கடவுளுக்குதான் தெரியும்… கடுப்படித்த விஷால்
விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கிய படம், மத கஜ ராஜா. இந்தப் படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டும்.
படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது.
மத கஜ ராஜா இதே வெளியாகிறது என்று ஒரு டஜன் ரிலீஸ் தேதிகள் அறிவித்துவிட்டனர். ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்த மாதிரி படம் தள்ளிப் போகும். மே 13 படம் கண்டிப்பாக வெளிவரும் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அன்றும் படம் வெளிவரப்போவதில்லை, ஜுன் 10 -ஆம் தேதியே படம் வெளியாகும் என இப்போது அறிவித்துள்ளனர்.
இது குறித்து விஷாலிடம் கேட்டதற்கு, மத கஜ ராஜா எப்போது வெளியாகும் என்று அந்த கடவுளுக்குத்தான் தெரியும் என்று கடுப்படித்துள்ளார்.
விஷால் நடித்துள்ள மருது திரைப்படம் மே 20 வெளியாகிறது.
போடுங்கடா ஓட்டு – வரம்பு மீறிய சிம்பு பாடல்
சிலர் நல்லது செய்தாலும் அது தீமையில்தான் முடியும். அவர்களின் வளர்ப்பும், ராசியும் அப்படி. படத்தின் அறிமுகப் பாடலில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் நடிகர்கள் ‘டா’ போட்டு பாடுவதுண்டு.
வந்தேண்டா பால்காரன் என்பது போல். அதுவே விழிப்புணர்வு பாடலில்…?
அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிம்பு ஒரு பாடல் எழுதியுள்ளார். அதில் போடுங்கடா, நீ போன்று மரியாதைக் குறைவான வார்த்தை பிரயோகங்கள் இறைந்து கிடக்கிறது. அதிலிருந்து சில வரிகள்…
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
– ஓட்டுப் போடுவது எப்படி ஒருவரது உரிமையோ அதுபோல் போடமலிருப்பதும் ஒருவருடைய உரிமையே. சிம்பு சொல்வது போல் அனைவரும் ஓட்டுப் போட்டால் வறுமை ஒழிந்துவிடுமா? ஓட்டுப் போடாததுதான் இப்போதிருக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணமா?
விடலைப் பையன்கள் ஏன் இதுபோன்ற சீரியஸ் மேட்டரில் மூக்கை நுழைக்கிறார்கள்?
களைப்படைந்து விட்டேன்… இனி புதுப்படம் கிடையாது...
களைப்படைந்துவிட்டேன். இனி கொஞ்ச காலத்துக்கு புதுப்படம் எதிலும் கமிட்டாகப் போவதில்லை என கூறியுள்ளார் நடிகை சமந்தா.
சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த தெறி, 24 இரண்டும் வெற்றி பெற்றுள்ளன. தெறி பிளாக் பஸ்டர்.
தெலுங்கில் அ…ஆ, பிரம்மோற்சவம் ஆகிய படங்களை முடித்துள்ளார்.
கோடைகால படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டேன். இன்று நிம்மதியாக உறங்குவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சமந்தா. களைப்படைந்து விட்டேன், இனி கொஞ்ச காலம் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர். நடிக்கும் ஜனதா கரேஜ் படத்தில் மட்டும் சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடித்துத்தர வேண்டிய ஒரே படமும் இதுதான் என்பது முக்கியமானது..
“எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை வெளியிடுகிறார் அக்ஷய்குமார்..
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை மே 12ஆம் தேதி வெளியிடுகிறார் அக்ஷய்குமார்.
டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் தான் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”. ஜி.வி.பிரகாஷ்யை வைத்து இரண்டாவது முறையாக இயக்கியுள்ளார் சாம் ஆண்டன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் ஹிரோவாக நடிக்கும் முன்றாவது படத்துக்கு வழக்கம் போல அவரே இசையமைத்துள்ளார். ஆனந்தி மீண்டும் ஜி.வியுடன் இணைந்துள்ளது மற்றும் பாஷா படத்தின் வசனத்தை தலைப்பாக வைத்ததுள்ளது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இப்படத்தை ஜுன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் இசையை 2.0 படத்தில் நடித்து வரும் அக்ஷய் குமார் வரும் மே 12ஆம் தேதி வெளியிட இருக்கிறார்..
நல்ல கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிப்பேன்: உதயநிதி..
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மனிதன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த நிலையில் மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:–
என் முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த படம் ‘மனிதன்’. இந்த படத்தில் தான் நான் நடிப்பை வெளிகாட்டி உள்ளேன் என்று பலர் கூறுகின்றனர். இந்த படத்தை பார்த்து விட்டு எனது தந்தை என்னை கட்டி அணைத்து பாராட்டினார். உன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி வரி விலக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. தற்போதுள்ள அரசியல் சூழலில் படத்திற்கு வரி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. நான் நடித்த ‘கெத்து’ படத்திற்கும் வரி விலக்கு வழங்கப்படாமல் தான் இருந்தது.
பல முறை கோர்ட்டுக்கு சென்ற பின்னர் தான் அந்த படத்திற்கு வரி விலக்கு கிடைத்தது. அதுபோல் சட்ட ரீதியாக போராடிய பின்னர் தான் இந்த படத்திற்கு வரி விலக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.
நல்ல கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிப்பேன். படத்தை தயாரித்து வெளியிடுவது தான் இப்போதைய கால கட்டத்தில் பெரிய சாதனையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment