பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அனைத்து ஸ்மார்ட்போன் கருவிகளிலும் விசேஷ அம்சம் வழங்கப்பட இருக்கின்றது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான தகவல்கள்
பேனிக் பட்டன்
பெண்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிடத்தக்க உந்துததலுக்கு பின் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் தயாரிக்க இருக்கும் கருவிகளில் பேனிக் பட்டன் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அம்சம்
புதிய பேனிக் பட்டன் அம்சம் மூலம் குறிப்பிட்ட சில பட்டன்களை க்ளிக் செய்தவுடன் மொபைல் பயனரின் உறவினர் அல்லது நண்பர்களுக்கு பயனர் இருக்கும் விலாசம் அனுப்பப்பட்டு விடும்.
அழுத்தம்
இந்த புதிய அம்சமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
நிதி
இந்த திட்டத்தினை செயல்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த நிர்பயா நிதி திட்டம் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பேச்சுவார்த்தை
ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் மொபைல் போன்களில் புதிய பேனிக் அம்சம் பெற முறையான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவைகளை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2012
டிசம்பர் 2012 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட நிர்பயா அசம்பாவிதத்தை தொடர்ந்து மொபைல் போன்களில் பேனிக் பட்டன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment