உலகம் முழுக்க வாட்ஸ்ஆப் பயனாளிகள் என்க்ரிப்ட் வசதி பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. புதிய பாதுகாப்பு வசதியின் மூலம் அனைத்து குறுந்தகவல் மற்றும் அழைப்புகளும் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டிருப்பது அரசாங்கம் மற்றும் இதர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
யாராலும் ஊடுறுவ முடியாது' பாதுகாப்பு வளையத்தில் வாட்ஸ்ஆப்.!!
என்க்ரிப்ஷன்
புதிய வெர்ஷன் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எவ்வித கவலையும் கொள்ளாமல் பாதுகாப்பான குறுந்தகவல் அனுப்ப முடியும்.
ஏனெனில் புதிய வெர்ஷன் பயன்படுத்துவோருக்கு என்க்ரிபஷன் வசதி தானாக வழங்கப்படுகின்றது.
எப்படி தெரிந்து கொள்வது?
உங்களது ப்ரோஃபைல் சென்று ஏதேனும் ஒரு கான்டாக்ட்'ஐ க்ளிக் செய்தால் தகவல் பக்கத்தின் கீழ் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யும் தகவல் திரையில் காணப்படும்.
புதிய அப்டேட்
வாடிக்கையாளர்கள் எவ்வித இயங்குதளம் பயன்படுத்தினாலும் வாட்ஸ்ஆப் அப்டேட் செய்து கொள்ள முடியும். ஒரு வேலை உங்களது நண்பர்கள் யாரேனும் அப்டேட் செய்யவில்லை என்றாலும் அதனினை நீங்கள் என்க்ரிபஷன் பகுதியில் பார்க்க முடியும்.
வெரிஃபிகேஷன்
வாட்ஸ்ஆப் செயலியின் தகவல் பக்கத்தில் என்க்ரிப்ஷன் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இங்கு அப்டேட் செய்த அனைவருக்கும் என்க்ரிப்ஷன் ஆப்ஷன் தானாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்ட பின் தாமதமாக அப்டேட் செய்தவர்கள் தங்களது கணக்கினை உறுதி செய்ய வேண்டும்.
குழப்பம்
எனினும் பெரும்பாலானோர் இந்த என்க்ரிப்ஷன் பக்கத்தை இயக்க வேண்டிய அவசியம் இல்லை. என்க்ரிப்ஷன் வசதி பெற்றோருக்கும் அவ்வப்போது சில குளறுபடிகள் ஏற்படுவதாக கூறப்படுவதாகவும் அனைத்து பிரச்சனைகளும் விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான என்க்ரிப்ஷன்
வாட்ஸ்ஆப் செயலியில் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி இந்த செயலியில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும் என்பதால் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியில் பயன்படுத்தும் சிறிய புள்ளிகளை கூட யாராலும் பார்க்க முடியாது. குறுந்தகவல் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே பார்க்க முடியும்.
யாராலும் ஊடுறுவ முடியாது' பாதுகாப்பு வளையத்தில் வாட்ஸ்ஆப்.!!
உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப் செயலி ஆண்ட்ராய்டு, ஐபோன், ப்ளாக்பெரி மற்றும் இதர இயங்குதளங்கிலும் என்க்ரிப்ட் எனப்படும் மறையாக்கம் வசதி முழுமையாக பெற்று விட்டது.
பாதுகாப்பு காரணம் குறித்து வருந்துவோருக்கு இது நற்செய்தியாகும். புதிய வசதியின் மூலம் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு
புதிய வசதியின் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் ஒருவர் அனுப்பிய குறுந்தகவல் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவரால் மட்டும் தான் குறுந்தகவலை பார்க்க முடியும். இதன் மூலம் அனைத்து குறுந்தகவல்களும் பாதுகாக்கப்படுகின்றது.
உறுதி
புதிய மறையாக்கம் வசதி சார்ந்த தகவல்கள் வாட்ஸ்ஆப் இணை நிறுவனர்கள் ஜான் கௌம் மற்றும் ப்ரியான் ஆக்டன் வலைப்பக்கத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு
இது போன்ற மறையாக்க வசதியின் மூலம் குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் பெறுவர் மட்டுமே பார்க்க முடியும். இதனால் மற்ற அரசாங்கம் மற்றும் அமெரிக்க நிறுவனங்களால் கூட வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை பார்க்க முடியாது.
எதிர்ப்பு
இது போன்ற பாதுகாப்பு சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது பின்புற வழியமைக்க வேண்டும் என இங்கிலாந்தில் ஏற்கனவே எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.
துவக்கம்
இந்த மறையாக்க சேவைானது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தனிப்பட்ட தகவல் தொடர்பினை வழங்கும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment