Thursday, 7 April 2016

குங்பூ யோகா படப்பிடிப்பில் குப்பைகளை அள்ளும் ஜாக்கிசான்

படப்பிடிப்பில் சேரும் குப்பைகளை சுத்தம் செய்து, இந்திய ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறார் நடிகர் ஜாக்கிசான்.

ஜாக்கிசான், அமைரா தஸ்தூர், சோனு சூட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் குங்பூ யோகா.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூர் அருகே அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. 
குங்பூ யோகா

இந்தியா-சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் குங்பூ யோகா. இதில் நடிகர் ஜாக்கிசானுடன் இணைந்து அமைரா தஸ்தூர், சோனு சூட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதில் புதையலைத் தேடும் தொல்லியல் ஆராய்ச்சியாளராக ஜாக்கிசானும், அவருக்கு உதவும் இந்திய தொல்லியல் ஆராய்ச்சியாளர் வேடத்தில் அமைரா தஸ்தூரும் நடித்து வருகின்றனர்.

ஜெய்ப்பூர்

தற்போது இப்படத்தின் ஜெய்ப்பூர் அருகே அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் ஜாக்கிசான் வில்லன்களுடன் மோதுவது போன்று காட்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜாக்கிசானின் நடவடிக்கைகள் இந்திய ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.
படப்பிடிப்பில்

குறிப்பாக தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்த பின் படப்பிடிப்பு தளத்தில் சிதறி கிடக்கும் குப்பைகளை ஜாக்கிசான் அள்ளிப்போய் குப்பைத் தொட்டியில் போடுகிறாராம். உலக அளவில் பிரபலமான ஒரு நடிகர் குப்பைகளை பொறுக்குவது அவருடன் நடிக்கும் இந்திய நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் வெளியே திரண்டு நிற்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர்களும் ஜாக்கிசானுடன் சேர்ந்து குப்பைகளை அள்ளி படப்பிடிப்பு தளத்தை சுத்தம் செய்து வருகின்றனர். 
கலைஞர்களுக்கு பணம்

இதுதவிர ஒவ்வொரு காட்சியும் முடிந்த பின், அந்தக் காட்சியில் கஷ்டப்பட்டு பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞரை அழைத்து பணமும் கொடுக்கிறாராம். இதைப்பார்த்து நடிகை அமைரா தஸ்தூரும் படப்பிடிப்புக் கலைஞர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறாராம். 





No comments:

Post a Comment