கேலக்ஸி ஜெ3 எனும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த கருவியானது இந்திய சந்தையில் ரூ.8,990க்கு விற்பனை செய்யப்படுவதோடு இந்த கருவியானது ஸ்னாப்டீல் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த கருவி தங்கம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.
சாம்சங் கேலக்ஸி ஜெ3 கருவியானது இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த கருவியில் பைக் மோடு 'Bike Mode' எனும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் எனேபிள் செய்யப்பட்டவுடன் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளுக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பதில் அளிக்கப்பட்டு விடும். மொத்தம் 14 மொழிகளில் இந்த தகவல் வழங்கப்படுகின்றது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த கருவியில் 5 இன்ச் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்இடி திரை, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 1.5 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் மற்றும் சாம்சங் டச்விஸ் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பியுடன் 2600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
No comments:
Post a Comment