Monday, 9 May 2016

ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பின்தள்ளிய இந்திய இயங்குதளம்.!

உலகின் முதல் பிராந்திய இயங்குதளமான இன்டஸ் ஓஎஸ் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை பின்னுக்கு தள்ளி ஸ்மார்ட்போன் இயங்குதள சந்தையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 

ஸ்மார்ட்போன் இயங்குதளங்கள் குறித்த ஆய்வு அறிக்கையில் இது குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

NfK956L.jpg

கவுண்டர்பாயின்ட் 

இந்த ஆய்வானது கவுண்டர்பாயின்ட் மற்றும் இடி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டன. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இன்டஸ் ஓஎஸ் 5.6% பங்குகளை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

h3CLoJF.jpg

ஆப்பிள் 

இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 2.5% பங்குகளுடன் ஐந்தாம் இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 0.3% பங்குகளும், சாம்சங் நிறுவனத்தின் டைஸன் இயங்குதளம் ஏழாம் இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

B9uQyrE.jpg

ஐந்து லட்சம்

ஒவ்வொரு மாதமும் சுமார் ஐந்து லட்மசம் ஆக்டிவேஷன் என்ற எண்ணிக்கையில் இன்டஸ் ஓஎஸ் பெற்று வருகின்றது. அடுத்த ஆறு மாத காலத்தில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்கும் என இன்டஸ் ஓஎஸ் தலைமை அதிகாரி ராகேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

rqbr9Y3.jpg

இலக்கு 

ஒன்பது மாதங்களுக்கு முன் மைக்ரோமேக்ஸ் கருவிகளில் அறிமுகம் செய்யப்பட்ட இன்டஸ் ஓஎஸ் 2018 ஆம் ஆண்டிற்குள் 10 கோடி பயனர்களை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆறு கருவிகளில் ஒன்று இன்டஸ் ஓஎஸ் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hRbf1Fn.jpg

ஆண்ட்ராய்டு

இந்தியாவில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் 83.8% பங்குகளுடன் முன்னிலை வகிக்கின்றது. இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் மொத்தம் 24.8 மில்லியன் கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இதில் 1.4 மில்லியன் கருவிகளில் இன்டஸ் ஓஎஸ் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

fpITYvd.jpg

சியோமி

ஆண்ட்ராய்டு மற்றும் இன்டஸ் இயங்குதளங்களை தொடர்ந்து சீனாவின் சியோமி நிறுவனம் 4.1% பங்குகளை கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. நான்காவது இடத்தில் 2.8% பங்குகளுடன் யு டெலிவென்ச்சர்ஸ் இருக்கின்றது. 

TmTKGY3.jpg

மொழி 

இன்டஸ் ஓஎஸ் தற்சமயம் வரை சுமார் 12 மொழிகளை மொழி பெயர்க்கும் வசதி மற்றும் பிராந்திய மொழிகளில் இயங்கும் சொந்த ஆப் பஜார் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment