Sunday, 10 April 2016

மைக்ரோசாப்ட் லூமியா 650 இந்தியாவில் அறிமுகம் : அதிரடி காட்டுமா.!?

மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 650 வகை ஸ்மார்ட்போன் கருவியை இந்தியாவில் அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் இந்த கருவி ரூ.15,299க்கு விற்பனை செய்யப்படும் என்றும் இந்த கருவியானது மேட் கருப்பு மற்றும் மேட் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rKntgQI.jpg

சிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த ஸ்மார்ட்போன் கருவியில் 5 இன்ச் ஓஎல்இடி திரை 1280*720 ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. இதோடு 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த கருவியில் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக மெமரியை 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

oyIaYCN.jpg

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்ட இந்த கருவியில் 4ஜி எல்டிஇ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இந்த பேட்டரியானது 26 மணி நேரம் ஸ்டான்ட்பை மற்றும் 16 மணி நேரம் டாக்டைம் வழங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1kttB0I.jpg

இவைகளோடு லூமியா 650 கருவியில் ஒன்டிரைவ் ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையான கார்டனாவும் வழங்கப்பட்டுள்ளது. "சிறப்பான விண்டோஸ் 10 அனுபவம் வழங்க ஏதுவாக இந்த கருவி வடிவமைக்கப் பட்டுள்ளதோடு, அழகான வடிவமைப்பு கொண்டு சரியான விலையில் கிடைக்கின்றது" என அந்நிறுவனத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment