Friday, 13 May 2016

Tamil Cinema News Update Daily

அஜித் படக்குழு அதை மட்டும் சொல்ல மறுப்பது ஏன்?

 

அஜித் தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் தற்போது பிஸியாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் தொடங்கவுள்ளது.
இப்படத்தை சிவா இயக்க, அனிருத் இசைமைக்கின்றார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் நடிக்க கூட முயற்சிகள் நடந்து வருகின்றது.
ஆனால், இன்றுவரை ஹீரோயின் யார் என்பதை மட்டும் சொல்ல படக்குழு மறுத்து வருகிறது, அது ஏன் என்று தெரியவில்லை.
பெரும்பாலும் அனுஷ்கா தான் ஹீரோயின் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிக்கின்றது. இரண்டாவது ஹீரோயினுக்கு ரித்திகா சிங் பேர் அடிப்படுகின்றதாம்.

24 படம் ரூ 100 கோடியை தொட்டுவிட்டதா?

 

சூர்யா நடித்த 24 படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாக சிலர் கூறினர்.
ஆனால், விசாரிக்கையில் இப்படம் ரூ 80 கோடி வரை தற்போது வசூல் செய்துவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் இப்படம் ரூ 100 கோடி வசூலில் இணைந்துவிடுமாம்.
இதற்கு முன் சூர்யா நடித்த சிங்கம்-2 படமே ரூ 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இது நம்ம ஆளு ரன்னிங் டைம்

 

பாண்டியராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது மே 20ம் தேதி வெளியாக தயாராகி வருகிறது.
அண்மையில் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணிநேரம் 15 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு, நயன்தாரா கூட்டணியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

S3 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

 

தமிழ் சினிமாவின் ஸ்டார் பிரதர்ஸ் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவருக்கும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இருந்தாலும் இவர்கள் இருவரும் இதுவரை ஒருமுறை கூட ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. இது கூடிய விரைவில் நடக்கும் என தெரிகிறது.
சூர்யா இப்போது நடித்துவரும் S3 (சிங்கம் 3) படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கபடுகிறது

சந்திரமுகி-2 ரெடியாகிவிட்டது, லாரன்ஸுடன் நடிக்கப்போவது யார் தெரியுமா?

 

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு அவர்களே மீண்டும் எடுக்கவுள்ளார்.
இதில் ஹீரோவாக லாரன்ஸ் நடிக்க, ஹீரோயின் தேடுதல் தற்போது நடந்து வருகின்றது.
லாரன்ஸுடன் இணைந்து காமெடியில் கலக்கப்போவது யார் தெரியுமா? வைகைப்புயல் வடிவேலு தான். இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கின்றது.

 

No comments:

Post a Comment