டமாகும், சுமார் 130 மைல்கள் வரையிலாக நச்சுத் தன்மை வாய்ந்த கதிரியக்க விஷம் பரவுமாம்.
வல்லமை :
பெரிய அளவிலான அணு ஆயுத போர் ஆனது முழு உலகத்தையும் பாழ்படுத்தும் வல்லமை கொண்டிருக்கும் என்கிறாகள் வல்லுனர்கள்.
80% :
அமெரிக்க காங்கிரஸ் தொழில்நுட்ப அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் கீழ் அமெரிக்க மக்கள் தொகையில் 80% பேர் அணு ஆயுத கதிர்வீச்சு மூலம் உடனடியாக கொலை செய்யப்படுவார்கள் என்கிறது.
வெடிப்புக்கு பின்னர் :
நாம் நினைப்பது போல் வெடிப்பின் போது இன்றி, வெடிப்புக்கு பின்னர் தான் அணு ஆயுத தாக்குதல்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
வெப்பநிலை :
காற்றில் கலக்கப்படும் கார்பன் ஆனது உலகளாவிய வெப்பநிலையில் ஒரு பெரும் சரிவை ஏற்படுத்தும். உலக மழை மற்றும் பயிர்களுக்கான பருவ நிலை ஆகியவைகளிலும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கடைசி நாள் :
'டூம்ஸ்டே' எனப்படும் பூமி கிரகத்தின் கடைசி நாள் இயற்கையாக எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அணு ஆயுத தாக்கதல் ஏவப்பட்டு எப்போது வேண்டுமானால் நமக்கு அந்த 'கடைசி' எச்சரிக்கை மெசேஜ் வரலாம்..!
No comments:
Post a Comment